கும்மி என்பது கொண்டாட்டம் என்று செஞ்சட்டையணிந்த செஞ்சிப்பாய் காரல் மார்க்ஸ் வழிவந்த உப்பளத்தின் வெக்கைகளில் வளர்ந்த திராவிடத்திம்மிகள் கூடி நின்று குடித்து களித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கையிலே செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உலகப்பொதுமறையைப் படைத்த வான் புகழ் வாசுகியின் கணவன் ஈர்க்குச்சியால் சோற்றுப்பறுக்கைகளை பொறுக்கும் பொழுது எழுதிய தமிழுலகின் இணையத்தை எந்தஒரு மொழியையும் விஞ்சிய ஈகலப்பையில் உழுது அரசியல், காமம், கதை, கட்டுரையென எழுதி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் எந்த விதமான எழுத்தாக இருந்தாலும் தனக்கென்று அடையாளமிருந்தாலும் விளிப்பிலியாக வந்து மென்பொருள் வல்லுனர் தொடங்கி பத்திரிகை ஆசிரியர் வரை அனைவரையும் ஒரு சேர கும்மியடித்து ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் அனானி கும்மிகளுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களுடன் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
அவுசுதிரேலியாவின் வடகிழக்கு கோடியிலிருந்து சோழமன்னன் வென்றெடுத்த சிங்கபுரத்துக்கு வானூர்தியில் அடியெடுத்து வைத்த பொழுது இப்பயனத்தின் வெற்றி சோழன் வென்றெடுத்ததைவிடப் பெரிதானது என்று நானறிந்திருக்கவில்லை. நம்முடைய வருகையையொட்டி சிங்கபுரத்தில் இளஞ்சிங்கங்கள் இப்படியாதனதொரு வரவேற்பைத் தருவார்களெனவும் நானெதிர்பார்த்திருக்கவில்லை. ஏற்கனவே சிங்கபுரத்தின் கட்டுப்பாடுகளையெல்லாம் அறிந்திருந்தபடியால் சிங்கப்பூரின் அரசியல் சுனாமி இளஞ்சிங்கம் குயிலியின் பதிவில் ஆனந்த கும்மியடித்த அனானி சிங்கத்தின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில் இங்கிருந்து கொண்டு சென்ற எக்ஸ்டசி, ரெட் மிட்சுபிஷி,ஐஸ் ஸ்பீட் போன்ற வஸ்த்துக்களை சிங்கையின் விமானகத்தின் கழிப்பரையிலேயே கழுவிவிட்டு தோழன் வரவணையானுக்காக வாங்கி வந்திருந்த "ஹாலிடேஸ்" 50ஸ் பாக் ஒன்றும், பண்டி(பண்டாபர்க்) ஒரிஜினல் ற்றிப்புள் ஃபில்டரோடும் அழகியபுலி தோழி யானாவுக்காக வாங்கிச் சென்றிருந்த டேய்லர்ஸ் ப்ரூட் ரெட்டுடனும் சிவப்பு பரிசோதனை வாயில் வழியாக செல்லவிருந்த பொழுது, இன்னுமொரு அழகிய பென்சிங்கம் என்னருகில் வந்து என்னுடைய வருகையையொட்டி
இன்று சிங்கை விமானகத்தில் குவாரண்டைன் விலக்கப்பட்டிருப்பதாகவும் நான் எவ்வொரு சோதனையுமின்றி வெளியே செல்லலாம் என்று கொஞ்சு தமிழில் கெஞ்சியதில் சிங்கபுரத்தின் ஆனந்த கும்மி நன்றாகவே விளங்கியது.
வாசலில் குழலியுடன் அவரது நண்பர் ஒருவரும், என்னுடைய சகோதரனும் எனக்காக காத்திருந்தனர். குழலியின் நண்பர் என்னிடம் "ஓ நீங்க தானா அந்த அக்யூஸ்டு" என்றொரு அருமையான வரவேற்புடன் வரவேற்றனர். அதற்குள்ளாகவே குழலி தன்னுடைய சாம்சங் கம்பெனி ப்ராடக்டான ஒரு டுபுக்கு போனில் என்னுடைய படத்தை எடுத்து பதிவில் போட்டது வேறொரு கதை. வாசலில் குழலியிடம் விடைபெற்றுக் கொண்டு எனது அண்ணனோடு ஓட்டலுக்கு பயனமானோம். அதன் பின் நடந்த குத்தாட்டங்களும் குடியாட்டங்களும் தனிக்கதை. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்.
இதற்கிடையில் ஒரு 9 முறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொல்ல முயன்று தோல்வியடந்த குழலி சிங்கை போலிஸில் நான் காணாமல் போய்விட்டதாக புகாரும், தமிழ்மண தமிழிணையத்தில் அறிவிப்பும் செய்திருந்தபடியால் அனைத்து சிங்கை "மகிழ்வுந்து" ஓட்டுனர்களும் ஒரு மாதிரியாகவே என்னைப் பார்த்தனர். இடையே ஒரு டிராபிக் சிக்னலில் (ரேஃபல்ஸ் சிட்டி டவர் அருகில்) சிங்கை போலிஸார் வாகனங்களை நிறுத்தி சோதனைப் போட்டதைக் கண்டு அலறிய நான் "கேப்" டிரைவரிடம் ஒரு 10 டொலர் நோட்டை நீட்டி "கீப் த சேஞ்ச்" என்று உறுமிவிட்டு கட்டண தொலைபேசியை நோக்கி ஓடினேன். இது நடந்தது சனிக்கிழமை
காலை பத்து மணி. ஓடிய வேகத்தில் சறுக்கியதில் என் கண்ணெதிரில் நான் கண்டது இன்னுமொரு சிங்கையின் அழகு தேவதை. அவள் என்னைப்பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்க்க அதில் அடிசறுக்கிய நான் வந்த நோக்கத்தை மறந்து அவளைப் பின் தொடர்ந்தேன். அரை பர்லாங் பின் தொடர்ந்ததில் என் மேல் பரிதாபப்பட்டு ஸ்டார்பக்ஸுக்கு அழைத்துச் சென்றாள். பின்னர் அவளது செல்பேசியை வாங்கி குழலிக்கு பேசி "சிம்லிம் டவர்"ல் நாண்கு மணிக்கு சந்திப்பதாக உறுதியாயிற்று. அதன் பின் அந்த அழகு தேவதை ஒரு வழிகாட்டியாக மாறி சிங்கையின் புகிஸ், ரிவர் சைடு, எஸ்ப்ளானேட் என்று சுமார் 6 மணி நேரம் என்னோடு ஸ்பெண்ட் செய்ததும் தனிக் கதை.
முடிவில் நாண்கு மணியளவில் குழலியும் அவரது நண்பரும் வந்து சேர, பின்னர் ஜோ, எல் எல் தாசு, சிங்கை நாதன், வடுவூர் குமார்,கோவி கண்ணன் மற்றும் அவரது நண்பர் போலீஸ் 007 என்ற பதிவர் என்று அய்ந்து மணியளவில் அனைவரும் வந்துசேர அனானிகளின் ஆனந்த கும்மி ஆரம்பமாகியது. இடையில் நாடு கட்டிய நாயகனின் ஒரிஜினல் ஆசிரியர் எம்கே குமார் அவர்களிடமும் தொலைபேசினோம். அவர் பணியில் இருப்பதால் சந்திக்க இயலாதென்று கூற 7 மணிக்குத் திரும்ப அழைப்பதாக கூறிவிட்டு அனானிகளின் கலாய்ப்புகளை ஆரம்பித்தோம். நான் அன்று சந்தித்த எவரின் முகத்தையும் பார்த்ததில்லை(வடுவூர் குமார், எல் எல் தாசு தவிர). இதனால் எழுத்து தொடர்பான முன்முடிவுகள் இல்லாததாலும் எழுத்தரசியல் பேசி என்னுடைய பொன்னான நேரத்தை விரயப்படுத்த விரும்பாததாலும் அனானிகளின் சமீபத்திய "பவர்" பற்றியும் அவர்களின் நகைச்சுவையுணர்வையும் விரிவாக அலசிக் கொண்டிருக்கையில் பயந்த சுபாவத்துடன் ஒரு அப்பாவி அனானி நான் தான் உங்கள் அனைவரோடும் பிறக்காத உடன்பிறப்பு என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை சகஜ நிலைக்குக் கொண்டுவர சிறிது நேரமானதென்னவோ உண்மை தான்.
இடையே நாண்கு கோப்பி குடித்ததும் ஒரு பாக்கெட் மால்பரோ அடித்ததும் எனக்கு அளவுக்கு மீறிய சக்தி அபரிதமான அளவில் ஏற அனைவரையும் கலாய்க்க ஆரம்பித்தேன். இடையில் ஒருவர் நான் இதுவரை அனானி பின்னூட்டம் போட்டதில்லை என்று சாதிக்க அப்படியென்றால் உங்களுக்கு தமிழ் பதிவெழுதும் தகுதியே இல்லை என்று நான் கூற, இன்றிரவே ஒரு பத்து கமெண்டு போடுகிறேன் என்று காற்றில் சத்தியம் செய்ய., நான் பத்து நிமிடத்தில் எப்படி பத்தொன்பது காமெண்ட் போடுவது என்று இலவசமாக டிப்ஸை வாரி வழங்கியதில் அனைவரும் அன்றைய அமுக அவுசுதிரலாசிய தலைக்கிளை கழகத்தின் மாநாட்டின் எஜெண்டா பூர்த்தியடைந்ததாக அறிவித்ததில் எனக்கு மற்றுமொரு மாநாடு சக்கரவர்த்தி நைட்கிளப்பில் அன்றிரவு இருந்ததால் அனைவரிடமும் நன்றியும், குட் பையும் சொல்லி விடைப்பெற்றுக் கொண்டு அவுசுதிரேலியா திரும்பினேன்.
ஐ மிஸ் யு ஆல்! மைட்ஸ்...
4/14/2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
டெஸ்ட் கும்மி!
அடிக்கடி டெஸ்ட் கும்மியா சத்யா? :)
hopeyou had a good time
அன்று கொஞ்சம் அதிகமாக "குழல்" ஊதியது மட்டுமே கவலைகுரிய அம்சமாக தெரிந்தது.
நான் சிரியவன் :-)) என்பதால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
உடம்பை பார்த்துக்கொள்ளவும்.
நான் இருந்த 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.
சிங்கைக்கு வந்து (அ.மு.க.) சிங்கங்களுக்கு ஊக்கம் அளித்த சத்யாவுக்கு நன்றிகள்
தூயா,
நாங்க கடைசி வரை "டெஸ்ட் கும்மி" தான்...:-))
ஐ டிட் ஹேவ் குட் டைம்.
***
வடுவூர் குமார்,
அமுக மாநாடு வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. வழக்கமா 5-6 தான் ஊதுவேன் சிங்கை ற்றிப்பிற்கு பிறகு 10க்கு மேல் போகிறது. சிங்கையில் 25க்கும் மேல்...நுரையீரல் இருக்கா இல்லை வெறும் புகையீரல் தானான்னு தெரில.
***
உடன்பிறப்பு,
நன்றி! அடுத்த முறை அதிகமா கும்மியடிக்கலாம்.
//ஒரு மனிதனைக் கூப்பிட்டு அவன் செய்யாத தவறுக்காக மிரட்டி எழுதி வாங்குவது வீரச்செயலா? அந்த லாகின் ஐடியும் பாஸ்வேர்டும் களவு போய்விட்டது என்று எத்தனை முறைதான் சொல்வது உங்களுக்கு?//
களவு போவதற்கு ஐடியும், பாஸ்வேர்டும் என்ன பொருளா?
ஒரு வேளை அவர் மறந்துதான் போயிருக்கக் கூடும். மறந்த பாஸ்வேர்டு இன்னொருவருக்கு எப்படி தெரியுமாம்?
அனானி நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...
தயவு செய்து பின்னூட்டங்களை டெலீட் செய்யும் வேலையை வைக்காமல் வெறும் ஆனந்த கும்மி மட்டும் அடிக்கவும்.
நன்றி!!!
I am late !!!!!!!!
how big first para ? u blessed to be in hell man...!!!! we will kick this post some time in the friday AU time :)))
ஆட்டத்த இங்க வெச்சிக்கலாமா இன்னிக்கு?
எனக்கு கையெல்லாம் அரிக்குது...
அப்புரம் அந்த அழகிய புலிய பத்தி அதிகம் சொல்லவே இல்ல. உங்கள கிலாங் பகுதில பாத்ததா என்னோட தாய்லாந்து கேள் ப்ரண்டு சொன்னா?
என்ன மேட்டர்
நான் கேள்விப்பட்டது உண்மைதானா?
வெளியே மிதக்கும் அய்யா,
சொன்னதெல்லாம் உண்மை, சொல்வதெல்லாம் உண்மை
;)
கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!
வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!
இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?
பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.
அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.
மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?
யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?
கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ
தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........
ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )
சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......
டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)
Post a Comment