7/21/2007

கூட்டமா வந்து கும்மாளம் போடறேளா?

7/19/2007

கேதரீனாவுக்காய் ஒரு காதல் கடிதம்

















உமிழ்ந்த சாந்திப்பாக்கின்
எச்சில் காய்வதற்குள்ளும்
இன்னொருவன் மணியடிக்க

ஈரமான தூமச்சீலை
ஈரமாகவே இருக்க
மற்றொருவன் குறியரிக்க

நான் என் குறியறுத்து
நீ உன் குறியடைத்து
போலி ஆண்மையும்
கூலி பெண்மையும்
ஒழித்தோடி

எக்குத்தப்பாய் அல்லாமல்
குறிபார்த்து எல்லோர்
முகத்திலும்
எட்டி உதைக்கலாம் வா

7/18/2007

பெண்ணீயம் பேசாதே





















புட்டத்தின் இடையில்
உரசியது
என்னவென்று தெரியாமல்
பிடித்துப் பார்த்தேன்

சிறிது மிருதுவாகவும்
சிறிது கடினமாகவும்
இருந்தது

வீணாய் பொரும மனதின்றி
கொட்டையுடன் பிடித்து
நசுக்கினேன்

கத்தமுடியாது வேதனையில்
சிந்திய அவனது
கண்ணீரில் எனது சுகம்

புலம் பெயர்ந்த சகோதரி "யேனல் அலமேலு" அவர்களின் 'குறியொடிப்பு '
என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து...

7/17/2007

மருத்துவன் அனீப் தீவிரவாதியா?

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரி என்ற நாதாரி எங்கெல்லாம் கலாச்சார விழா என்ற பெயரில் பாலிவுட் டான்ஸ் நடக்கிறதோ அங்கெல்லாம் குண்டியை இருத்தி கைவலிக்க கைதட்டியும் வாய் வலிக்க ஜொள்ளு விட்டும் மட்டும் வருவார் ஆனால் ஒரு இந்தியக் குடிமகனை அதுவும் கெஜட்டட் தர அந்தஸ்து உள்ள ஒரு மருத்துவனை அவுசுதிரேலிய அரசாங்கமானது ஒரு சொறி நாயைவிட கேவலமாக நடத்தியும் ஒரு அறிக்கையோ அல்லது அவுஸ்திரேலிய அரசினை அறிவுறுத்தும்படியான எந்தவொரு வேண்டுகோளும் வைக்க முடியவில்லை.

இந்தியாவில் இருந்த "தடா" "பொடா" சட்டத்தைப் போல் இங்கும் "கண்டாரஓழி" சட்டம் உள்ளது. அதாவது விசாரணைக்கைதியாக எத்தனை வருடம் வேண்டுமானாலும் "பெயில்" இல்லாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கலாம். அதில் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தபட்டும் நீதிபதிகளே கடுப்பாகுமளவுக்கு அலைகழிக்கப்பட்டும் வருகிறார். பாரதப் பிரதமரோ "விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக" செய்தியாளர்களிடம் அறிக்கை விடுகிறார். இங்கு அனீப் குற்றவாளியாகவே இருந்தாலும் கூட இம்மாதிரியான துன்புறுத்தல் மனித உரிமையை மீறும் செயலாகும். அனீப்பின் விவகாரம் அவுஸ்திரேலியாவையே "கலக்கி" வருகிற வேளையில் இந்தியாவில் இது தொடர்பாக எந்தவொரு நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை.

இங்கு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், குற்றம் நடந்த இடம் க்ளாஸ்கோ விமான நிலையம், ஸ்காட்லாந்து. அங்கு கூட அனீப்பின் மேல் குற்றம் பதிவாயிருக்கவில்லை. இங்கும்கூட குற்றஞ்சாட்டப்பட்டிருக்கறாரேயொழிய குற்றம் புரிந்து மாட்டிக் கொண்டவராயில்லை. ஆக என்னளவில் அவர் ஒரு அப்பாவி தான் இன்னிமிடம் வரை. அவர் மேல் எனக்கும் கடந்த வாரம் சந்தேகம் இருந்தது ஆனால் அவுசுதிரேலிய போலிசார் அவர் மீது பதிந்த வழக்கினடிப்படையில் அவர் ஒரு அப்பாவி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதே அடிப்படையிலேயே நீதிபதியும் அனீப்புக்கு பெயில் அளித்து தீர்ப்பு கூறினார். ஆனால் தீர்ப்பு வழங்கிய சில மணித்துளிகளில் அவுசுதிரேலிய விருந்தாளிக்குப் பிறந்த குடியமர்வுத்துறை அமைச்சர் அனீப்பின் விசாவை "நடத்தை சரியில்லதவர்" என்ற ஒரு செல்லாக்காசு காரணத்தைக்கூறி ரத்து செய்துவிட்டார்.

குடியமர்வுத்துறை சட்டதிட்டங்களின் படி ஒருவரின் விசா காலாவதியானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். ஆனால் அனீப் நாடு கடத்த வேண்டுமென்றால் அவர் முதலில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கானது முடிவு பெற சிலமாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட ஆகலாம். ஆகையால் அதுவரை அவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதினால் அவரை சிட்னியில் உள்ள "வில்லாவுட் டிடென்சன் செண்டர்"ல் அடைக்க முடிவு செய்தே அமைச்சர் இம்மாதிரியான பொறுக்கித்தனமான சில்லரைத்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

வில்லாவுட்டில் அடைக்கப்படுவதனால் ஏற்படும் சிரமங்கள்.

1. தற்போது இலவச சட்ட ஆலோசனையும், அவருக்காக வழக்காடிவரும் வழக்குறைஞர் பீட்டர் ரூஸோ பிரிஸ்பர்ணில் இருக்கிறார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் வழக்குறைஞருக்குமான தொடர்பை வெகுவாக குறைத்து அனீப்பை தனிமைப்படுத்தலாம்.

2.ஒவ்வொரு முறையும் பிரிஸ்பேனுக்கு அழைத்துவரப்பட்டு தான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியும். இதனால் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கொரு முறை தோன்றுவது சாத்திய்ப்படாததலால்
சிலமாதங்களுக்கு ஒருமுறை வரும்படி வழக்கை கால விரையப்படுத்தலாம்.

அரசாங்கத்தினருக்கு ஏற்படும் "மலிவு" நன்மைகள்

1.அடுத்த வருடம் நடைபெற இருக்கிற பொது தேர்தலில் தற்போதைய "ஹோவர்டு" தலைமையிலான ஆளும் கூட்டணி கண்டிப்பாக மண்ணைக் கவ்வுவது உறுதி என்ற அடிப்படையில் பார்த்தால் "தீவிரவாத அச்சுறுத்தல்" என்ற பெயரில் யாராவது ஒரு அப்பாவியை பலிகிடாவாக்கி ஒரு சில சில்லரை ஓட்டுக்களை அல்லலாம். ( A cheap old scare tactic used by Bastard Bush jr.)

2.எதிர் கட்சியான "கெவின் ரட்" தலைமையிலான "லேபர் பார்ட்டி"யும் அதனடிப்படையிலேயே அரசாங்கத்தினருக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவர்களின் செயல்களை ஆதரிக்க முனைந்துள்ளனர்.

முடிவு

எப்பாடுபட்டாவது அடுத்தவருடத்திற்குள் அனீப்பை ஏதாவது ஒரு குற்றஞ்சுமத்தி பலிகிடாவாக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

இதெல்லாம் அடுத்தவருடத்திற்கான தேர்தலை முன்னிருத்தி நடக்கிறதென வைத்துக்கொண்டாலும் இந்திய அரசாங்கம் ஒரு இந்தியப் பிரஜையின் தனி மனித உரிமையை காக்கவும், அவன் நல்லவன் தான் என நிரூபிப்பதற்கு எவ்விதத்தில் அவனுக்கு உதவியுள்ளனர் என்று தெரியவில்லை. கன்சு"லேட்" ஜெனரல் கனபதி அவர்கள் யாருடைய மயிரைப் புடுங்கிக் கொண்டிருக்கிறாரென எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

அனீப்பின் ஒரே தவறு.

பயம் காரணமாக அவசர அவசரமாக ஊரைவிட்டு வெளியேற முயன்றது தான்...:((

தொடர்பான இணைப்புகள்

Haneef visa revoke full copy

Haneef bail delay option

outraged prominent lawyer

bail then jail

where is the justice for Dr.Haneef

7/16/2007

ஏ அஜக்தா...எங்களாண்டேவா...

பின்னூட்டமிடக் கூட நேரமின்றி வெறும் மேய்ச்சலோடு நிறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழ்மணம் எல் எல் சி யிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதாவது தமிழ்மண வாசிப்பில் என்ற தலைப்பில் பூங்காவுக்காய் நான் எழுத வேண்டுமென்று...கொஞ்சம் நகைச்சுவையான விடயம்தான் என்றாலும் தமிழ்மண குசினி அரசியலில் மீண்டும் தலைகொடுத்து வால்வெட்டிக் கொள்வதில் நாட்டமில்லை என்பதாலும் மீண்டும் அவர் எழுப்பப்போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு என்னுடைய பணிப்பளு இடம் கொடுக்காது என்பதாலும், நான் பதிவெழுதி சில வாரங்கள் ஆகிறதென்பதாலும் சொந்த செலவில் சூனியம் வைக்கும் நப்பாசை மீண்டும் துளிர்த்ததாலும் கடந்த வார தமிழ்மண வாசிப்பு ஓரளவு சுவாரசியமாகவே இருந்தது.

கடந்த வாரத்தின் முற்பகுதியில் பிரபல பத்திரிகையாளர் மாலனின் எட்டியவரைக்கும் ஒரு எட்டு என்பதில் அவர் தம்முடைய அனுபவங்களையும் தமிழிணையப்பிதா மற்றும் அது தொடர்பான பெயரிலியின் விட்டதைத் தொட்டப் பதிவும் அதைத் தொடரும் பின்னூட்டங்களும் ஒரு சுவாரசியமான விடயம். அது சங்கிலித்தொடர் போல இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எது என்னவோ இன்று நானும் இங்கே குப்பை பொறுக்குவதற்கும் பொறுக்கியதை கழிவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இணையத்தமிழின் மூத்தோர்களுக்கும் இன்னபிற பெயரறியா சிறியோர்களுக்கும் நன்றிகள்பல. என்னதான் கண்டுபிடிப்பு பெரியதாயிருந்தாலும் தமிழிணையத்தை செதுக்கிய யாருக்கும் வேர்ல்டு வைட் வெப்"பின் நாற்சந்தியில் சிலைவடித்து பட்டாபிசேகம் செய்ய இயலாது என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் அவர்கள் இத்தோடு நிறுத்தியிருந்தால் சுமுகமாயிருந்திருக்கும். ஆனால் வலைப்பதிவு சுதந்திரக் கொட்டையை நசுக்கும் விதமாக தேவையொரு திரட்டி என்ற ரீதியில் எழுதப்பட்ட பதிவும் அது தொடர்பான செல்லாவின் ரீஜண்டான பதில்களும் டண்டனக்கா தான். மாலன், அச்சுலக ஆசிரிய ஆதிக்க மனோபாவத்தை தமிழ்வலையுலகத்திலும் புகுத்தி "இண்டெலெக்சுவல்" பீடத்தை அமைக்க முயல்கிறாரோ எனத் தோன்றியது.

அடுத்ததாக வாசி,வாசி என்று அடச்"சீவாசி" திரைப்படத்தின் விமரிசனங்கள் குப்பைகளை விடவும் கேவலமாக தமிழ்மணத்தில் மணத்துக் கொண்டிருந்த வேளையில் ஈயத்தோடு கொஞ்சம் தங்கத்தையும் இழைத்து லட்சுமி அவர்கள் ஒரு வாதத்தைத் துவக்க, மோகன் தாஸ் அதற்கு தீவிரமான நகைச்சுவையோடு விளக்கம் தர அதற்கு மீண்டும் லட்சுமி பதில் கொடுக்க ஒரே கும்மிதான். தமிழ் திரைப்படங்களில் அதுவும் ரஜினியின் படங்களில் கதாநாயகியை முட்டாளாகவோ அல்லது ஒரு அல்லக்கையாகவோ வரும் வெறும் பாடலுக்கான சதைப்பிண்டங்கள் தான் கதாநாயகிகள். இதையறியா சிற்றிளம்குழந்தையா லட்சுமி அவர்கள்? ஆக தீவிரமாய் இருந்த இவ்விவாதம் ஆசிப் மீரானின் அவரது பாணியிலான இன்னொரு ஈயத்தினால் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி.

கடந்த வாரத்தின் அசுரனின் வீரமணி மாமா பதிவில் தொடங்கி, வரவணை அசுரனை சந்தித்தேனில் வளர்ந்து இவ்வாரம் குழலியின் கம்மூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவும் ஸ்டாலினின் எதிர்வினையும் விவாதம் வளர்வதையும் பலரறியா இயக்கச் செய்திகள் தோழர்கள் மூலமாகவும், திம்மிகள் மூலமாகவும் முரண்டுபட்டு சண்டைக்காளைகளாய் முட்டிக்கொண்டிருக்கின்றன.

செல்வேந்திரனை பின்னூட்டங்கள் வழிதான் தரிசித்திருந்தாலும், அவரது நட்சத்திர வாரத்தில் அவரது எழுத்துக்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காகவாவது வாசிக்க முடிந்தது. மிகவும் நேர்த்தியாகவும் பல்சுவையோடும் இருந்தன. ஆனாலும் மார்க் போடச் சொல்லிக் கேட்டது தேவையில்லாதது என எனக்குப்பட்டது. மனித உரிமை ஆர்வலரும் சக ஊராரும் பதிவருமான புதுவை கோ. சுகுமாரனின் நேர்காணல் வெகுசன ஊடகமான ஆனந்தவிகடனில் வெளிவந்ததும் அது தொடர்பான விவாதம் செல்வநாயகியின் பதிவில் நடந்துவந்ததும், கடந்த ஆண்டில் மேதாபட்கரை ஒரு பதிவர் குழு சராமாரியாக இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் எனப் போலிக் குற்றச்சாட்டுகளை ஊகங்களினடிப்படையில் வெளியிட்டதும் அது தொடர்பாக ஒரு பொதுநலன் வழக்கு புஸ்வானகிப்போனதைப் பதிவு செய்ததும் கடந்தவார வாசிப்பில் மனதில் பதிந்தவையாகும்.

7/02/2007

சாம கால பூஜைகள், பஜனையுடன்...


நன்னா சாஷ்டாங்கமா வுழுந்து சேவிச்சுக்கோங்கடா அம்பிகளா....

6/27/2007

Me, Myself & Maggie























அவ்வப்பொழுது "The Strand"செல்லும் பொழுதும், Water Mark ல் க்ரில்டு டாஸ்ஸி சால்மோனோடு சிப்ஸை வெட்டும் பொழுதும் அவளை தூரத்தில் இருந்தே ரசித்திருக்கிறேன். நல்ல வடிவான பெண் அவள். உருண்டு திரண்ட அங்கங்களும்,ரம்மியமான உடல் வலைவுகளும் பார்ப்பவர் எவரையும் மயக்கிவிடும் காமத்து பைங்கிளி அவள். அவளை எப்படியாவது அனுபவித்துத் தீர வேண்டும் என்று என் மனதில் காமத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிட்டியது ஆனால் எனக்கோ அவளைத் தனியாக அணுக பயம் அல்லது கூச்சம். ஆகையால் என்னோடு துணைக்கு யாராவது வருகிறார்களா என எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தேன். அவர்களுக்கும் ஆசை இருந்ததேயொழிய அனுபவிக்கத் தேவையான மனோதிடமில்லை. ஆதலால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திட்டமிட்டு என்னை தயார் செய்து கொண்டேன். மூன்று நாள் மூச்சு முட்ட அவளை அனுபவித்தேன். குடி,கும்மாளம், என்று எனக்கும் ஓய்வில்லை, என்னை திருப்திபடுத்த வேண்டுமென்பதற்காக அவளும் அதிக சிரத்தை எடுத்து என்னை பக்குவமாக பார்த்துக் கொண்டாள். முடித்துவிட்டு திரும்பும் பொழுதுதான் தெரிந்தது அவளை அனுபவிக்க மூன்று நாட்கள் போதாது குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தேவை என்று.

அடைவது எப்படி?
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பேன், மெல்பர்ணிலிருந்து டவுன்சுவில்லுக்கு "ஜெட்ஸ்டார்"ம் அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரிச்சர்ட் ப்ரான்சனின் "வெர்ஜின் பளூ"வும் பறக்கின்றன. டவுன்சுவில்லிலிருந்து காலை 5 மணி தொடங்கி இரவு 9 மணிவரை பயனியர் படகுகள் ஒரு மணிக்கு ஒன்று வீதம் இயங்குகின்றன. எவ்வித வாகனமுமின்றி ஒண்டிக்கட்டையாய் பயனிக்க விரும்பினால் 12 நாட்ஸை 20 நிமிடங்களிலும்
வாகனங்களோடு செல்ல விரும்பினால் 35 நிமிடங்களிலும் அடையலாம்.

அனுபவிக்க?
பல கடற்கரைகளும், உள்ளூரில் பயனிக்க "மோக்"(மொக்கை அல்ல) கார்களும், 50 சிசி ஸ்கூட்டர்களும், மலைப்பாதைகளுக்கு வாகான இலகு மிதிவண்டிகளும் வாடகைக்கு
எடுக்கலாம். ஒரு சில கடற்கரைகளே வாகனங்களினால் அடைய முடியும் வகையில் இருப்பதால் புதர்களினூடாக நடந்து "சில பல" ஆள் அரவமற்ற ஆனால் அழகான கடற்கரைகளில் எவ்வித தொந்திரவுமின்றி நிர்வாணக் குளியல் போடலாம்.

சில உபயோகமான இணைப்புகள்:
www.magnetic-island.com.au
www.MagneticIsland.com.au
www.magneticislandferry.com.au
www.basebackpackers.com/MAGGIE.htm
www.bungalowbay.com.au

6/26/2007

அழகிய அசுரா...



என்னவோய் பன்றது...பெரியார் பேர் சொல்ற புள்ளையாண்டானுங்க எல்லாருமே மாமா பயலுவ தான்...அதான் தோழர்கள் எல்லாரையும் சாந்தப்படுத்த நம்ம பெங்களூரு அயிட்டமான செரினோட இந்த பாட்ட அசுரன் அய்யாவுக்கு டெடிக்கேட் பண்ணறோம்.

பிகு: மீன் குஞ்சுகள் கூட்டமாய் நீந்துவதை "டவுன்பஸ்" என்றழைப்பதுண்டு அதே போல் அந்த குஞ்சுகளில் ஒன்றாய் கருதி இப்பதிவினை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம். போன் நம்பர் போட ஆசையா தான் இருக்கு ஆனா அந்த மசுருபுடுங்கி தோழர்கள் உண்டிய குலுக்கியதில் ISD போட்டு என்னை கலாய்க்க முடியாது என்ற நம்பிக்கையில் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

5/31/2007

அழுகாச்சி தாங்கல...:((




நீங்களும் என்னோட சேர்ந்து ஒப்பாரி வையுங்க...

சந்தேகங்களை பின்னூட்டங்களில் பறையவும்...

5/30/2007

What the f***?

வானர சேனைகளுடன் பாலம் கட்டிய ராமர், பின்னர் அந்தப் பாலத்தை அம்பெய்தி அழித்து விட்டார் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ராமர் பாலம் என்ற ஒன்றே இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பாலம் இன்னும் இருக்கிறது. அதை உடைத்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து கட்சிகளும், அமைப்புகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில் ராமர் பாலத்தை இடிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனும், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இன்று சுவாமி மற்றும் ராம.கோபாலன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ன. முதலில் சுவாமி மனு விசாரணைக்கு வந்தது.

சுவாமியே தனது வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினார். அவரது வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அந்த வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ராம.கோபாலன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனு மீது மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட 5 துறைகளின் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில் பாலம் கட்டிய ராமர் பின்னர் அதை அழித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் மனுக்களின் சாராம்சம்

இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய ராமர், பிறகு தனது வில்லிலிருந்து அம்பை எய்து தான் கட்டிய பாலத்தை அழித்து விட்டதாக தமிழக அரசின் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்போது அந்தப் பாலம் இல்லை. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறும் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ராமர் பாலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனையான பாலம்தான். ஆதம் பாலம் என்பது மணல் திட்டுக்களே ஆகும். அது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் அல்ல.

பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே சேது சமுத்திரத் திட்டம் இறுதி செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் ராமர் பாலமே கிடையாது என்று கூறி வந்த மத்திய அரசு இப்போது, பாலம் இருந்தது, ஆனால் அதை ராமர் அழித்து விட்டார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தட்ஸ்தமிழ் இணையதளத்தில் திருடிய செய்தி.

***

நீதிமன்றங்களில் படித்த பன்னாடைகள் தான் நீதிபதிகளாக இருக்கின்றனவா? இதையெல்லாம் ஒரு வழக்கென்று அனுமதித்து இருக்கும் நீதிபதிகளே உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக்கொள்ளுங்கள்.

ஆடுடா ராமா ஆடுடா ராமா என்று குரங்காட்டி கம்பை ஆட்ட சொக்கா போட்ட குரங்கு குட்டிக்கரணம் அடிக்கக் கண்டிருக்கிறேன். இங்கே ஒரு குரங்கு மத்திய அரசின் வழக்கறிஞராம் அது கருப்பு சொக்காய் போட்டுக் கொண்டு இவ்வாறெல்லாம் குட்டிக்கரணம் அடிக்குமென்று நான் அறிந்திருக்கவில்லை. இந்த கருமாந்திர எழவிற்கு தான் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு நூலகத்திற்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்தாரா?
மத்திய அரசும், அதன் அமைச்சும் அதன் சார்பாக வாயாடியவர்களும் உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்.

கடைசியாக நான் ஒரு குண்டியன்...சே...இண்டியன் என்று கும்மியடிப்பவர்கள் உரக்க சொல்லுங்கள் ஜெய்கிந்த்.

அப்படியே சொல்லி முடித்ததும் நீங்களும் உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்.

அடத்தூ...இது நான் இந்தியன் என்பதற்காக என் ப்லொக்கில் நானே துப்பிக்கொள்கிறேன்.

5/16/2007

இந்த கழுதைக்குப் பெயரில்லை



தமிழிணையத்தின் கெட்ட கிசுகிசுக்களுக்கும், "I பீ "ஆராய்ச்சியின் முன்னோடிகளில் ஒருவரான புலம்"பீத்தின" தற்போது செய்வதற்கு யாதொரு பணியுமில்லாமல் தமிழ்கோமணத்தை ஒரு நாளைக்கு 24+ மணி நேரமும் கணினியினுள் தலைகவிழ்த்து கட்டிக்காக்கிற கூடிய விரைவில் மனநோயாளியாகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்ற ஒரேயொரு மூத்த(ர) பதிவருக்கு இதை முகத்தில் எறிகிறோம்.

பின் குறிப்பு: அடுத்த முறை கட்டுரை பின்னூட்டங்கள் எழுதும் பொழுது தமிழ்வெளியின் ஹைப்பர் லிங்க் போட்டு விளம்பரம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கு தான் வேலை கிடையாதே வெட்டியாய் கிருக்குகிற நேரத்தில் உருப்படியாய் ஒரு காரியமும் செய்வதற்கான உந்துதலுக்காகத்தான்.

4/30/2007

எனது தலைக்குறியும், சுவைக்க விரும்பிய முகமூடியும்


Beware of Obscenity














அடிக்கடி அடிவருடியதில்
களைத்துப் போயின
எனது கைகள்

களைத்த கைகளுக்கு
ஓய்வுகொடுக்க
கிழிந்த கால்சட்டையின்
துவாரத்தில்
எனது தலைக்குறியை
தொங்கவிட்டு
சட்டியில் ஒன்னுக்கடித்தேன்
பாலகனாக மாறி
தூரத்தில் அதைசுவைக்க
காத்திருந்தன முப்பது
நாய்கள்

ஆனால் முந்திக்கொண்டதோ
நாய் "முகமூடி"யணிந்த
முகமூடி ஒன்று.

You Can't stand me mate, Please fuck yourself.

4/28/2007

இன்னுமொரு முறை...ரிப்பீட்டே...


என்றும் "சிங்கம்" நீ ஒருவன் தான்...


உன்னிடத்தை நிரப்ப இன்னும் ஒருவன்
பிறக்கவில்லை, இவ்வுலகத்தில்...

OH DEAR,
WE WILL MISS YOU!

BOYS WILL DO IT ONE MORE TIME, JUST FOR YOU SWEET...

GO AUSSIE...

4/24/2007

நானும் பட்டைய போட்டுட்டேன்...



நாளை பொது விடுமுறை...அதனால் நானும் பட்டை போட்டுவிட்டேன்...

4/18/2007

"பால" மகரிஷி அழைக்கிறார்- ஏப்ரல் 22, நடேசன் நந்தவனம்


4/14/2007

கும்மி என்பது கொண்டாட்டம்

கும்மி என்பது கொண்டாட்டம் என்று செஞ்சட்டையணிந்த செஞ்சிப்பாய் காரல் மார்க்ஸ் வழிவந்த உப்பளத்தின் வெக்கைகளில் வளர்ந்த திராவிடத்திம்மிகள் கூடி நின்று குடித்து களித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கையிலே செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உலகப்பொதுமறையைப் படைத்த வான் புகழ் வாசுகியின் கணவன் ஈர்க்குச்சியால் சோற்றுப்பறுக்கைகளை பொறுக்கும் பொழுது எழுதிய தமிழுலகின் இணையத்தை எந்தஒரு மொழியையும் விஞ்சிய ஈகலப்பையில் உழுது அரசியல், காமம், கதை, கட்டுரையென எழுதி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் எந்த விதமான எழுத்தாக இருந்தாலும் தனக்கென்று அடையாளமிருந்தாலும் விளிப்பிலியாக வந்து மென்பொருள் வல்லுனர் தொடங்கி பத்திரிகை ஆசிரியர் வரை அனைவரையும் ஒரு சேர கும்மியடித்து ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் அனானி கும்மிகளுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களுடன் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அவுசுதிரேலியாவின் வடகிழக்கு கோடியிலிருந்து சோழமன்னன் வென்றெடுத்த சிங்கபுரத்துக்கு வானூர்தியில் அடியெடுத்து வைத்த பொழுது இப்பயனத்தின் வெற்றி சோழன் வென்றெடுத்ததைவிடப் பெரிதானது என்று நானறிந்திருக்கவில்லை. நம்முடைய வருகையையொட்டி சிங்கபுரத்தில் இளஞ்சிங்கங்கள் இப்படியாதனதொரு வரவேற்பைத் தருவார்களெனவும் நானெதிர்பார்த்திருக்கவில்லை. ஏற்கனவே சிங்கபுரத்தின் கட்டுப்பாடுகளையெல்லாம் அறிந்திருந்தபடியால் சிங்கப்பூரின் அரசியல் சுனாமி இளஞ்சிங்கம் குயிலியின் பதிவில் ஆனந்த கும்மியடித்த அனானி சிங்கத்தின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில் இங்கிருந்து கொண்டு சென்ற எக்ஸ்டசி, ரெட் மிட்சுபிஷி,ஐஸ் ஸ்பீட் போன்ற வஸ்த்துக்களை சிங்கையின் விமானகத்தின் கழிப்பரையிலேயே கழுவிவிட்டு தோழன் வரவணையானுக்காக வாங்கி வந்திருந்த "ஹாலிடேஸ்" 50ஸ் பாக் ஒன்றும், பண்டி(பண்டாபர்க்) ஒரிஜினல் ற்றிப்புள் ஃபில்டரோடும் அழகியபுலி தோழி யானாவுக்காக வாங்கிச் சென்றிருந்த டேய்லர்ஸ் ப்ரூட் ரெட்டுடனும் சிவப்பு பரிசோதனை வாயில் வழியாக செல்லவிருந்த பொழுது, இன்னுமொரு அழகிய பென்சிங்கம் என்னருகில் வந்து என்னுடைய வருகையையொட்டி
இன்று சிங்கை விமானகத்தில் குவாரண்டைன் விலக்கப்பட்டிருப்பதாகவும் நான் எவ்வொரு சோதனையுமின்றி வெளியே செல்லலாம் என்று கொஞ்சு தமிழில் கெஞ்சியதில் சிங்கபுரத்தின் ஆனந்த கும்மி நன்றாகவே விளங்கியது.

வாசலில் குழலியுடன் அவரது நண்பர் ஒருவரும், என்னுடைய சகோதரனும் எனக்காக காத்திருந்தனர். குழலியின் நண்பர் என்னிடம் "ஓ நீங்க தானா அந்த அக்யூஸ்டு" என்றொரு அருமையான வரவேற்புடன் வரவேற்றனர். அதற்குள்ளாகவே குழலி தன்னுடைய சாம்சங் கம்பெனி ப்ராடக்டான ஒரு டுபுக்கு போனில் என்னுடைய படத்தை எடுத்து பதிவில் போட்டது வேறொரு கதை. வாசலில் குழலியிடம் விடைபெற்றுக் கொண்டு எனது அண்ணனோடு ஓட்டலுக்கு பயனமானோம். அதன் பின் நடந்த குத்தாட்டங்களும் குடியாட்டங்களும் தனிக்கதை. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்.

இதற்கிடையில் ஒரு 9 முறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொல்ல முயன்று தோல்வியடந்த குழலி சிங்கை போலிஸில் நான் காணாமல் போய்விட்டதாக புகாரும், தமிழ்மண தமிழிணையத்தில் அறிவிப்பும் செய்திருந்தபடியால் அனைத்து சிங்கை "மகிழ்வுந்து" ஓட்டுனர்களும் ஒரு மாதிரியாகவே என்னைப் பார்த்தனர். இடையே ஒரு டிராபிக் சிக்னலில் (ரேஃபல்ஸ் சிட்டி டவர் அருகில்) சிங்கை போலிஸார் வாகனங்களை நிறுத்தி சோதனைப் போட்டதைக் கண்டு அலறிய நான் "கேப்" டிரைவரிடம் ஒரு 10 டொலர் நோட்டை நீட்டி "கீப் த சேஞ்ச்" என்று உறுமிவிட்டு கட்டண தொலைபேசியை நோக்கி ஓடினேன். இது நடந்தது சனிக்கிழமை
காலை பத்து மணி. ஓடிய வேகத்தில் சறுக்கியதில் என் கண்ணெதிரில் நான் கண்டது இன்னுமொரு சிங்கையின் அழகு தேவதை. அவள் என்னைப்பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்க்க அதில் அடிசறுக்கிய நான் வந்த நோக்கத்தை மறந்து அவளைப் பின் தொடர்ந்தேன். அரை பர்லாங் பின் தொடர்ந்ததில் என் மேல் பரிதாபப்பட்டு ஸ்டார்பக்ஸுக்கு அழைத்துச் சென்றாள். பின்னர் அவளது செல்பேசியை வாங்கி குழலிக்கு பேசி "சிம்லிம் டவர்"ல் நாண்கு மணிக்கு சந்திப்பதாக உறுதியாயிற்று. அதன் பின் அந்த அழகு தேவதை ஒரு வழிகாட்டியாக மாறி சிங்கையின் புகிஸ், ரிவர் சைடு, எஸ்ப்ளானேட் என்று சுமார் 6 மணி நேரம் என்னோடு ஸ்பெண்ட் செய்ததும் தனிக் கதை.

முடிவில் நாண்கு மணியளவில் குழலியும் அவரது நண்பரும் வந்து சேர, பின்னர் ஜோ, எல் எல் தாசு, சிங்கை நாதன், வடுவூர் குமார்,கோவி கண்ணன் மற்றும் அவரது நண்பர் போலீஸ் 007 என்ற பதிவர் என்று அய்ந்து மணியளவில் அனைவரும் வந்துசேர அனானிகளின் ஆனந்த கும்மி ஆரம்பமாகியது. இடையில் நாடு கட்டிய நாயகனின் ஒரிஜினல் ஆசிரியர் எம்கே குமார் அவர்களிடமும் தொலைபேசினோம். அவர் பணியில் இருப்பதால் சந்திக்க இயலாதென்று கூற 7 மணிக்குத் திரும்ப அழைப்பதாக கூறிவிட்டு அனானிகளின் கலாய்ப்புகளை ஆரம்பித்தோம். நான் அன்று சந்தித்த எவரின் முகத்தையும் பார்த்ததில்லை(வடுவூர் குமார், எல் எல் தாசு தவிர). இதனால் எழுத்து தொடர்பான முன்முடிவுகள் இல்லாததாலும் எழுத்தரசியல் பேசி என்னுடைய பொன்னான நேரத்தை விரயப்படுத்த விரும்பாததாலும் அனானிகளின் சமீபத்திய "பவர்" பற்றியும் அவர்களின் நகைச்சுவையுணர்வையும் விரிவாக அலசிக் கொண்டிருக்கையில் பயந்த சுபாவத்துடன் ஒரு அப்பாவி அனானி நான் தான் உங்கள் அனைவரோடும் பிறக்காத உடன்பிறப்பு என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை சகஜ நிலைக்குக் கொண்டுவர சிறிது நேரமானதென்னவோ உண்மை தான்.

இடையே நாண்கு கோப்பி குடித்ததும் ஒரு பாக்கெட் மால்பரோ அடித்ததும் எனக்கு அளவுக்கு மீறிய சக்தி அபரிதமான அளவில் ஏற அனைவரையும் கலாய்க்க ஆரம்பித்தேன். இடையில் ஒருவர் நான் இதுவரை அனானி பின்னூட்டம் போட்டதில்லை என்று சாதிக்க அப்படியென்றால் உங்களுக்கு தமிழ் பதிவெழுதும் தகுதியே இல்லை என்று நான் கூற, இன்றிரவே ஒரு பத்து கமெண்டு போடுகிறேன் என்று காற்றில் சத்தியம் செய்ய., நான் பத்து நிமிடத்தில் எப்படி பத்தொன்பது காமெண்ட் போடுவது என்று இலவசமாக டிப்ஸை வாரி வழங்கியதில் அனைவரும் அன்றைய அமுக அவுசுதிரலாசிய தலைக்கிளை கழகத்தின் மாநாட்டின் எஜெண்டா பூர்த்தியடைந்ததாக அறிவித்ததில் எனக்கு மற்றுமொரு மாநாடு சக்கரவர்த்தி நைட்கிளப்பில் அன்றிரவு இருந்ததால் அனைவரிடமும் நன்றியும், குட் பையும் சொல்லி விடைப்பெற்றுக் கொண்டு அவுசுதிரேலியா திரும்பினேன்.

ஐ மிஸ் யு ஆல்! மைட்ஸ்...

3/31/2007

POOFTHAS

விட்டாக்கா ஒருத்தனுக்கு கீழ ஒருத்தன் வாய வெச்சி கொஞ்சுவானுங்க போல...

படம் நேற்றைய "தி இந்து"வில் இருந்து திருடியது.

3/18/2007

விடாது சிகப்பு

அடடா...அடடா...
தமிழ்மணத்தில் இருந்து விடாது கருப்பு, ஏமாறாதவன், இரவுக்கழுகார், விட்டுது சிகப்பு ஆகியோர் விலக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் அழுவுணிகளும், சண்டியர்களும் இனி சண்டையிடுவதோ அல்லது மண்டியிடுவதோ எவ்விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை என்கிறபடியாலும், கவாஸ்கர் - பாண்டிங் சர்ச்சை மிகவும் நாகரிகமான நகைச்சுவை கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இதில் இவன் செய்தது நியாயம் அவன் செய்தது அநியாயம் என்று சொல்லுவது சில குஞ்சுகளுக்கு உவப்பாய் இருந்தாலும், இதில் கவாஸ்கர் தன் சுயத்தை நக்கி மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

நான் அவுஸ்திரேலிய அணியின் விசிறியாயிருந்தாலும், போண்டிங் கின் சமீபகால நடவடிக்கைகள் பிடிக்காததாலும், அவுஸ்திரேலிய அணியின் ஏகாதிப்பத்தியம் சமீபத்தில் வீழ்ந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது நாள் வரை ஒரு சாதாரண மாகாண அவுஸ்திரேலிய அணி கூட மற்ற நாடுகளின் தேசிய அணியை மண்ணைக் கவ்வ வைக்கும் என்கிற அதீத நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. அதன் பின்னரான கவாஸ்கரின் செவ்வியும் அதற்கு போண்டிங் கின் பதிலும் இந்தியாவில் மட்டுமே சலசலப்பை ஏற்படுபடுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அவுஸ்திரேலிய மக்கள் அதை ஒரு பொருட்டாக மதித்து அவ்வளவாக கதைப்பதில்லை. இதில் மூக்குடைப்பட்டவர் கவாஸ்கர் மட்டும் தான் என்பது ஊரறிந்த உலக ரகசியம். அடிபட்ட நாய் எட்டிச் சென்று வனாந்திரத்தில் குரைப்பது போன்று, கவாஸ்கரின் இரண்டாம் கட்ட பதில் உள்ளது. கவாஸ்கர் டேவிட் ஹூக்*ஐ பற்றி அதிகம் அறிந்திருப்பாரா அல்லது அவரது உயிர்பிரிந்த துயரமான சம்பவத்தை அறிந்திருப்பாரா என்பதும் சந்தேகமே!

கலாச்சாரம், மயிரு, மண்ணாங்கட்டி என்று பேசும் இந்தியத் திருநாட்டில் பிறந்த கவாஸ்கர் இறந்து போன ஒருவரை தூற்றியிருப்பது அவர் இப்பொழுது இருக்கின்ற இருப்பிற்கு உகந்ததாயில்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இங்கு கிரிக்கெட் வீரர்களோ அல்லது இன்னபிற நட்சத்திரங்களுக்கோ 5* தரமளித்து தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதில்லை. இந்தியாவில் இம்மாதிரியான நட்சத்திரங்கள் செல்லும் கள்ளுக்கடைகளுக்கு சாதாரணமாக குடியானவர்கள் செல்லமுடியாது. அப்படியே சென்றிருந்தாலும் அவ்வாறு ஒரு கிரிக்கெட் வீரரை அடிக்கும் அளவிற்கு துணிவிருக்காது இந்திய தேசபக்தர்களுக்கு. சமீபத்தில் கூட யுவராஜ் சிங் குடித்துவிட்டு செய்த கலாட்டாக்கள் செய்தியாக வந்திருந்தது. ஆக வழக்கம் போல் வெளியில் கலாச்சார கருமாந்திரம் பேசிவிட்டு இரவில் அவுத்துப் போட்டு ஆடுபவர்கள் தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.


ஆக கிரிக்கெட் தான் எங்களது ரிலிஜியன், சச்சின் தான் கடவுள் என கொக்கரிக்கும் அரைவாண்டுகளும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அய் சி சி யின் பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதன் அவனது இருப்பை விட்டு இறங்கி வந்து ஒரு அணியின் காப்டனிடம் சரிக்கு சரியாக சண்டை போடுவது நன்றல்ல. இதனால் பி சி சி அய் க்கு தான் நட்டமேயொழிய் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிற்கு அல்ல. இந்திய தேசிய ஜல்லிகள் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களை கண்டு சலித்துவிட்டதால் அவுஸ்திரேலியாவிடம் அதிக ஆட்டங்கள் ஆடினால் நன்றாக வசூலாகும் என்ற கனவிலிருக்கும்பொழுது கவாஸ்கரின் இந்த அரைவேக்காட்டுத் தனமான உளறல்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தப்போவதில்லை. மாறாக வெறுப்புணர்ச்சியை தான் வளர்க்கும்...இங்கு ஏற்கனவே சில அரைவேக்காடுகள் கவாஸ்கர்-பார்டர் டிராபி என்ற பெயரிலிருந்து கவாஸ்கர் பெயரை நீக்க வேண்டுமென கூவ ஆரம்பித்துவிட்டன.


சரிவிடுவோம்...அதற்கும் இப்பதிவிற்கும் சம்மந்தம் இல்லை...


அடுத்ததாக நான் ஆவலோடு எதிர்பார்த்த ரக்பி லீக் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன இங்கு. நடப்பு சாம்பியனான பிரிஸ்பேன் ப்ரோங்க்கோசும், நம்மூரின் கவ்பாய்ஸும் நேற்றைய துவக்க ஆட்டத்தில் மோதினர். கடந்த நாண்கு ஆண்டுகளாக பிரிஸ்பேன் ப்ரோங்கோசு விசிறிதான் என்றாலும் நம்மூரின் கவ்பாய்ஸை விட்டுக்கொடுக்க முடியாத நிலை. போட்டியின் ஆரம்பம் முதல் கவ்பாய்ஸின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.பிரிஸ்பேனின் முதல்பகுதி ஆட்டம் நடப்பு சாம்பியன் அணி ஆடியது போல் இல்லை. விளைவு கவ்பாய்ஸ் 16-6 புள்ளிகளில் முன்னணி பெற்றிருந்தார்கள். ஆனால் பிரிஸ்பேன் அணியினரின் மீள்வருகை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கடந்த வருட அரையிறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் அணியினர், கேண்டர்பரி புள்டாக்ஸுடனான போட்டியில் 0-20 என்ற புள்ளியளவில் ஆட்டத்தின் முதல்பாதியில் பின் தங்கியிருந்தனர்.ஆனால் அடுத்தப் பகுதியாட்டாத்தில் 28-20 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றனர். அதுமாதிரி இப்போட்டியையும் வென்று விடுவார்களெனவே நானும் நினைத்திருந்தேன். அதே போல் ஆட்டம் முடிய கடைசி நிமிடம் வரை 16-16 என்ற சமன்பாட்டிலேயே இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மேட் போவெனின் ற்றையும் அதற்கடுத்து கடைசி வினாடியின் கள கோலும் 23-16 என்ற அளவில் கவ்பாய்ஸ் வெற்றி பெற்றிருந்தனர்.

அதற்கடுத்ததாக மெல்பர்ன் ஸ்டார்ம்ஸின் சிட்னி வெஸ்ட் டைகர்ஸ்க்கு எதிரான வெற்றி. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 18-16 என்ற அளவில் மெல்பர்ன் வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு வரை பிரிஸ்பேன் தான் புது டீன் ஏஜ் மிருகங்கங்களை களத்தில் இறக்கி விடும் அணியாகவும், டீம் டு பீட் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கும். ஆனால் அதை இவ்வாண்டு மெல்பர்ன் ஸ்டார்ம்ஸ் எடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சில துரதிர்ஷ்டமான முடிவுகளால் தோல்வியைத் தழுவிய மெல்பர்ன் இவ்வாண்டு அதிர்ஷ்டமாக இருக்குமென நம்புவோம்.


அட இதுவும் பதிவிற்கு சம்மந்தம் இல்லை...


அடுத்தபடியாக நேற்றே மெல்பர்னில் தொடங்கிவிட்ட F1 திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் எம்மாதிரியான சூழ்நிலையிலும் தவறாமல் கலந்துகொள்வேன். இவ்வாண்டு சிலபல பிரச்சினைகளால் செல்ல இயலவில்லை. அதுவுமல்லாமல் "தல" சூமேக்கர் ஓட்டாததும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் இவ்வருடம் ரெய்க்கனன்னுக்கு சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன். வழக்கம் போல இன்றைய தகுதிசுற்றிலும் சிறிதளவு தூறல் போட்டு ஓட்டுனர்களுக்கு ஒருவிதமான கிலி ஏற்படுத்திவிட்டது. ஈரமான ஓட்டுகளத்தின் "தல" சூமேக்கர் இல்லாததால் இவ்வருடம் ஈரபாதையில் பந்தயம் நடைபெரும்பட்சத்தில் நிறைய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.என்னுடைய நண்பர்கள் சொல்லுவதுண்டு, டெண்டுல்கர் ரிட்டையராகிவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் செத்துவிடும் என்று. ஆனால் சூமேக்கர் ரிட்டயர் ஆனதால் F1 போட்டியே என்னைப் போன்ற பலருக்கு ஒருசுவாரசியம் குறைந்த நிகழ்வாகவே தெரிகிறது. சூமேக்கரின் அசாத்திய துணிச்சலும், இண்ட்ஸ்டண்ட் திங்க்கிங் இன்னமும் எந்தவொரு ஓட்டுனருக்குமில்லை என்று தான் நான் கருதுகிறேன்.

ஆனாலும் சென்ற முறை தவறவிட்டதை இம்முறை விடாது சிகப்பு பெர்ராரி!!!!!!!!!!
வ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூம்.....

3/04/2007

பொருளாதார அகதிகள்


கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளை உடனடியாக சிறீலங்கவிற்கு திரும்ப அனுப்பாவிடில் அவுசுதிரேலியா, நூற்றுக்கணக்கான பொருளாதார அகதிகளுக்கு தமது எல்லைகளைத் திறக்க வேண்டி வரும்.இப்படி கூறியவர் அவுசுதிரேலிய அரசியல்வாதியோ அல்லது அமைச்சரோ அல்லது அமைச்சகம் சார்ந்த அலுவலரோ அல்ல. சிங்களப் பேரினவாத அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிறிப்பல தி சில்வா. இவரது அறிக்கை மனிதாபிமானமோ அல்லது அரசக் காரியதரிசிக்கான பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் குடித்துவிட்டு நா குழன்று உளருகின்ற வெற்றுக்கோஷமாக
இருக்கிறது.

இதோடு மட்டுமன்றி இன்னுமொரு வரலாற்று சிறப்புமிக்க சந்தேகத்தையும் உரக்க எழுப்பியுள்ளார். அதாவது, சிறீலங்காவில் இருந்து 40 மைல்கல் தொலைவில் உள்ள இந்திய தேசமும் தமிழகமும் சிறீலங்காவில் இருந்து உயிர்பிச்சை தேடி வரும் அகதிகளை இரு கை விரித்து அழைக்கையில்; அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள அவுசுதிரேலியாவிற்கு அவர்கள் ஏன் வரவேண்டும்? பொருளாதார ரீதியில் நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே!வென்று...

ஆகா என்னே ஒரு பொறுப்புணர்ச்சி!!!

அடுத்ததாக பெயர் சொல்ல விரும்பா ஒரு தெற்காசிய தூதுவ காரியதரிசி இன்னுமொரு தத்துவார்த்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது, தென் கிழக்காசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் அவுசுதிரேலியாவிற்கு கடத்தப்படுவதற்காக காத்துக்கிடப்பதாகவும் அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருக்கும் புலிகள் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர்களெனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் இம்மக்கள் ஈழத்தைவிட்டு வெளியேறி புலிகளின் அமைப்பிற்காக உதவும் வண்ணம் பொருளாதார அகதிகளாக வெளிநாடுகளுக்குப் பயனம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு
கடத்தப்படுவதற்கு இவர்கள் புலிகளுக்கு தலா 10,000/- டொலர் வீதம் வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

புலிகள், புலம்பெயர் ஈழவாசிகள் தாயகம் திரும்பும் பொழுது வரி வசூலிப்பது உண்மையென்றாலும், இவ்வாறு அகதிகளாக உயிர் பிச்சை கேட்டும் சுகாதாரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்காகவும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதை பொருளாதார அகதிகள் என்றழைப்பது மிகவும் ஆட்சேபகரமான ஒன்று.இதைப் பொருளாதார அகதியான நான் சொல்வதற்காக வெட்கப்படவில்லை.

இன்றோ நாளையோ அல்லது இன்று நள்ளிரவோ வல்லரசாகக் கூடிய இந்திய தேசத்தைவிட்டு வந்தேறியாக இங்கிருக்கும் நாட்டிற்கு சேவை :-)) செய்து வரி செலுத்தி வாழ்ந்துவரும் நான் பொருளாதார அகதி தான். ஆனால் அமெரிக்காவிலோ இன்னபிற வல்லரசு மற்றும் வல்லரசாக இல்லாத ஆனால் முன்னேற்றமடைந்த நாடுகளில் வசிக்கும் வருங்கால வல்லரசு இந்தியாவின் குடிமக்களை என்னவென்று அழைப்பது? ஆங்...அவர்கள் தகுதிக்கும் அறிவுக்கும் இந்திய வல்லரசால் டொலர்களில் சம்பளம் கொடுக்க இயலாதபடியினால் அவர்கள் தகுதிக்கேற்ற ஊதியத்திற்காகவும் சுகமான வாழ்க்கைக்காகவும் முன்னேறிய நாடுகளால் வரவேற்கப்படுகிறார்கள். :-))))

ஆனால் உயிர்பிச்சைக்காகவும், மூன்று வேளை சாப்பாட்டிற்காக எச்சில் தட்டுகளையும், கக்கூஸையும் கழுவுவதற்காக புலம்பெயரும் ஈழத்தமிழர்கள் பொருளாதார அகதிகளாம். அந்த மெத்தப்படித்த அரைவேக்காட்டு தூதரக காரியதரிசி உளறியுள்ளது.இந்த உளரலுக்கு சொந்தக்காரனோ அல்லது சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதுவனோ கிறிஸ்துமஸ் தீவிற்கு சென்று அப்பொருளாதார அகதிகளை சந்தித்தனரா என்றால் அதுவும் இல்லை.(அல்லது எனக்குத் தெரிந்து இல்லை)

ஓரிரண்டு வருடங்களுக்கு முன் ஹோம்புஷ்ஷில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் ஈழமுரசு படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் தற்போது நோர்வேயில் இருக்கும் ஒரு சகோதரி அவருடைய பொருளாதார அகதி அட்டை வாங்குவதற்கு முன் ஏற்பட்ட துன்பங்களைத் தொகுத்திருந்தார். அய்ரோப்பாவில் இருக்கும் அனைத்து ஈழத் தமிழகதிகளுக்கும் இங்கிலாந்து மோகம் காட்டித் தான் கடத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான கள்ளத்தோனி பயனம், அதற்கப்பால் கரைசேரும் நாட்டில் உள்ள ஏஜெண்டின் கைக்கூலிகள் வன்புணறல் அது தவிர்த்து 10லிருந்து 20ஆயிரம் வரையிலான டொலர் அவிழ்க்க வேண்டும். இது அனைத்தும் சுமூகமாக முடிந்தால் கண்டெயினர் டிரக்குகளில் மூட்டைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்துவது போல் கடத்திச் செல்லுவார்கள். வழியில் ஏதாவது ஒரு பனிப்பிரதேசத்தில் இறக்கிவிட்டு இது தான் இங்கிலாந்து என்று தள்ளிவிட்டுப் போவார்கள். இது பற்றி சாருவின் எழுத்துக்களில் இருந்தும் நிறைய அறிந்து கொள்ளலாம்.


இவ்வாறு பொருளாதார அகதிகளாக பட்டம் கட்டப்பட்ட ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும்பொருட்டு அவுசுதிரேலிய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம்
முன்வைத்த அகதிகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அவ்வரசு ஒட்டுமொத்தமாக நிராகரித்தபட்சத்தில் இந்த 83 ஈழ அகதிகளுக்கு அவுசுதிரேலிய அரசாங்கம் அரசியற்புகலிடம் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகமான நிலபரப்புள்ள அவுசுதிரேலியாவில் இந்த 83 பேருக்கா இடமிருக்காது?

உண்மையில் சொல்லப்போனால் இன்றளவில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்பதே இவ்வாறான அகதிகள், பொருளாதார அகதிகள் என்றழைக்கப்படுபவர்களால் தான்.

கடந்த வெள்ளியன்று இங்கு நடைபெற்ற ஒரு தொழில்முறை விருந்தில் ஒரு உள்ளூர் கட்டிடக்கலை நிபுணர் பின் தங்கிய அல்லது வளரும் நாடுகளைச் சார்ந்த வளரும் கட்டிடக்கலைஞர்கள் தான் அவருக்கு தேவையெனவும் அவர்கள் தான் சோர்வின்றி உழைப்பவர்கள் எனவும் என்னிடம் தெரிவித்தார்.

இன்று நகரங்கள் என்றழைக்கப்படும் அவுசுதிரேலியாவின் சில குட்டி கிராமங்கள்கூட புலம்பெயர்ந்த வந்தேறிகளாலே கட்டப்பெற்றது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் அவுசுதிரேலியாவின் வரண்ட செம்மண் பூமியின் நகரமான அலீஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நிர்மாணமும் அதன் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காலகட்டத்தில் அகதிகளாக வந்த பஞ்சாபிய சீக்கியர்களால் தான். இதை அவுசுதிரேலியர்களே ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.

மேலும் வடக்கு குயின்ஸ்லாந்தின் இடாலியா மற்றும் அதற்கும் மேலுள்ள நாட்டுப்புற கிராமங்கள் குயின்சுலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. காரணம் இந்திய துணைக்கண்டத்தின் பூர்விகப் பணப் பயிர்களான வாழை, மா, கரும்பு போன்றவற்றின் விளைச்சல்கள் தான். இவையனைத்தும் இந்திய / ஈழ அகதிகளாக வந்தவர்களால் தான்.
உணமையில் சொல்லப்போனால் என்னைப்போன்ற பொருளாதார அகதிகளை விட, உழைத்து உயிரோடு வாழவேண்டும் என்ற வெறியோடு வரும் வெளிதேசத்து அகதிகளால் தான் சில நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்கின்றது.

From now on, I is an ECONOMIC REFUGEE!!!

பிணமாய் நான்...




















எனை சிறையெடுத்த
உன்சிரிப்பு இப்பொழுதெல்லாம்
ருத்ர தாண்டவமாடுகிறது

பயத்தில் விலகிநடந்தாலும்
விடாமல் துரத்தினாய்
ஓடிவந்து கவ்வினேன்

நீயோ அண்டவெளியில்
இன்னுமொரு துருவ
நட்சத்திரமாய் மிதக்கிறாய்

தீய்ந்து போன
என்னுடல் துள்ளுகிறது
உனையடைவதற்கான
இறுதி பயனத்திலும்

இதைத்தான் சாவிலும்
நான் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னேனோ?