6/27/2007

Me, Myself & Maggie























அவ்வப்பொழுது "The Strand"செல்லும் பொழுதும், Water Mark ல் க்ரில்டு டாஸ்ஸி சால்மோனோடு சிப்ஸை வெட்டும் பொழுதும் அவளை தூரத்தில் இருந்தே ரசித்திருக்கிறேன். நல்ல வடிவான பெண் அவள். உருண்டு திரண்ட அங்கங்களும்,ரம்மியமான உடல் வலைவுகளும் பார்ப்பவர் எவரையும் மயக்கிவிடும் காமத்து பைங்கிளி அவள். அவளை எப்படியாவது அனுபவித்துத் தீர வேண்டும் என்று என் மனதில் காமத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிட்டியது ஆனால் எனக்கோ அவளைத் தனியாக அணுக பயம் அல்லது கூச்சம். ஆகையால் என்னோடு துணைக்கு யாராவது வருகிறார்களா என எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தேன். அவர்களுக்கும் ஆசை இருந்ததேயொழிய அனுபவிக்கத் தேவையான மனோதிடமில்லை. ஆதலால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திட்டமிட்டு என்னை தயார் செய்து கொண்டேன். மூன்று நாள் மூச்சு முட்ட அவளை அனுபவித்தேன். குடி,கும்மாளம், என்று எனக்கும் ஓய்வில்லை, என்னை திருப்திபடுத்த வேண்டுமென்பதற்காக அவளும் அதிக சிரத்தை எடுத்து என்னை பக்குவமாக பார்த்துக் கொண்டாள். முடித்துவிட்டு திரும்பும் பொழுதுதான் தெரிந்தது அவளை அனுபவிக்க மூன்று நாட்கள் போதாது குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தேவை என்று.

அடைவது எப்படி?
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பேன், மெல்பர்ணிலிருந்து டவுன்சுவில்லுக்கு "ஜெட்ஸ்டார்"ம் அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரிச்சர்ட் ப்ரான்சனின் "வெர்ஜின் பளூ"வும் பறக்கின்றன. டவுன்சுவில்லிலிருந்து காலை 5 மணி தொடங்கி இரவு 9 மணிவரை பயனியர் படகுகள் ஒரு மணிக்கு ஒன்று வீதம் இயங்குகின்றன. எவ்வித வாகனமுமின்றி ஒண்டிக்கட்டையாய் பயனிக்க விரும்பினால் 12 நாட்ஸை 20 நிமிடங்களிலும்
வாகனங்களோடு செல்ல விரும்பினால் 35 நிமிடங்களிலும் அடையலாம்.

அனுபவிக்க?
பல கடற்கரைகளும், உள்ளூரில் பயனிக்க "மோக்"(மொக்கை அல்ல) கார்களும், 50 சிசி ஸ்கூட்டர்களும், மலைப்பாதைகளுக்கு வாகான இலகு மிதிவண்டிகளும் வாடகைக்கு
எடுக்கலாம். ஒரு சில கடற்கரைகளே வாகனங்களினால் அடைய முடியும் வகையில் இருப்பதால் புதர்களினூடாக நடந்து "சில பல" ஆள் அரவமற்ற ஆனால் அழகான கடற்கரைகளில் எவ்வித தொந்திரவுமின்றி நிர்வாணக் குளியல் போடலாம்.

சில உபயோகமான இணைப்புகள்:
www.magnetic-island.com.au
www.MagneticIsland.com.au
www.magneticislandferry.com.au
www.basebackpackers.com/MAGGIE.htm
www.bungalowbay.com.au

6 comments:

Anonymous said...

ரெண்டுபாக்கட் கோல்ட்ப்ளேக் கொடுப்பா

said...

இன்னிக்கு சனிக்கெழம அதனால கிங்ஸ் மட்டும் தான்...

Anonymous said...

பொட்டீகடைக்கு இன்று விடுப்பு இல்லையா?

Anonymous said...

intha pathivukku ningal porno eluthalam.

shame on u

-kaz

Anonymous said...

பொட்டிக்கடை அய்யா, அந்த 13வது படம் மிக இருட்டாக இருக்கிறது கொஞ்சம் டார்ச் லைட்டு இரவல் கொடுக்க முடியுமா?

Anonymous said...

ஏதொ அருமையான கதை சொல்ல போரீங்கன்னு வந்தேன் இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே?