1/28/2007
தடா...
ப்ளாக்கீ ஒரு இயற்கை, கலை ஆர்வளன்; பரக்காவோ ஒரு ஓவியன்; நான் அப்போது ஆரோவில்லில் அய்க்கியமாகி இருந்ததால் அங்கு பிறரோடு கதைத்த கதை கேட்ட புண்ணியத்தில் "பொட்டியை விட்டு வெளியே" யோசிப்பவன் என்ற ஒர் மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தேன். இதனால் எந்தவொரு முடிவிற்கும், குழுவில் என்னுடைய ஆலோசனையும் கேட்கப்படும். சில நேரங்களில் "ஹைப்போதெடிக்" சிந்தனைகளை அள்ளித் தெளித்ததினால் அந்த மாயபிம்பமும் பிறிதொரு நல்ல நாளில் தகர்ந்ததென்னவோ உண்மை தான்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை ஐந்து மணியளவில் பரக்கா என்னுடைய கைப்பேசிக்கு "துண்டிக்கப்பட்ட அழைப்புகளை" அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். ஆனால் நானும் சூசூவும் "கேர்ள்ஸ் ஃப்ரீ" நைட் ஆஃபரில் சென்னையின் ஒரு குத்தாட்ட கிளப்பில் இருந்து நயனாவையும், ரித்துவையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு ராயப்பேட்டாவில் ஒரு ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்தோம். கைப்பேசியின் இடைவிடாத அலறலினால் கடுப்பாகிப் போன சூசூ என்னுடைய கைப்பேசியை பிடுங்கி பரக்காவை அழைத்தான். ஆனால் அடுத்தமுனைக்கு அழைப்பு செல்வதற்குள், உங்கள் கைப்பேசியில் போதுமான நிதியிருப்பு இல்லாததினால் இவ்வழைப்பினை மேற்கொண்டு தொடர இயலாது என அழகியின் இளங்குரல் கூறியதைக் கேட்டு மென்மேலும் எரிச்சலடந்தான் சூசூ.
அருகிலிருந்த உள்ளூர் தொலைப்பேசி அழைப்பகத்திற்கு சென்று பரக்காவின் வீட்டிற்கு மணியடித்தேன்.ஒரு சுற்றுக்குள்ளாகவே செவிமடுத்த பரக்கா, இன்று ஒரு மகா திட்டம் வைத்திருப்பதாகவும், சீக்கிரம் குளித்து தயாராக இருக்குமாறும் கூறிவிட்டு தொலைபேசியை வைத்தான். உடனிருந்த சூசூவிற்கோ பொறுக்கமாட்டாமல் மீண்டும் பரக்காவை அழைத்து; அடேய் பரக்கா, ப்ளாக்கீயும் நீயும் செய்வது கொஞ்சம் கூட நல்லது கிடையாது. என்னைக்காவது நெடுமுடியான் அறுத்து விட்டுவிடுவான். அப்பொழுது இந்த சூசூ தான் தேவைப்படுவான் என்று கூறிவிட்டு, காரில் வரும்பொழுது என்ன விஷயம் என கேட்டு நச்சரித்து சாகடித்தான்.
சரியாக ஆறு மணியளவில் ப்ளாக்கியும், பரக்காவும் யூனோவை எடுத்துகொண்டு வந்துவிட்டார்கள். வழக்கமாக பேலியோவில் வரும் "ப்ளாக்கீ" இன்று யூனோவில் வந்ததும் எனக்கு திட்டம் புரிந்துவிட்டது. பாண்டிச்சேரிக்கு சரக்கு வாங்க தான் இவ்வளவு "கட்டுமானமும்" என எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆகையால் நான் அவர்களையேதும் கேட்காமல் அவர்கள் வழியிலேயே விட்டுப்பிடிக்கலாமென அமைதியாயிருந்தேன். முதலில் பரக்கா தான் ஆரம்பித்தான். மாமா, ஃபைனல் ப்ரெசண்டேசன் ஒத்தி வச்சிட்டாங்க., அதனால் எங்க பார்ட்டிய டிலே பண்ணாம ப்ரெசண்டேசனுக்கு முன்னாடியே ஒரு ரெப்ரெஷ்மெண்டா வெச்சிக்கலாமென்றான். அதனால் நாம இன்னைக்கு போய் எங்கேயாவது ஒரு ஸ்பாட் சேர்ச் பண்ணனும்னு சொன்னான். பளாக்கீயோ, மாப்ள சென்னைலர்ந்து 90K ரேடியஸ்ல எங்கன்னாலும் ஓகேன்னு சொன்னான். வழக்கம் போல ஈசீஆர் ரூட்ல தேடுவோம்;நீலங்கரை தாண்டி எங்கேயாவது ஒரு பீச் அவுஸ் புடிச்சு ஜமாய்ச்சிடலாம் ப்ளாக்கீ திட்டம் போட, சரியென பயனம் ஆரம்பமானது.
கோல்டன் பீச் ரிசார்ட் அருகில் வரும்போது, செல்பேசி மீண்டும் அலறியது. அழைத்தது சந்திரன், சென்னை கிறித்தவ கல்லூரியில் நான் படித்த மூன்றுமாத காலத்தில் என்னோடு மிக நட்புடன் இருந்த ஒரு திராவிடப் பாப்ஸ். தம்மு தொடங்கி புலிகட் லேக்கில் ஒரு நள்ளிரவில் கஞ்சா அடித்து
"பேய் வேட்டைக்கு" சென்றது வரை பல சம்பவங்கள் உண்டு. சந்திரன் இப்பொழுது அமெரிக்காவில் ஒரு மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர். அவனிடம் எங்களது காலை நேரப் பயனத்திற்கான நோக்கத்தை சொல்ல "தடா"லடியாக "தடா" டிரை பண்ணு மச்சி என்று சொன்னான். உடன், காரிலேயே ஒரு சின்ன ஆலோசனைக் கூட்டம் நடந்த்து.ஒருமனதாக தடா போகலாமென முடிவெடுக்கப்பட்டு வண்டி வடக்கு நோக்கி சீறியது.
போகும் வழியிலேயே கள்ளுக்கடை சமீபம், பஞ்சாபி தாபா ஆகியவற்றை நோட்டம் விட்டுவிட்டு நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த கிராமத்து தார்சாலையில் ஒன்றிரண்டு கிராமங்களத்தாண்டியவுடன் செம்மண்புழுதி பரக்கும் சாலையில் குன்றுகளின் மீதான ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. சாலையின் முடிவில் ஒரு சிறிய ஓடை. கொஞ்சம் புதியதாக இருந்தது;கிருட்டினா நதிநீர் திட்டமாக இருந்திருக்கலாம். அந்த ஓடையின் மீதான பாலத்தை தாண்டியவுடன் மணலும், பாரைகளும் நிறைந்த பாதை. சில அடிகள் சென்றவுடன் காரின் அடிப்பகுதி பாறைகற்களில் பலமாக அடிபட, வந்த வழியே திரும்பி சிறிது தொலைவில் தொழிற்கூடம் போன்றிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் வண்டியை நிறுத்தி, கட்டிடத்தின் காவலாளில் ஒரு 20/- ரூ கொடுத்துவிட்டு தடா ஓடையை நோக்கி நடந்தோம்.
சுமார் ஒரு 20? (சரியாக நியாபகம் (ஞாபகமா இல்லை நியாபகமா?) இல்லை) நிமிட நடைபயனத்திற்கு பிறகு மரம் மற்றும் மலைகளினூடே சிலுசிலுவென எந்தவொரு சலனமுமின்றி தெளிந்த நீரோடை ஓடிக்கொண்டிருந்தது. காலை நேரமாதலால் வழக்கமாக சோமபானம் உண்டு கோழிக்கறியை சுட்டுத் திண்ணும் கூட்டமேதும் இல்லை. சமவெளியான சிறிய பகுதியைத் தாண்டியது மலைப் புதர்களினூடே ஓடையையொட்டி ஒரு ஒத்தயடிப்பாதை சென்றது. அதைத் தொடர்ந்து செல்கையில் ஆங்காங்கே சிறுசிறு அருவிகளின் மேலே தெளிந்த கூழாங்கற்களின் மட்டமுள்ள தெளிந்த மீன்கள் துள்ளி விளையாடுகின்ற அகன்ற நீர்நிலைகளும் இருந்தது.
இன்னும் மேலே சென்று ஊற்றைப் பார்க்கவேண்டுமென பரக்காவும், நானும் விரும்பி இன்னும் மேலே ஏறினோம். ஆனால் போதுமென்னும் மனம் படைத்த "ப்ளாக்கீ"யோ, மாப்ளைங்களா காலை நேரமிது, மலைப்பாம்பு சிறுத்தைப்புலியெல்லாம் வரும். வீணா, என்னைக் கொலைகாரப் பயல் பட்டம் கட்டிடாதீங்கடா எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வந்த வழியே நடையை கட்டினோம். திரும்பும் பொழுது, பஞ்சாபி தாபாவின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து மெல்லிய சோமபானமும், அடர்த்தியான பஞ்சாபி ரொட்டி சாப்பிட்டதும்; அடுத்த நாள் கொண்டாட்டம் முடிந்து வரும்பொழுது இருவரை மப்பில் மல்லாக்க கடத்திவந்ததும் தனிக்கதை.
இப்பொழுது அங்கு சாலைசீரமைப்பு பணி ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்தேன். அது எந்தவகையில் நன்மை பயக்குமென்பதில் பல கேள்விகள் எனக்குண்டு. சாலையை செப்பனிடப்படுவதன் மூலம் இன்றளவில் 25-50 என்றிருக்கும் மக்கள் போக்குவரத்து அதிகமாகும். அதற்கேற்றார் போல் குப்பைகளும் அதிகமாகும். ஆனால் அங்கு ஒரு காவல்துறைக் கண்காணிப்புஅறை ஒன்று ஏற்படுத்தி ஒரு சிறிய காவல்துறைக் குழுவும், சிற்றளவில் சாலையின் ஓரங்களில் சில உள்ளூர் வணிகங்களும் ஏற்படுத்துவதன் மூலம், சட்டஒழுங்கு-மற்றும் இன்னபிற அத்துமீறல்களை தவிர்ப்பதோடல்லாமல் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். இல்லையென்றால் வழிப்பறி மற்றும் உள்ளூர் தாதாக்கள் உருவாவதற்கும் வாய்ப்புகளுள்ளது.பொருளாதாரம் இடம் கொடுக்கும் பட்சத்தில் ஒரு சிறியபூங்காவையும், புதர்களினூடே செப்பனிடப்பட்ட ஆனால் இயற்கையோடு ஒன்றிய ஒரு அகன்ற ஆடுகள் நடைபாதையமைத்து "புதர்களினூடாக நடைபழகும் கலாச்சாரத்தை" ஊக்குவிக்கலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
Watch for the most eventful grand finalé of Australian open.
GO GONZALËZ!!!
1/14/2007
அயோத்தியா மண்டபத்தின் முன்கதை சுருக்கம்:
உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் (ஒரு மூனு பேர்னு வெச்சுக்குவோம்), ஒரு சுபதினத்தில் மற்றுமொரு நண்பனின் திருமணநாளுக்கு கிச்சாவின் அண்ணன் அண்ணியை அழைக்கும் சாக்காக வைத்து மேட்டரை ஓப்பன் பண்ணிடலம்னு கணக்கு பண்ணி கிச்சாவோட அண்ணன் ஆத்துக்கு போனா. இந்தத் தடிமாடுகள் அடிக்கடி பருப்பு சாதமும், புளியொதரையும், தயிர் சாதமும் தின்ங்க அவா வீட்டுக்கு போயிருந்ததால இவனுங்கள பாத்த கிச்சாவோட அண்ணன், "வாங்கடா சோத்து மூட்டைங்களா, என்னா விசேஷம் இந்தப் பக்கம் காத்தடிக்குது...இன்னிக்கு ஆவணி அவிட்டம் கூட இல்லியே"ன்னு சொல்ல, பயலுங்க எல்லாம் பல்ல இளிச்சுக்கிட்டே...இல்லண்ணா அடுத்த வாரம் நம்ம மகிக்கு கலியாண நாளு அதான் உங்களையும் இன்வைட் பண்ணலாம்னு வந்தோம்னு சொன்னானுங்க.
உடனே அண்ணியை அழைத்து ஃபில்டர் காபியும், மிக்சரும் கொண்டுவரச் சொல்லி ஃப்ரென்ட்ஸ் எல்லார்கிட்டேயும் நன்னா சிரிச்சுகிட்டே பேசிண்டுருந்தார். இப்படியா பேச்சு போயின்டுருக்கச்சே அவராவே கிச்சாவோட கல்யான மேட்டரை ஒடச்சார். நண்பர்களுக்கோ பழம் நழுவி பால்ல விழுந்த கதையா குஷியாயிட்டாங்க...ஆனா அண்ணன் அடுத்து சொன்ன மேட்டர் நம்ம பயலுங்களுக்கு கொஞ்சம் வியர்த்துப் போனதென்னமோ உண்மை தான்.அண்ணன்,"நம்ம கிச்சாவுக்கு பவித்ரான்னு ஒரு பொண்ணு பாத்ருக்கோம், அவளும் நம்மளவா தான் தங்கமான பொண்ணு...பாக்கறதுக்கு அசல்ல நம்ம சிம்ரன் மாதிரியே இருப்பான்னா பாத்துக்கோங்களேன்" அப்படின்னார்.
நம்ம பயலுங்க, இனிமேலும் அமைதியா இருந்தா பழம் அழுகி குப்பைல எறிஞ்ச கதையா ஆயிடும்னு நெனச்சி...அண்ணா, நம்ம கிச்சுவும் கலையும் 2 வருசமா ஒருத்தருக்கொருத்தர் டீப்பா லவ் பண்றாங்க...அது விசயமா தான் பேசலாம்னு வந்தோம்னு சொல்ல...அண்ணன், பொண்ணு நம்மளவா தானேன்னு கேக்க ...நண்பர்கள்,இல்லைன்னு சொல்ல...அண்ணனின் முகம் சிவந்து, "பார்ப்பணர் + சூத்திரஆ ஆத்துப் பொண்ணு = சாக்கடை...எக்கேடோ கெட்டு ஒழியனும்னு எங்காத்து பையனுக்கு தலைவிதி இருந்தா அதை யாரால் மாற்ற முடியும் என்று சொன்னார்".
கொதித்தெழுந்த நண்பர்கள், அண்ணே...இவ்ளோ நேரம் ஒங்க வயசுக்கு தான் மரியாதை கொடுத்து பேசிட்டுர்ந்தோம். அடுத்தவாரம் வெள்ளிக்கெழம ரிஜிஸ்டர் ஆபிசில் கல்யாணம்...அதுக்கு இன்வைட் பண்ணலாம்னு தான் வந்தோம், ஃரியா இருந்தா வந்துடுங்க சரவண பவனில் தான் சாப்பாடு என்று சொல்லி கிளம்பினர்.
1/06/2007
புத்தாண்டு வாரம்!

மேற்கத்திய விழாவான புத்தாண்டு சனவரி 1, உலகெங்கிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், ஜப்பானின் டோக்கியோவும் நியூசிலாந்தின் ஆக்லாண்டும் முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பவர்களாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொண்டாடப்படும் விழாவையே புத்தாண்டின் முதல்விழாவாக பலரும் கதைப்பார்கள. அதற்கு காரணம் மில்லியன் டாலர்கள் கணக்கில் செலவிடப்பட்டு இளையவரையும் பெரியவரையும் மதிமயக்கும் வானவேடிக்கையேயாகும்.அதுவும் நாண்கைந்து இடங்களில் (ஹார்பர் ப்ரிட்ஜ்,ஓப்ரா ஹவுஸ்,டார்லிங் ஹார்பர்,பாட்ஸ்பாய்ண்ட்) ஒரே நேரத்திலும் அடுத்தடுத்தும் நடைபெரும் வானவேடிக்கைகள் தாம்.

உள்ளூர் மக்களால் கோட் ஹாங்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜ் கட்டப்பட்டு 75 ஆண்டுகளானது இவ்வருடத்திய புத்தாண்டு விழா வானவேடிக்கை கொண்டாட்டத்தின் சிறப்பம்சம். 1926ம் ஆண்டு துவங்கப்பட்ட சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் கட்டுமானப்பணி 1936ம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்த காலகட்டத்தில் சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் வடிவமைப்பும், கட்டுமானமும் கட்டுமானப்பொறியியலின் மைல்கல் என்று இன்றும் சிலாகிப்பர்.இப்பாலம் 2 இருப்புப் பாதைகளையும் 6 தரைப்பாதைகளையும் கொண்டது. அதுமட்டுமன்றி ஒரு நொடியில் 4000 பேர்களை சுமந்தும் சேவை செய்து வருகிறது.

ஆயினும், கடந்த வருடத்தை விட இவ்வருடத்தின் ஹார்பர் ப்ரிட்ஜின் மீதான வானவேடிக்கைகள் மிகக்குறைவே. ஆனால் இன்னபிற இடங்களில் நடைபெற்ற வானவேடிக்கைகள் அருமை. அதுவும் இவ்வருடத்தில் "சர்குலர் கீ"யையொட்டிய வானளாவிய கட்டிடங்களின் மேலிருந்து நடைபெற்ற வானவேடிக்கைகள் சிட்னி நகரையே பகலில் ஆழ்த்தியது. வருடாவருடம் பல்வேறு நாட்டினர்கள்
வந்திருந்து கண்டுகளிக்கும் இவ்வான வேடிக்கை இவ்வாண்டு பொம்மிக்களின் வருகையால் மேலும் கலகலப்படைந்தது.
சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் அடித்தளமானது 39 அடிகள் ஆழமும் மணற்பாறையின் மேல் இருத்தி வைக்கப்பட்டதுமாகும்.அடித்தளத்திற்கான பிடிமான சுரங்கங்கள் 118 அடிகள் நீளமும் இருபக்கப் பாறைகளின் சுரண்டி சொருகி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தைத் தாங்குகின்ற 1650 அடிகள் நீளமுள்ள வளைவானது 1929ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1930ம் ஆண்டு நிறைவுபெற்றது. இவ்வளைவு சமபங்காக பிரிக்கப்பட்டு இருமுக்கிலுமிருந்து கட்ட ஆரம்பிக்கப்பட்டது. வளைவின் கட்டுமானப்பணி முடிந்த பின்னரே தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி வளைவின் நேர்செங்குத்து நடுப்பகுதியில் தொடங்கி இருமுக்கை நோக்கி சமபங்காக தொடர்ந்தது.

இவ்வருட புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்விற்கான செலவு அரசாங்கத்தின் பணத்திலிருந்து 4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட மொத்த
வெடிகளின் அளவு 3000 கிலோ, அதில் அதிகபட்சமான ஒரு வெடியின் அளவு 40 கிலோ. வானவேடிக்கைகளுக்கான செய்முறை பன்னிரெண்டு மடிக்கணிணியால் கட்டுப்படுத்தப்படும், 2 கிலோமீட்டர் நீளமுள்ள வயர்களின் மூலம் இணைக்கப்பட்டும் இருந்தது. இப்பகுதியில் புத்தாண்டு எப்பொழுதும் கோடைகாலத்திலேயே வந்தாலும் இம்முறை சற்று மிதமான வானிலையால் எந்நேரமும் மழை பொழிந்து வெடிப்பொருட்களை ஈரப்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்தது. ஆனால் ஆச்சர்யதக்க வகையில் எப்பொழுதும் சரியாக கணிக்கப்படும் வானிலை இம்முறை மண்ணைக் கவ்வி சிறு தூரலுமின்றி வானவேடிக்கை இனிதாக நடந்தேறியது.
சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் கட்டுமானப்பணிக்கான மொத்த செலவு 13.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள், இதைக் கட்டுவதற்காக வாங்கியிருந்த கடனானது 1988ம் ஆண்டு வட்டியும் முதலுமாக மொத்தமாக அடைக்கப்பட்டது.இப்பாலத்தில் பயனஞ்செய்வதற்கான சுங்கவரி 5 செண்டிலிருந்து 3.20 டாலராக இன்று உயர்ந்துள்ளது. இவ்வாறாக வசூலிக்கப்படும் சுங்கவரிப் பணமானது பாலத்தின் பராமரிப்பு பணிக்கும், பாலத்தின் கீழே கடலுக்கு அடியில் இயங்கும் சுரங்கப்பாதையின் கடனை அடைப்பதற்கும் பயன்பட்டு வருகிறது.இப்பாலத்தின் வருடாந்திர பராமரிப்பு செலவு 5 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இப்பாலத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 150,000.

வழக்கத்திற்கு மாறாக இந்தியர்களின் கூட்டம் இம்முறை அதிகம். அதில் பலரும் சுற்றுலா பயனிகள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளமுடிந்தது. பல்கலையில் பயிலும் இந்திய மாணவர்களின் அராஜகம் காண சகிக்கவில்லை. பலரும் அதிகமாகக் குடித்து வெட்டிவம்பு வாங்கிக்கொண்டிருந்தனர், அதில் சிலருக்கு தர்ம அடியும் விழுந்தது. இவ்வருடமும் வழக்கம்போல் "ஹரே கிருஷ்னா" குழுவினரின் குத்து உச்சகட்டம். இம்முறை ஒருசில ப்ரசிலிய சம்பாவும் சேர்ந்ததில் செம ஆட்டம். நானும் என் பங்குக்குக் கொஞ்சம் குத்து போட்டுவிட்டு வந்தேன். சென்ற வருடம் இளமைத்துள்ளலாக ;-) இருந்த புத்தாண்டு இம்முறை முதுமைத்துள்ளலாக இருந்தது. இரு வயதான வெள்ளைக்கார அம்மாக்கள் கட்டியணைத்து "காட் ப்லெஸ் யு மை சன்" என நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தியது நெகிழ்வாகவே இருந்தது.
சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 1400 பேரில் 16 பேர் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்தனர்.பாலம் முழுதும் ஒருசுற்று வர்ணம் பூசுவதற்கு ஏறத்தாழ 80,000 லிட்டர் வர்ணம் தேவைப்பட்டது. இவ்வர்ணத்தைக் கொண்டு 60,000 கால்பந்தாட்ட மைதானங்களையே மூழ்கடிக்க முடியும் என்பது உபரிச் செய்தி. அதைவிட வியப்பான செய்தியாவது, ஆஸ்திரேலியாவின் திரைப்படமான அகில உலகப் புகழ்பெற்ற "க்ரோக்கடைல் டண்டி"யின் நாயகனான "பவுல் ஹோகன்" சிட்னி ஹார்பர் ப்ரிட்ஜின் வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டவர் என்பது தான்.
இன்னபிற செய்திகள்:
On new years eve: the most heard wishes...
I wish you the fucking good new years...
I love fucking...We love fucking...

எதிர்பார்த்தபடியே ஆஸ்திரேலியா, பொம்மிக்களை 5-0 கணக்கில் சுண்ணாம்படித்து ஆஷஸை மீண்டும் கைப்பற்றினர். மேலும் ஷேன் வார்ன், மெக்ரா, லாங்கர் ஆகியோரும் பெருமையாக தமது
ஓய்வை பெற்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண் கலங்கியது நெகிழ்வாக இருந்த்து.
இப்பதிவுடன் பொட்"டீ"கடை நிரந்தரமாக இடப்பெயர்ச்சி அடைகிறது.எந்த இடம் என்பதை அய் பி விஞ்ஞானிகள் பதிவுலகிற்கு அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், இப்புத்தாண்டு அனைவருக்கும் இனிதாக இருக்க வாழ்த்துகிறேன்.
12/26/2006
கமான் ஆஸி கமான்
12/23/2006
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் முதல் தலித்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார். இந்தப் பதவிக்கு வரும் முதல் தலித் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை இப்போது தான் எட்டிப் பிடிக்கிறார்.
இப்போது தலைமை நீதிபதியாக உள்ள ஒய்.கே.சபர்வால் அடுத்த மாதம் 14ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் இப்பொறுப்பை ஏற்பார்.
தலைமை நீதிபதியாகும் பாலகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு வரை இவர் இந்தப் பதவியில் இருப்பார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பது என்ற மரபு எமர்ஜென்சி காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் மரபாக உள்ளது.
ஆனால், கடந்த 1975ம் ஆண்டு மூன்று மூத்த நீதிபதிகளை ஓரங்கட்டி விட்டு, ஏ.கே.ராய் என்பவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, மூன்று நீதிபதிகள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தட்ஸ்தமிழ்
12/20/2006
சாந்திக்காக...
கடந்த 29ம் திகதி சாந்தி சௌந்தரராஜன் TIME பத்திரிகைக்கு அளித்த செவ்வி
http://www.time.com/time/world/article/0,8599,1919562,00.html
*****
கடந்த மூன்று நாட்களாக ஊடகங்களில் அதிகமான அளவில் எதிர்மறையான எண்ணங்களையும் கருத்துக்களையுமே சார்ந்து வீராங்கணை சாந்தியின் சர்ச்சைக்குரிய பதக்கப் பறிமுதல் விவாதிக்கப்பட்டுவந்தது.
நேற்று இந்து நாளிதழ் சாந்திக்கு இரயில்வேயில் வேலை மறுக்கப்பட்டதற்கு காரணமாக பாலினப் பரிசோதனையை கூறியது. மேலும் மற்ற மாநில அல்லது இந்திய அல்லக்கை பத்திரிகைகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்து நாளிதழ் இம்மாதிரியான விளிம்பு நிலையில் வாழும் ஒரு பெண்ணுக்கு சிறிதளவாவது ஆதரவாக எழுதும் என நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அதுவும் ஒரு ஆதிக்க சிந்தையிலேயே செய்திகளை வெளியிட்டிருந்தது.இந்து நாளிதழ் மிகவும் சிரமப்பட்டு அந்த இரயில்வேயின் ஹைப்ரொஃபைல் அதிகாரியிடம் பெற்ற விடயத்தை வேறு எந்த மருத்துவரையோ அல்லது இந்திய விளையாட்டு சம்மேளன மருத்துவ அதிகாரியிடமோ பேட்டியெடுத்து சாந்திக்கு ஆதரவாக எழுதியிருந்தால் சந்தோசப்பட்டிருக்கலாம்.
காலையில் படித்த சந்திரசேகரின் பதிவு அதைவிட கேவலம். இங்கு கேவலம் என்று நான் சொல்வது அவரது வார்த்தைப் பிரயோகம் தான். வார்த்தைக்கு வார்த்தை நடுநிலை என்று இவராகவே ஒரு முன்முடிவை எடுக்கொண்டு எழுதுவது என்னைப் பொருத்தவரை கேவலம் தான். இதைத் தான் இன்றைய ஆதிக்க மனப்பான்மையுள்ள அச்சு ஊடகங்களும் செய்துவருகின்றன.ஹார்மோன் குறைபாடுகளும் உடலளவிலும் குறைபாடுகள் உள்ள திருநங்கைகளை பெண்களாக அல்லது அவர்களது விருப்பப்படி தனி பாலினமாகவோ அறிவிக்க வேண்டும் என அரசாங்கமே யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில், சாந்தியின் பாலினத்தை ஊறுகண்ணுடன் பார்த்து அதன் போக்கிலேயே எழுதியிருப்பது அறிவின்மையே.உடலளவிலும் மனதளவிலும் பெண்ணாகவே பிறந்து, பெண்ணாகவே வளர்ந்து ஏதோ ஒரு சில ஹார்மோன்களின் குறைபாடுகளால் பெண்ணாக “சாந்தி” என்கிற பெண் அங்கீகரிக்கப்படாதது எனக்கு வேதனையளித்தாலும், அந்தப் பெண் ஒரு வெற்றியாளர் தான்.அவர் பெண்ணாக தான் படித்துள்ளார், பெண்ணாகத் தான் வளர்ந்துள்ளார், பெண்ணாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் எவ்விதத்திலும் அவருடைய பெண்மையில் சந்தேகமில்லை. இதை எழுதுவது/விவாதிப்பதைக் கூட கேவலமாகத் தான் நினைக்கிறேன். இதற்காக அவரை விளக்கமளிக்கக் கோருபவர்கள் அறிவில் சிறியவர்களாகத் தான் என்னால் பார்க்க முடியும்.(உதாரணம்: எல்லாவகையிலும் ஆணாகவே வளர்ந்து வாழ்ந்து ஒரு கட்டத்தில் உயிரணு உற்பத்தி செய்ய இயலாத ஒருவனை நீ ஆணல்ல இன்றிலிருந்து பெண்களுக்கான இடமோ அல்லது சந்திர சேகர் சொல்கிற மாதிரி "நடுநிலை" என்று சொல்லும்போது ஒரு சராசரி ஆணாக தன்னைக் கருதி கொண்டிருப்பவனுக்கு எழும் அதே உணர்வு)
மேலும் இலங்கையிலும், தென்கொரியாவிலும் ஏற்படாத இந்த பிரச்சினை தோகாவில் ஏற்பட்டதற்கான காரணம் “யாரோ” ஒரு போட்டியாளர் புகாரிட்டதனால் தான். இந்தப் புகார் கண்டிப்பாக வெளிநாட்டவரி ஒருவரினால் கொடுக்கப்பட்டிருக்குமா? என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறி தான். இந்திய அணி சார்பிலேயே அணியில் பங்கு கொண்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற இயலாத ஒரு சக போட்டியாளர் கூட இதைச் செய்திருக்கலாம் என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அவசர அவசரமாக சாந்தி தோகாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் அவரது இடத்தைப் பூர்த்தி செய்த ஒரு பெண் போட்டியாளர் வழியிலேயே வழுக்கி விழுந்துள்ளார்…
இன்று சாந்திக்கு தமிழக முதல்வரினால் கொடுக்கப்பட்ட சன்மானத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் பத்திரிகைகள் இந்திய விளையாட்டு சம்மேளனத்தைப் பார்த்து ஏதாவது கேள்வியெழுப்பி இருக்கிறதா என்றால் மிகக் குறைவே. சாந்தி ஹார்மோன் குறைபாடுள்ள பெண் எனத் தெரிந்த பின்னும் அவருக்கு அந்த குறைபாடுகளை நீக்க இந்திய ஒலிம்பிக் சம்மேளனமோ அல்லது சம்மந்தப்பட்ட விளையாட்டு ஆணையமமோ எந்தளவிற்கு சாந்தியை பெண் என்ற அந்த தகுதியை முழுமையாகப் பெறுவதற்கு எவ்வகையிலாவது உதவியதா என்றால் அதுவும் கேள்விக்குறி தான்.
அதுமட்டுமன்றி இங்கே பார்ப்பனர்களைப் பற்றியோ ஆத்திகத்தை பற்றியோ கேள்வியெழுப்பினால் ஓடோடி வந்து பதிலிடும் பதிவர்களும் சரி, ரஜினிக்கு பிறந்த நாள் என்று சந்தோசப்பட்ட சமூகசிந்தனையாளர்களும் சரி, இப்பிரச்சினையைப் பற்றி வாய் திறக்கவில்லை.
எது எப்படியோ கலைஞர் கூறிய இவ்வரிகள் எனக்கு பிடித்திருந்தது.
// When someone expressed doubts whether the cash award should be given, the Chief Minister said: “Finally, that is the body which ran and won. That’s all that matters.”
Asked why he had come out in support of her, he said: “That’s my training. That’s what a person who follows Periyar would do.”//
quoted from “THE HINDU”
12/16/2006
தூங்க விடுங்கப்பா...
செந்தழலாரின் "கஞ்சா குடிக்கி" பதிவில்
...டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...
தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....
எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...
தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...
பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...
என்று அவருடைய அண்ணனின் தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கும் ஆர்வத்தை எழுதியிருந்தார். இங்கிலாந்தில் நேற்று முந்தினம் ஒருவர் தண்டவாளத்தில் பாஸ்டு அவுட் ஆகியிருக்கிறார்.
பாவம்...ஒரு மனுசனை நிம்மதியா தூங்க விடமட்டறாங்கப்பா...
வீடியோவை பார்த்து எஞ்சாய் பண்ணவும்...
12/14/2006
அவா வீட்ல அப்பாவ மாமான்னு தான் கூப்பிடுவா...
சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள்:
காக்கா - திருமா
சமத்துவ மாமா- கருணாநிதி
பெரிய மாமா- ஈ வெ ராமசாமி
இதெல்லாம் சரி ஓய்...டாபிக் ரிலேட்டடா ஏதும் பேசமாட்டேங்கறேளே ...அப்டின்னு முனகரது காதுல விழரது...
வந்துட்டேன்டா அம்பி...
சமீபத்தில் தோழர் விடாதுகருப்பு அவர்கள் எழுதிய "பார்ப்பனர்களின் குலத்தொழில்" என்கிற இந்த பதிவிற்கு கொந்தளித்து எழுந்தது மாமிகள் கூட்டம். இப்பொழுதெல்லாம் "உஷா"ராக எழுதப் போவதாக கூறியிருந்த ஒரு பெண்ணீய சிந்தனாவாதி ஒருவர் மிகவும் விசனப்பட்டு பதிவெல்லாம் போட்டு விடாதுகருப்புவின் அந்த சம்மந்தப்பட்ட பதிவை தமிழ்மணத்திலிருந்தே தூக்கி எறியச் செய்தார். ஆனால் அவர் அன்று வருந்திக் கூறியதை இன்று பார்ப்பன பருப்பு பல்கலைக்கழக "பட்டம்" வழங்கிகள் மெய்யாக்கி உள்ளனர்.
ஒப்புதலுக்கு நன்றி ஓய்!
என்ன புரியலையா...அதாங்க நாங்கல்லாம் "தந்தை" பெரியார் என்போம். அவா "மாமா" பெரியார் ங்கரா...
பெரியவா (இது காமகேடி பெரியவா இல்லை) அப்பவே சொல்லி இருக்காங்க ஓய். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு...
அவா ஆத்துல அவாளோட தந்தைங்க அதான் ஓய்...அப்பாக்கள் மாமா வேலை பாத்த பழக்க தோஷத்துல அவாளோட தந்தையையே மாமான்னு கூப்பிட்டு பழகியிருக்கா...அதே நெனப்புல தந்தை பெரியாரையும் "மாமா பெரியார்"ன்னிட்டா.
12/13/2006
இராகு காலம் - நீங்களும் சொல்லுங்க
...ஆனால் வெகுகாலமாகியும் மாரியோவுக்குப் பிடிபடாத விஷயம் ஒன்று இருந்தது. அது தான் ராகு காலம்.
ஒரு நாள் பதட்டமாக வந்து சேர்ந்தான். டொன் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டதாகச் சொன்னான்.காரணம் அவன் பத்து நிமிடகாலம் தாமதமாக வந்ததுதான். அன்று அவர் வெளிநாட்டுப் பயனத்திற்காக விமான நிலையம் செல்வதற்கு இருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. பிளேன் பின்னேரம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுவதாக இருந்ததாம். டொன் என்றால் காலை பத்து மணிக்கு முன்பெ வீட்டை விட்டுக் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தார். அன்று பார்த்து மாரியோ லேட்டாக வந்ததால், ராகு காலம் தொடங்கிவிட்டதாக அவனைக் கண்டித்து,பயனத்தையே கான்ஸல் பண்ணிவிட்டார்.
ஓர் ஆப்பிரிக்க டிரைவருக்கு ராகு காலத்தின் சூட்சுமம் பற்றி விளக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கற்பனை திறன் உள்ளவர்களிடம் விட்டுவிடுகிறேன்.மாரியோவின் முகத்தைப் பார்த்த பிறகு எப்படியும் இந்த ராகு கால மர்மத்தை இவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தீர்மானித்தேன்.
விஷ்ணு எப்படி மோகினியாக மாறி அமிர்தம் பங்கிட்டாரென்றும், அதை ராகு, தேவ உருவத்தில் பெற முயற்சித்தததையும், சூரிய சந்திரர் இதை அறிந்து விஷ்ணுவுக்குக் கோள் சொல்லியதால் ராகுவுக்கும் சூரிய சந்திரருக்கும் தீராப் பகை ஏற்பட்டதையும் விவரித்தேன். ராகுவின் பழி தீர்க்க்கும் படலம் இன்றும் தொடர்கிறது. சூரிய சந்திரர் இயக்கத்தில் பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு சில மணி நேரங்களை ராகு பீடித்துக் கோள்கிறான். அதுதான் ராகு காலம், அந்தக் காலங்களில் என்ன செய்தாலும் அது உருப்படாது என்று விளக்கினேன்.
ஒரு சிறுபிள்ளையின் குதூகலம் அப்போது மாரியோவுக்கு ஏற்பட்டது.விளக்கம் இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். எந்த நாட்களீல் எவ்வளவு மணி நேரங்களை ராகு பாதிப்பான் என்று அவன் கேட்டதற்கும் என்னிடம் ஒரு சூத்திரம் தயாராக இருந்தது.
MOTHER SAW FATHER WEARING THE TURBAN SURELY .இந்த வசனத்தை அவனை மனப்பாடம் செய்ய வைத்தேன். இந்த ஏழு வார்த்தைகளும் ஏழு நாட்களை குறிக்கும். முதலாவது வார்த்தை MONDAY என்றால் இரண்டாவது வார்த்தை SATURDAY, மூன்றாவது FRIDAY. இப்படியே கடைசி வார்த்தை SUNDAYயை குறிக்கும். இந்த முறைப்படி முதலாம் நாள் இராகு காலம் ஏழரை முதல் ஒன்பது வரை நீடிக்கும்.ஒரண்டாம் நாள் ஒன்பது முதல் பத்தரை, மூன்றாம் நாள் பத்தரை முதல் பன்னிரண்டு இப்படியே விரியும் என்று விளக்கினேன். அவனும் புரிந்தது போல பெரிதாகத் தலையை ஆட்டினான்...
12/10/2006
12/09/2006
12/08/2006
பூர்வீகமும் - கடற்பாறையின் சிற்ப காலமும்

முந்தைய சோவியத் கூட்டமைப்பின் நகரமான "கியேவ்"விலிருந்து அனா என்றொரு பெண்மணி பட்டறையில் கலந்துகொள்ள வந்திருந்தாள். ஏறத்தாழ முப்பது வயதிருக்கும், மிகுந்த பெண்மையுடனும், கவர்ச்சியாகவும் இருந்தாள்.பட்டறையின் கடைசி நாளும் முடிந்துவிட்டது.ஓர் இரவுதான் மிச்சம்.ஏரியைப் பார்த்திருக்கும் உணவகத்தில் நாங்கள் நாலு பேரும் உணவருந்துவதென முடிவானது. நாங்கள் அனைவரும் கியேவ் பெண்மணி அனாவுக்காகக் காத்திருந்தோம்.

இந்தப் பட்டறை முடிவதற்குள் இவளுடன் மிகவும் அந்நியோன்யமான ஒரு சம்பவம் நடக்கப்போவது எனக்கு அப்போது தெரியாது. ஆகவே மிகவும் சாதாரணமாக ஒதுக்குபுறமான கிராமத்தில் காசு மாற்றும் சிரமத்தைப் பற்ற்ப் பேசிகொண்டோம்.பிறகு வங்கி ஊழியரிடம் எனக்குப் பரிந்துரைத்து என் பயண ஓலைகளை மாற்ற உதவி செய்தாள்.நன்றியை எதிர்பாராது விறுக்கென்று திரும்பி மறைந்துவிட்டாள்.பட்டறை நேரங்களில் எப்பவும் ஒரு கும்பல் அவளைச் சுற்றி கலகலவென்று இருக்கும். போஸ்னிய இலைஞன் அவளிடம் மனதைப் பறிகொடுத்திருந்ததும் அவள் பார்வையில் சிக்குவதற்கும், அவளோடு தனிமையில் கதைப்பதற்கும் அவன் சமயம் பார்த்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

இரவு எட்டு மணியாகியும் சூரியன் மறைவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தன். நாங்கள் வைன் ஆர்டர் பண்ணி சுவைத்துக் கொண்டிருந்தபொழுது அனா வந்து சேர்ந்தால். மாலை வேளைக்கான நீண்ட உடையில் இருந்தால். வந்த உடனேயே அன்றைய இரவு நிகழ்ச்சிகளுக்கும் பிரெஞ்சு மொழி பரிவர்த்தனைகளுக்கும் அவள் பொறுப்பேற்றுக் கொண்டாள்.மெல்லிய நீண்ட கிளாஸில் பறிமாறிய வைன் உள்ளெ இறங்க இறங்க, எங்கள் இறுக்கம் தளர்ந்து அந்நியோன்யம் கூடியது.அனாவின் சிரிப்பலை அடிக்கடி எழும்பி ஏரி அலைகளுக்கு மேல் தவழ்ந்து போனது.

என்னுடைய முழுப்பெயரையும் கேட்டுவிட்டு,"ஓ! நீங்கள் தமிழரா?" என்றாள் ஆச்சரியமான குரலில்."மன்னிக்க வேண்டும், இனிமேல் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்" என்றேன். அவள் சிரித்துக் கொண்டே "தமிழ் மிகவும் கடினமான மொழியாயிற்றே! எப்படி சமாளிக்கிறீர்கள்?"என்றாள். "என்ன செய்வது, கஷ்டம் தான். ஆனால் எங்கள் ஊரி ஒரு நூதனமான வழக்கமுண்டு. தாய்மாரே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலுடன், மொழியையும் புகட்டிவிடுவார்கள். அது மாத்திரமில்லை. பிறந்தவுடன் ஒரு தடித்த அகராதியையும் கையிலே தந்துவிடுவார்கள்" என்றேன்.

என் தாயார் மிகவும் கண்டிப்பானவள். இப்படி முன்பின் தெரியாத ஆண்களுடன் நான் வைன் அருந்துவதைப் பார்த்தால் "என் கதி அதோ கதிதான்" என்று கூரிவிட்டு கலகல்வென்று சிரித்தாள். பல தலைகள் இப்போது எங்கள் பக்கம் திரும்பின. நடன இசை ஆரம்பமானது. போஸ்னிய இளைஞன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நடனம் ஆடலாம?"என்றான். இவளும் யோசிக்காமல் சரியென்று உடனே எழுந்துவிட்டாள். நடனமேடையில் ஒருவருமில்லை. இவர்களிருவர் மட்டுமே ஆடினார்கள். பலநாள் பிரிந்திருந்து கூடியிருந்த காதலரைப்போல் ஆரத்தழுவி ஆடினர்.

நடனமேடையில் நின்றவாறே அவள் தன் தலைமயிறை விரித்து விட்டாள். அப்படி விரித்த பிறகு அவள் அழகு முற்றிலும் புதிதாக்கப்பட்டது. கண்களில் மயக்கும் தன்மை கூடியது. சிறிது தள்ளாட்டமும் தெரிந்தது. கலகலவென சிரிக்கும் குரல் கூட இப்போது கொஞ்சம் மாறிவிட்டது.

இப்பொழுது எங்கள் உணவின் பிரதான அம்சம் வந்தது. இத்த பிரெஞ்சுக்காரர்கள் உணவுக் கலையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். உணவின் அலங்காரமும், ருசியின் நேர்த்திமையும் உலகை மறக்கச் செய்தன.ஏரிக்கரைக் காற்று வீச, சிவப்பு வைன் மெல்லிய போதை தர, எங்கள் மனது முன்பின் அறியாத ஒருவித சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தது.

திடீரென அனா மீண்டும் பேசினாள்."என்னுடைய அம்ம மிகவும் கண்டிப்பானவள். என் கற்பைக் காப்பதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசியை அவள் செலவழித்தாள். என் நண்பிகள் ஆண் சிநேகிதர்களுடன் வெளியே போஇ கேளிக்கைகளில் ஈடுபடும்போது நான் கோப்பைகளைத் துடைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தேன். நேரத்தை எவ்வளவு வீணாக்கிவிட்டேன்." போஸ்னியாக்காரனும் கொஞ்சம் குடி மயக்கத்தில் இருந்தான். அந்தத் துணிவில் அவன், "அனா, கவலையை விடு. நான் உதவி செய்கிறேன். YOU CAN MAKE UP FOR THE LOST TIME" என்றான். எல்லாரும் சிரித்தார்கள். அனாவின் சிரிப்பு கலகலவென்று மேலோங்கி நின்றது.

அனா அக்கம்பக்கம் பார்த்து ரகசியக் குரலில் "உங்களுக்கு இது தெரியுமா?" என்று கேட்டபடியே மேசையில் குனிந்தாள். நாங்கள் எல்லாம் ஆர்வத்துடன் எங்கள் கழுத்துக்களை வளைத்து அவள் பக்கம் நீட்டித் தலைகள் மேசையில் படக் காத்திருந்தோம். அவளோ கலகலவென்று சிரிக்கத் துவங்கினாள். "தனக்குத் தேவை இல்லாத விடயத்தைத் தெரிவதற்கு மனிதன் எவ்வளவு தாழ்ந்து போகவும் தயங்கமாட்டான்" என்றாள். எங்களுக்கு வெட்கமாகி விட்டது.

இன்னும் வைன் வேண்டும் என்று சிறுபிள்ளைபோல அடம்பிடித்தாள்.எங்களுக்கு மிகப்பெரிய பங்கை ஊற்றிக்கொண்டும், அவளுக்கு ஒரு சொட்டு கிளாஸில் வார்த்துக் கொடுத்தோம். அசிங்கமாகத் திட்டியபடியே அவள் எழுந்து நின்றாள். இரண்டு பக்கமும் அவள் உடல் ஆடியது.

"என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். மிகக் கவலையாகச் சொல்கிறேன். என்னுடைய நீண்ட கன்னிமையை கலைக்க ஆள் தேவை. உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள்" என்று நேராக உரத்த குரலில் கேட்டாள்.
"நன்றி கோழைகளே!" என்றாள். படுக்கையில் சாய்ந்தபடி எங்களைக் கூர்ந்து பார்த்தாள். தன் வலது கையை மார்புக்குள் விட்டு இடது மார்பை எடுத்து எறிந்தால். பிறகு வலது மார்பைப் பிடுங்கி என் மூஞ்சியில் வீசினாள். பஞ்சுப்பொதி போல ஒன்று பறந்து வந்து என் முகத்தில் லேசாக உரசிக் கீழே விழுந்தது.
எங்கள் நிறுவனத்தில் மாதாந்த புதினப் பத்திரிகையை அசிரத்தையாக ஒரு நாள் தட்டிக் கொண்டிருந்தேன்.அதிலே அனாவின் படம் வெளியாகி இருந்தது. அதற்கு கீழே இப்படி போட்டிருந்தார்கள்.
பெண்கள் மறுவாழ்விற்காக இடையறாது பாடுபட்ட கியேவ் பெண்மணி, பத்து வருட காலமாக புற்று நோயுடன் போராடி இறுதியில் காலமானார். அவருடைய பெயர் அன்னலட்சுமி சேரகோவ்.
புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் இரயில் வண்டி என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து... நன்றி - எஸ். பாலபாரதி
கடந்த மாதம் சிட்னியின் போண்டாய் கடற்கரையில் உலகின் வெகுசில நகரங்களில் மட்டுமே நடைபெரும் "SCULPTURE BY THE SEA" என்கிற சிற்ப கண்காட்சியிலிருந்து திரும்பும் வழியில் பேருந்திலும், தொடர்வண்டியுலுமான பயன நேரத்தில் படித்த சிறுகதை இன்னமும் ஒரு கணத்த உணர்வை உள்ளுக்குள் மீட்டிக்கொண்டிருக்கிறது. அது எதனால் என்றுத் தெரியவில்லை.
12/05/2006
வேலியைத் தேடி - களவாடப்பட்ட சந்ததியினர்
1948ம் ஆண்டிலேயே தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் 1968 வரையிலான காலம்வரை ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது என்ற விடயம் திகைக்க வைக்கும் விடயமாகும். அதுமட்டுமன்றி இந்தகாலம் வரை இம்மக்கள் ஓட்டுரிமை என்று ஒன்று இருப்பதாகவே அறிந்திருக்கவில்லை. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் பரவலாக பூர்வீகக்குடிகள் தம் ஓட்டுரிமையை அவ்வெல்லையின் ஆளுகைக்குட்பட்ட அரசு பறித்திராவிட்டாலும், பூர்வீகக்குடிகளின் உரிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க தவறியது. இங்கே இப்படியென்றால் குயின்ஸ்லாந்து,வடக்கு மாகாணம், தாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் பூர்வீகக்குடிகள் நாலாந்தரக் குடிமக்களாகவும், அடிமைகளாகவும் வலுக்கட்டாயமாக உரிமைகள் பறிக்கப்பட்டும் வந்துள்ளனர். மேலும் 1971ம் ஆண்டு வரை இம்மக்களை பரங்கித்தலை அரசாங்கமானது ஒரு மனித இனமாகவே அங்கீகரிக்காதது, அவர்களை ஆஸ்திரேலியாவின் சனத்தொகையின் அங்கமாக கணக்கெடுத்ததில்லை என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இங்கிலாந்து அரசியின் அடிவருடி, அடிமையாகக் கருதப்பதும் ஆஸ்திரேலிய மக்கள் 1967ல் 90% அளவில் பூர்வீகக்குடிகளும் ஆஸ்திரேலியாவின் அங்கம் எனவும், அவர்களையும் சனத்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தாலும் 1971ல் தான் கும்பினிய அரசாங்கம் அதை செயல்படுத்தியது.
...இந்தியாவிலும் இது போன்ற அடக்குமுறைகள் பரங்கியரின் காலனியாதிக்க காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், இதிலும் பெரும்பாலும் விளிம்பு நிலையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினரே அடக்கியாளப்பட்டு வந்துள்ளனர் என்பதும் அதில் மறைந்துள்ள பார்ப்பனீய நுண்ணரசியலும் தெளிவாக நமக்கு விளங்கும். இந்தியாவின் பூர்வீகக்குடிகளாக அறியப்படுபவர்கள் பெருவாரியாக இருந்ததினாலேயே கும்பினியரும் சரி, அதற்கு முன் ஆண்டு வந்த இசுலாமியப் பேரரசர்களும் சரி அல்லது அதற்கு முன் மூடநம்பிக்கைகளின் பெயரிலும், தனது தரகு புத்தியினால் அதிகாரத்தை கைக்குள் கொண்டும் ஆரியப் பார்ப்பனர்கள் முழுவதுமான இனவொழிப்பை எற்படுத்த முயன்று அதில் தோல்வியைக் கண்டிருந்தனர். இந்தத் தோல்வியின் காரணத்தினாலேயே மனுவின் பெயரில் தேவ பாடையும், கற்பனையான வேத பாடங்களும் வருணாசிரம தர்மங்களும் உருவாக்கம் பெற்று இன்றுவரை ஒருசாராரின் உரிமைகள் ஆதிக்க சமுதாயத்தினரினால் ஒடுக்கப்பட்டவரின் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இதன் சான்றுகளாகவே கீழ்வெண்மனிப் படுகொலையும், சிறுதொண்டமாதேவி பாலியல் வன்முறைகளும், பாப்பாரப்பட்டி,கீரிப்பட்டி ஓட்டுரிமை மறுப்பும் அரங்கேறி வந்துள்ளன...1890 தொடங்கி 1970 வரையிலான காலகட்டங்களில் சற்றேறக்குறைய 110,000 பூர்வக்குடிகளின் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் அவர்களுடைய மொழி, கலாச்சாரம் வாழ்வியல் முறை மரூக்கப்பட்டும் ஆங்கிலப்பேரினவாத அரசதிகாரிகளால் "பூர்வக்குடிகளின் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்" என்ற பெயரில் மனவியல் வன்முறையைக் கையாண்டு இனவொழிப்பை நடத்திவந்துள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலோனோர் 5 வயதிற்கு உட்பட்டவராகவும் எஞ்சியவர் பால்மனம் மறவாக் குழந்தைகளும் தாம். இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்தம் பெற்றொரை எவ்விதத்திலும் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாது.இவ்வாறு கடத்தப்பட்டக் குழந்தைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களது மொழியும் கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மறக்கடிக்கப்பட்டு ஆங்கில மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்கப்பெற்றனர்.இந்தக் குழந்தைகள் (HALF CASTE) பெரும்பாலும் வெள்ளைகாரனின் குறியரிப்பில் பலியான பூர்வக்குடியைச் சேர்ந்த பெண்களுக்கும் பிறந்தவர் தாம். இவர்களில் வெள்ளைக்காரனின் நிறத்தையொட்டிய குழந்தைகள் நகரங்களில் உள்ள பள்ளிகட்கு அனுப்பி வெள்ளைக்காரர்களாகவே பாவிக்கப்பட்டனர்.எஞ்சிய பெரும்பாலானவர்கள் பணக்கார வெள்ளைக்காரனின் பண்ணையில் வேலை செய்வதற்காகவே உடலளவிலும் மனதளவிலும் தயாரிக்கப்பட்டனர். இவர்களை "களவாடப்பட்ட சந்ததியினர்" என்றழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு 1931ல் களவாடப்பட்ட மூன்று இளஞ்சிறுமிகளின் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டது தான் "RABBIT PROOF FENCE".இது 2002 ஆம் ஆண்டு உலகளவில் திரைக்கு வந்தபோது தான் "களவாடப்பட்ட சந்ததியினர்"ன் அவலங்களும் வெளியுலகிற்கு எட்டியது. இந்த மூன்று சிறுமிகளில் ஒருவரான "மோலி க்ரைக்"ன் மகளான "டோரிஸ் பில்கிங்டன் கர்ரிமரா" எழுதிய நாவலின் அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம்.
இனி "RABBIT PROOF FENCE" செல்வோம் .
ஜிகலாங் என்னும் இடத்தில் "மோல்லி க்ரைக்"(13 வயது),"டெய்சி க்ரைக்"(5 வயது) இவர்களின் சின்னம்மாவின் மகளான "க்ரேசி ஃபீல்ட்ஸ்"(9 வயது) ஆகிய மூவரும் "கலப்பினமாக" அடையாளம் காணப்பட்டு வலுக்கட்டாயமாக 1500 மைல்கற்களுக்கு அப்பால் உள்ள "மூர் ரிவர்" பூர்வீகக்குடிகளின் முகாமிற்கு கடத்தப்படுகின்றனர். இம்முகாமில் நடக்கும் கெடுபிடிகளும் வாழ்க்கை முறையும் பிடிக்காத "மொல்லி" அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு தனது தங்கையையும், சின்னம்மாவின் மகளையும் தன்னோடு வருமாறு அழைக்கிறாள். இதில் "க்ரேஸி"க்கு உடன்பாடில்லாவிட்டலும் அரைமனதோடு முகாமிலிருந்து தப்பிக்க ஒத்துழைக்கிறாள். மூவரில் சகோதரிகள் இருவர் மட்டும் நம்பிக்கையிழக்காமல் 9 வாரங்கள் 1500 மைல்கற்களை நடந்தே கடந்து அவர்களுடைய பூர்விகமான "ஜிகலாங்"கிற்கு வந்து தமது அன்னையோடு தஞ்சமடைகின்றனர். இடையே "டெவில்" என்றழைக்கடும் மிஸ்டர் "னெவ்வில்"(பூர்வீகக் குடிகளின் மறுவாழ்வு புனரைப்பின் தலைவர்) அவர்களின் தந்திர சூழ்ச்சியால் "க்ரேஸி" மட்டும் பிரிக்கப்பட்டும் மீண்டும் "மூர் ரிவர்" முகாமிற்கு மீண்டும் கடத்தப்படுகிறாள். படத்தின் பிண்ணனி இசையும், தத்ரூபமான ஓளிஓவியமும் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த திரைப்படத்திலும் ஆஸ்திரேலியாவின் பல்வேறுபட்ட நிலவமைப்பினை அழகாகக் காட்டியுள்ளனர். மேலும் உண்மை நிகழ்வு என்று சொல்லப்படுவதால் "க்ரைக்" சகோதரிகளில் மூத்தவளான "மோல்லி"யின் பிரமிக்க வைக்கும் அறிவுத்திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

எவ்வித தடய அடையாளமுமின்றி தம்முடைய பூர்வீகமான "ஜிகலாங்"கின் வழியே செல்லும் "Rabbit Proof Fence"ஐத் தேடி அதில் வெற்றியுமடைந்து தமது பூர்வீகத்தை வந்தடைகின்றனர் "க்ரைக்" சகோதரிகள். வழியில் வனாந்திரத்தின் நடுவில் "வேலி" துண்டிக்கப்பட்டிருந்தலும் நிச்சயமாக மீண்டும் "வேலியை" அடைய முடியும் எங்கிற "மோல்லியின்" தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது.



RABBIT-PROOF FENCE
Miramax Hanway and the Australian Film Corp.
A Rumbalara Films & Olsen Levy production
Producers: John Winter, Phillip Noyce, Christine Olsen
Director: Phillip Noyce
Executive producers: David Elfick, Jeremy Thomas, Kathleen McLaughlin
Screenwriter: Christine Olsen Based on the book "Follow the Rabbit-Proof Fence" by: Doris Pilkington Garimara
Director of photography: Christopher Doyle
Production designer/costume designer: Roger Ford
Editors: John Scott, Veronika Jenet
Color/stereo Cast:
Molly: Everlyn Sampi
Daisy: Tianna Sansbury
Gracie: Laura Monaghan
Mr. A.O. Neville: Kenneth Branagh
Moodoo: David Gulpilil
Maude: Ningali Lawford
Mavis: Deborah Mailman
Constable Riggs: Jason Clarke
11/27/2006
இருவீடு ஒருவாசல்
நமது முன்னோர்கள் ஆசியாவிலிருந்து படகு மூலமாகவோ, இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்ட தரைப்பாலம் வழியாகவோ ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என்று இன்றைய நாகரீக மக்கள் கதைக்கும் வேலையில், நம்முடைய முகவமைப்பு தென்னிந்தியாவின் தென்கோடியில் வாழும் பூர்வகுடிகள் சிலரைப் போலவும்,இந்தோனேசியாவில் இருக்கும் "செலிபிஸ்" மலைவாழ் பூர்வக்குடிகள் போலவும் மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற வேளையில், நாம் அதைப்பற்றி கதைக்காமல் அதை அவர் வழியில் ஆராயவிடுவோம்.
உண்மையில், "ரிறாத்ஜிங்கு"- எம்மின மக்கள் தொலைதூரத்திற்கு அப்பால் ஏதோ ஒரு கடல்பரப்பின் "பரால்க்கு" தீவிலிருந்தே எமது முன்னோர் "ட்ஜன்காவு" அவருடைய இரு தமக்கைகளோடு அதிகாலை நட்சத்திரத்தைத் தொடர்ந்து "ஆற்னெம்" கிழக்குக்கரையின் "ஏலங்காரா"வின் கரைகளை கிழக்குக்கரையின் படகின் மூலம் வந்தடந்திருக்கலாம் என அறிகிறோம். எம்மின மக்கள் இறக்கும்போது அவர்களுடைய ஆவிகள் எமது பூர்விக "பரால்க்கு" தீவைச் சென்றடையும்...
-Jennifer Isaacs
Australian Dreaming
40,000 years of aboriginal history.
*****
மனிதனுக்கு வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிவிட்டால் அவன் அதற்காக எவ்விதமான செயலும் எவ்விதமான பயனங்களும் மேற்கொள்ளுவான். ரொட்டித்திருடர்களையும், பொட்டித்திருடர்களையும் தண்டிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா வந்த பரங்கித் தலையர்கள் இங்கிருந்த கனிமவளங்களைக் கண்டு இங்கேயே கூடாரமிட்டனர். அத்தோடில்லாமல் இங்கிருந்த பூர்வக்குடிகளையும் அழித்து தம் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர். இன்றும் கூட "வருந்தும் நாள்" என்று கைகுலுக்கும் நாளை பரங்கியர்கள் கொண்டாடினாலும் பூர்வ குடிகள் என்றும் "black fellas்" தான்.
பூர்வக்குடிகளின் சிலர் மனிதனின் ஆறறிவோடு மிருகத்திற்கு ஒப்பான அபூர்வமான மோப்பம் பிடிக்கும் திறனையும், அவர்களின் வாழ்வியல் நிலமான செம்மலை பூமியையும் அதன் சார்ந்த இடங்களையும் நன்றாகவே அறிந்திருந்தனர். இதனால் பிராதான நிலப்பகுதியில் சிறுதவறுகளைப் புரிந்து செம்மலை பூமியில் அடைக்கலமாகும் பூர்வக்குடியினரை சிற பிடிக்க இவ்விதமான அபூர்வத்திறனைக் கொண்ட இன்னுமொரு பூர்வக்குடியானவனையே தேர்ந்தெடுத்தனர். அதைப் போன்றதொரு "தடயவியலாளன்"ஐப் பற்றியதொரு திரைப்படம் தான் "The tracker".
மிகவும் சிறப்பான காட்சியமைப்புகளும், பூர்வக்குடிகளின் ஓவியக்கலை மற்றும் நாட்டியக்கலைகளையும், ஆஸ்திரேலியாவின் செம்மன் மலைப் பிரதேசங்களை மிகத் தத்ரூபாமாக படம்பிடித்த விதமும், பரங்கித்தலையர்களின் இனவெறுப்பும் அவர்களின் நிற ஏகதிபத்தியத்தை நிலைநாட்ட அவர்கள் நடத்திய முழுவதுமான இனவொழிப்பையும், பூர்வக்குடிகளின் கூட்டுவாழ்க்கை குடும்ப முறைகளையும் அவர்களின் நீதி வழங்கும் முறையையும் அருமையாக விளக்கிய திரைப்படம். பொதுவாக ஆஸ்திரேலிய திரைப்படங்கள் உலகளாவிய முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இதைப்போன்றதொரு சிறப்பான திரைப்படங்களும் அவ்வப்போது வந்துக் கொண்டுதானிருக்கின்றன.
இப்படத்தின் நாயகனாக வரும் தடவியலாளன் "கல்பிலில்" ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளின் "தலைமகனாக"க் கருதப்படுபவர். இவரும் பூர்வக்குடியானாக இருப்பதாலோ என்னவோ அவருடைய நடிப்பும், உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் நம்மை 1922க்கே அழத்துச் செல்கின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட சக பூர்வக்குடியைத் தேடிச் செல்லும்போது நிறவெறி, இனவெறி பிடித்த பரங்கிய காவல்துறைத் தலைவன் வழியெங்கிலும் வன்முறையைக் கையான்டு பூர்வக்குடிகளின் உயிரைக் கொன்று சிதைக்கும் வலியைப் புன்னகையோடேந்தி அவனுடைய வழியிலேயே அவனுக்கு இறுதி தீர்ப்பை வாசிக்கும் பொழுது "கல்பிலில்" நமது மனதில் நிற்கிறார்.
*****
இன்றைய நுட்பம் சார்ந்த நாகரீக உலகில் இணையமும், இணைய அளாவல்களும் இன்றியமையா இடத்தை அடைகின்ற வேளையில் இணையம் சார்ந்த ஊடகங்களும் வலுப்பெறுகின்றன. அதனூடே ஊடகம் சார்ந்த வன்முறைகளும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனில் மூலை ஒரு நகரை நிர்மானிக்கும் அறிவைப்பேற்றிருந்த போதிலும் அதே அறிவு அந்நகரை அழிக்கும் அணுகுண்டு போன்ற பேரழிவுமிக்க ஆயுதங்களையும் உருவாக்கியது. ஆக மிருகம் கூட பசியெடுத்தால் தான் வேட்டையாடும் என்றிருக்கையில் மனிதனின் பழிவாங்கும் போக்கும் அவன் தம் சாதி/மதத்தின் மேல் கொண்டுள்ள பற்றுதல்களும் அவனை உலகின் எவ்விதமான உயிரினங்களொடு ஒப்பிட இயலாத அளவிற்கு அவனுடைய நுண்ணறிவு வன்முறை அளவுகடந்து நிரம்பி வழிகின்றது.
இன்று நாமும் வலைப்பதிகிறோம். ஒருவர் ஒன்றொ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளையோ சொந்தப் பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ அல்லது பெயர் மாற்றியோ எழுதிக்கொண்டு தான் வருகிறோம். அது அவரவர் கருத்து மட்டுமல்லாமல் கட்டிவைத்த அல்லது ஏற்றிவிடப்பட்ட பிம்பத்தை பொறுத்தது. ஒரு சிலர் நேரங்காலம் தெரியாமல் ஒரேபதிவில் அவர் அறியாமலே இன்னொரு "குசும்பு" பெயரில் பின்னூட்டி சந்து முதல் சந்தி சிரித்த அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மற்றுமொரு கூட்டம் நட்புவட்டத்தின் பெயரை குலுக்கிப் போட்டும் இன்னொறுவரின் சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை சுருட்டி தனிப்பதிவில் அரங்கேற்றும் அவலங்களும் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. இதன் மூலம் சந்தி தம்மினம் சந்தி சிரிப்பதாத ஆழ்ந்த மனம் பிறழ்ந்த "கொலைப்பதிவர்" ஒருவர் எப்படியாவது தம்மின மக்களை காக்கும் பொருட்டு ஒரு "நாங்கு வரி" அவதார புருஷனாக முயற்சி செய்கையில் ஏழுகடல் தாண்டி வந்த அறிவுரையின் படி வலைபதிவர் அனைவருக்கும் இக்"கொலைபதிவர்" ஒரு மின்னஞ்சல் அனுப்பி தன் "நாய்" போன்ற மோப்ப சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இக்கொலைபதிவர் பல்வேறு காலகட்டங்களில் தர்ம அடி வாங்கி அமுக்கி வாசித்தவர் இப்போதும் தன் "ஜென்ம புத்தி"யை (நன்றி:மாயவரத்தான்) காட்டி தம்மினத்தை காக்க அவதாரம் எடுத்துள்ளார். இப்போது அவர் வெறும் "ஹின்ட்" மட்டும் கொடுத்து ஏற்கனவே டவுசர் கிழிந்து போன ஒரு டவுசர் பான்டியை வைத்து எழுத விடுகிறவர். இதை அவர் புத்திசாலித் தனமாக நினைத்து செய்வதாக நினைத்தாலும் இவர்கள் அழிக்க நினைக்கிற இன்னொரு கூட்டம் மற்றுமொரு நுண்ணறிவு தாக்குதலுக்கு தயாராகிவிட்டதாகவேத் தெரிகிறது.
கீழே வருவது அவருடைய "கூகிள்" தேடலின் அறிவால் வந்த "நுட்பறிவு"...
What is ReadNotify?
ReadNotify is the most powerful and reliable email tracking service that exists today. In short - ReadNotify tells you when email you sent gets read / re-opened / forwarded and so much more
How do I send a tracked email?
There are two ways you can send tracked emails:
- Simply add: .readnotify.com to the end of your recipients email address (they won't see this)
or - Install our ActiveTracker plugin to add the tracking for you.
Testing? If you send tracked emails to yourself, your anti-spam filters may block them (people don't usually write to themselves) - so we recommend you test by sending to other people.
What will you tell me about the tracked emails I send?
ReadNotify will endeavour to provide the following in your tracking reports:
- Date and time opened
- Location of recipient (per their ISP city /town)
- Map of location (available on paid subscriptions)
- Recipients IP address
- Apparent email address of opening (if available)
- Referrer details (ie; if accessed via web mail etc)
- URL clicks
- How long the email was read for
- How many times your email was opened
- If your email was forwarded, or opened on a different computer
Try hovering your mouse over the sections in our Live Sample Receipt for more information.
Note: ReadNotify.com does not use or contain any spy-ware, mal-ware, nor virues, it is not illegal to use, and does not breach any privacy regulations in any countries.
11/14/2006
11/08/2006
Mayors Design Forum
*****
சிட்னி பல்கலைக்கழகத்தின் "திட்ட/வடிவமைப்பு ஆராய்ச்சி பணிமம்"(Planning Research Centre) என்ற அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் மாகானத்தின் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஆண்டிற்கிருமுறை நகரமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு ஒன்றை இரண்டு நாட்களுக்கான பட்டறையாக நடத்துகிறது. இதில் மத்திய/மாநில அரசாங்கத்தின் தலையீடுகள் பெருவாரியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், மாநிலத்தின் முக்கிய திட்டக் குழு அலுவலர்களும், மாநிலத்தின் முதன்மை கட்டிடக்கலை நிபுனரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் படுகிறது. அது மட்டுமன்றி மாகாணத்தின் அனைத்து மாமன்றங்களுக்கும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்படுகிறது. ஆனால் இதில் கலந்து கொள்ள ஒரு குறைந்த அளவு கட்டணமும் கலந்து கொண்டவர்களுக்கு பட்டயமும் வழங்கப்படுகிறது.
இதன் முதல் மாமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் நான் மாணவ உதவியாளனாகக் கலந்து கொண்டு மூன்று நகரமன்றங்களுக்கு (நகரமன்றத் தலைவருக்கு) பணிபுரிந்த அனுபவத்தையும், இரண்டாவது மாநாடு கடந்த அக்டோபெர் மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. இதில் நான் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளனாகப் பணிபுரிந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன். இது மட்டுமன்றி பொது மக்களின் வரிப்பணத்தையும், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தின்று கொழுத்திருக்கும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவும், அரசாங்கத்தின் பணத்தில் இயங்குகின்ற முதன்மைக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு நாட்டின்/உள்ளூர் கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் விளக்குவதற்காகவே இந்த பதிவு.
முதல் மாமன்றத் தலவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாட்டில் ஒவ்வொரு நகரமன்றத்திற்கும் ஒரு மாணவர் உதவியாளனாக நியமிக்கப் படுவார். இதர்கான மாணவர் தேர்வு தன்னார்வத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்். அவருக்கு ஏற்படும் போக்குவரத்து, தொலைபேசி, அச்சுப்பிரதி ஆகியவற்றிற்கான செலவையும், அவருடைய உழைப்பிற்கான ஊதியமும் மாமன்றத் தலைவர்களின் நுழவுக் கட்டணமாக வசூலிக்கும் பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறது. இதில் மாணவரது பணியானது, அதாவது மாநட்டிற்கு முன்னரான தயாரிப்புப் பணியென்பது மாமன்றத் தலைவர் எந்தவொரு இடத்தில் அவர் எடுத்து வைக்கும் திட்டப்பணியானதை செயல் படுத்த நினைக்கிறாரோ அதைப்பற்றிய புலனாய்வும், அங்குள்ள இன்னபிற வடிவமைப்பிற்கான ஆராய்ச்சியும் அதைப்பற்றியதொறு கதைபுனைவும் உருவாக்க வேண்டும.(சைட் அனாலிசிஸ் & கேஸ் ஸ்டடி).
இத்தோடு மாணவரது பணி முடிந்துவிடும். அதன் பின்னர் மாநாட்டின் இரண்டாம் நாளில் வடிவமைப்பிற்கான பட்டறை நடைபெறும். இதில் மாமன்றத்தலைவர் மட்டுமல்லாது எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும், இன்னபிற மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும். அங்கே ஏற்கனவே மாணவரால் உருவாக்கப்பட்ட அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய "ஸ்டோரி போர்டு" இருக்கும். அதில் முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு "மாஸ்டர் ப்ளானிங்" விவாதிக்கப்படும். விவாதிப்பவர்கள் பிற நகரமன்றத் தலைவர்களும், ஒரு திட்ட/வடிவமைப்பு விரிவுரையாளரும் குறிப்பெடுக்க மாணவரும் இருப்பர். மூன்று மணி நேரம் மின்னல் வேகத்தில் தொடரும் இப்பட்டறையின் இறுதியில் மாணவர்கள் எடுத்த குறிப்பின் அடிப்படையில் வடிவமைப்பிற்கான மாதிரிப் படமும், அலசப்பட்ட பிரச்சினைகளின் வரைபடமும் ஸ்கேன் செய்யப்பட்டு கணிணியில் ஏற்றப்படு அந்நாளின் இறுதியில் சம்மந்தப்பட்ட மாமன்றத்தலைவரால் பார்வையாளர்களுக்கு தொகுத்தளிக்கப்படும்.
இந்த மாநாட்டின் சிறப்பம்சமே, கட்டிட வடிவமைப்போ, திட்ட வடிவமைப்பைப் பற்றியோ எந்தவொரு அனுபவமும் இல்லாத சாதாரண மனிதர்களாகிய மாமன்றத்தலைவர்களின் அறிவுக்கெட்டிய வகையில் அவர்களாலேயே அவருடைய நகரத்திற்கு தேவையான கட்டமைப்பு/வடிவமைப்பின் ஆதாரத்தையும் இதனால் ஏற்படக்கூடிய எதிர்வரும் பிரச்சினைகளுக்கான தீர்வும் அவர்களாலேயே அவர்களுக்குப் புரிந்த மொழியிலேயே எடுத்து வைப்பது தான். அது மட்டுமன்றி பல்வேறு நகரமன்றத் தலவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும், ஒருகால் ஒரே வகையான பிரச்சினையாய் இருப்பின் அவர்தம் முந்தைய சொந்த அனுபவத்தில் அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் புதியதொரு தெளிவோடும், தீர்வோடும் மாநாடு முற்றுபெறும்.
இது போன்றதொரு மாநாடோ, பட்டறையோ நான் இந்தியாவில் இருந்த வரை எந்தவொரு பல்கலையிலோ, புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாளோ எடுத்து வைக்கப்பட்டதாய் நான் அறியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது கட்டிடக்கலை மாணவர்களும்/கல்வியாளர்களும் மட்டும் அரசாங்கத்தின் மீது குறை சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அவ்வளவு ஏன்? அண்ணா பல்கலையின் கட்டிடக்கலை மற்றும் நகரவடிவப்பு பள்ளியின் தலைவராக இருந்த, வெளிநாட்டில் படித்த இந்திய/தமிழக அரசாங்கத்தின் அனைத்து தொடர்புகளும் கொண்ட பேராசிரியர் ஹாரிஸ் அவர்களாலேயே ஒன்றும் செய்ய இயலாமல் போனது தான் வேதனையான விடயம். இந்திய அளவில் நடக்கும் NASA(National Association for Students of Architecture)விலும் சரி தென்கிழக்கில் நடக்கும் ZONASAவிலும் சரி மாணவர்களுக்கான உப்புக்கு பெறாத போட்டிகளும், ஆட்டமும் பாட்டமும் தான் அரங்கேறும். வேறொன்றும் உருப்படியான விவாதமோ அல்லது நடப்பாண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற பிரச்சினைகளுக்கான பட்டறையோ விவாதமோ நடைபெற்றதில்லை.். அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் பொழுது இதற்கான முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் எந்தவகையில் அது வெற்றிகரமாய் அமைகிறதென்று!!!
11/06/2006

மூவாயிரமாண்டு வரலாற்றை
அழித்து புதியதொரு
உலகத்தினைப் படைக்க
சிலுவைப்போரென்று கழிந்தான்
சாத்தானொருவன்
தனது புடுக்கறு்படுவது
தெரியாது மனிதவுரிமையை
நிலைநாட்ட நிகழ்த்தினான்
உலகளாவிய படுகொலையொன்றை!
தலைப்புச் செய்தியில்
சொன்னார்கள்
சதாமுக்கு தூக்குத்தண்டனையாம்
அடடா இவனையும்
போராளியாக்கி விட்டார்களே!
எது எப்படியோ
இனி அமேரிக்கக்காரனின்
கக்கூஸில் கூட
பாம்ப் ஸ்க்வாடு நிற்கும்
11/03/2006
தமிழ்மணம்-தேன்கூடு-இணையம்-அரசியல்
தமிழ்மணம் கைமாறியதிலிருந்து ஏகப்பட்ட விமரிசனம், எதிர்வினைகள்...ஏன் விமரிசிக்கிறோம் என்று தெரியாமல் கூட ஒரு சல்லியடிப்பு நடந்து வருகிறது. அதில் பல எதிர்வினைகள் முக்காடிட்டு வந்து மூத்திரம் அடிப்பது போலவும் இருந்தது. இதில் என்னிடம் கூட சில வலைபதிவாளர்கள் (இணையத்தில்) தமிழ்மணம் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வதாக கதைத்துள்ளனர். தமிழ்மணம் என்பது வெறும் திரட்டி, அதில் கால நேரத்திற்கேற்றாற்போல் அளிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கி முகப்பில் தெரியுமாறு செயல்படுகிறது. அதில் எப்படி ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்ள இயலும் என்று எனக்குத் தெரியவில்லை, யாராவது ஒருவர் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு எப்பொழுதெல்லாம் இவர்கள் பதிவு போடுகிறார்கள் அல்லது இவர்களது வலைப்பதிவுகளில் எப்பொழுதெல்லாம் பின்னூட்டம் வருகிறதென்றறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமளவிற்கு வெட்டியாக தமிழ்மணத்தின் தற்போதைய நிர்வாகத்தில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் காசியின் தமிழ்மனத்தில் ஒரிரு "வயது முதிர்ந்த" வலை பதிவாளர்கள் பின்னூட்டத்திற்கென்றெல்லாம் கூட ஒரு வலைப்பூ வைத்திருந்தார்கள். அப்போதைய நிர்வாகத்திற்கு என்ன கெடுபிடியோ அதையெல்லாம் கூட திரட்டிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது தற்போதைய தமிழ்மணம் என்னை பொறுத்தவரை எந்தவொரு பக்கச் சார்புமின்றி தன் வேலையை சரிவரச் செய்கின்றது.
தேன்கூடுவின் பக்கச் சார்பும் அதன் கூட்டணியின் பின்புலமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதையெல்லாம் எழுதியோ கதைத்தோ யாரும் நேரவிரயம் செய்யவிரும்பவில்லை என்றாலும் "பார்டெண்டர்" அப்பட்டமாக தேன்கூட்டின் பக்கச்சார்பை இடித்துரைத்தது அனைவருக்கும் நினைவிருக்கும், அதுவும் பரிந்துரைக்கப்பட்ட நாட்டையும் எடுத்துப் போட்டதில் அவரவர் மண்டையும் காய்ந்துபோனது தான் மிச்சம்.ஆனால் என்னிடம் தமிழ்மணத்தின் பக்கச்சார்பை பற்றி உரையாடிய வலைபதியும் இணைய நண்பர்களின் கண்களில் தேன்கூட்டின் ஒருபக்கச்சார்பு தெரியாமல் போனது நகைப்பிற்குரியதாகத் தான் எனக்குத் தோன்றியது.
அதிலும் சமீப காலங்களில் அதாவது தமிழ்மணம் கைமாறுவதற்கு சற்று முன்பும் கைமாறிய பின்பும் பெயரின்றி அனாமதேயமாக பின்னூட்டி மிரட்டிவரும் சில மூளையற்ற, மனச்சிதைவு ஏற்பட்டு அதனால் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே பின்னூட்டமிட்டு வரும் வலைபதிவர்களின் எதிர்மறையான, அச்சுறுத்தும் வகையில் பரப்பிவரும் வதந்திகளையும் சில பதிவர்கள் வெளியிட்டு அவர்களின் ஒருபக்கச்சார்பை தெரிவித்துக் கொண்டனர். ஆனால் கொடுமை என்னவென்றால் இவர்தம்மை நடுநிலைவியாதியாய் வெளிப்படுத்திக் கொண்டு நுனலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் அவர் எழுப்பிய கேள்வி அவருக்கே பொருந்தாத வண்ணம் மாட்டிக் கொண்டது தான். அவ்வாறான பதிவுகள் எவை என்பது சமீப காலங்களில் வலை பதிந்து வருபவருக்கும் தெரியுமென்பதால் அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பர்ந்தம் எனக்கில்லை.
அடுத்ததாக "பூங்கா" வலையிதழின் ஒருபக்கச்சார்பு. எந்தவொரு இதழாயிருந்தாலும் அதற்கென்று ஒரு ஆசிரியர் குழுவிருக்கும், அவர்களது எண்ணங்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமென்ற அவசியமும் எந்தவொரு இதழுக்கும் ஏற்பட்டதுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை. மேலும் அவர்களது கருத்துக்கள் எவருக்கும் ஏற்பின்றி தனித்துவமாயும் இருக்கலாம், அதையெல்லாம் நீ ஏன் என்னை திருப்திபடுத்தும் வகையில் தொகுத்தளிக்கவில்லை என்று எவரும் கேள்வி எழுப்பவும் முடியாது.அப்படி கேள்வியெழுப்பினால் "சிறுபிள்ளைகளின் சில அறிவார்ந்த கேள்விகளுக்கு அது அப்படித்தான்" என்பதை போல் அறிவித்துவிட்டு சென்றுவிடலாம். ஒருவன் +வாக இருக்கலாம் அல்லது -வாக இருக்கலாம், இரண்டுக்குமிடையில் தான் இருப்பேன் அடம்பிடித்தால் அதற்கு எண்ணளவில் மதிப்பில்லை. அதுபோன்று தான் ஒருபக்கச்சார்பும். ஒருவனுக்கு ஒருகருத்தை சார்ந்த சார்பு தான் இருக்க முடியும், அது தவிர்த்து நான் நடுநிலைவியாதியாய் தான் இருப்பேன் என்றால் அதைக் கண்டு நகைக்கத்தான் முடியுமேயொழிய வேறொன்றும் செய்ய இயலாது.
கடைசியாக ஒரு விடயம். தமிழ்மணம் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதாராகவும் செயல்படுகிறது அதனால் பதிவருக்கு அமெரிக்கக் காவல்துறையின் பிடி நிச்சயம் என்று பெயரின்றி கூறித்திரியும் பொறம்போக்கு, உருப்படியாக தன்வேலையை பார்த்தால் நலம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
10/31/2006
தொடர்வூர்தி பயனங்களும் அதன்கால் நினைவுகளும...
ஒருவழியாகப் பள்ளிக்கல்வி முற்றுபெற்றதும் தொழிற்கல்விக்கான விண்ணப்பங்களுக்காக எனது மைத்துனனுடன் சென்னைக்குச் சென்றதும், தாம்பரத்தில் இறங்கி கிண்டி வரை மின் தொடர்வூர்தியில் பயனஞ்செய்தது தான் என்னுடைய நவீனவாழ்வின் தொடர்வூர்தியின் பயனத்தின் தொடக்கம். அந்தப் பயனம் சிறிது நாழிகையேயிருந்தாலும், வழியெங்கிலும் காணக்கிடைத்த குறுக்குச்சாலைகளும் ஆங்காங்கே எனக்காக வழிவிட்டு காத்திருந்த மக்களையும் பார்க்கையில் என்னுடைய முதல் தொடர்வூர்திப்பயனம் அவ்வளவு மகிழ்வானதல்லவே. அதே நேரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்விகளுக்கான விண்ணப்பப்படிவங்களுக்காக நெல்லிக்குப்பம் - அண்ணமலைநகர் பயனம் ஒருவகையில் மகிழ்ச்சியானதாகவும் இன்னொரு வகையில் அவமானமாகவும் இருந்தது...
என்னோடும், என் வயதையொத்த ஆனால் மற்ற பள்ளிகளில் படித்த மாணவர்களெல்லாம் ஓரளவு என்னை விட படிப்பிலும் பொருளாதாரத்திலும் சிறப்பாக இருந்ததினால் அவர்களுக்கு என்னை அவர்களுடனான செயல்பாடுகளில் ஒதுக்கியே வைத்திருந்தனர். இதனாலேயெ என்னுடைய ஒரே நண்பனாக "குட்டி" ஒருவனே இருந்தான். இவனும் வசதியான குடும்பத்தை சேர்ந்திருந்தாலும், நன்றாக படிப்பவனாயிருந்தாலும் என் வீட்டையொட்டி இருந்ததினால் எங்கள் இருவருக்குமிடையேயான புரிந்துணர்வு நன்றாக இருந்தது. மேலும் அவனும் நானும் சமகாலங்களில் ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்ததினாலும் அந்த புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம் அல்லது அவனும் என்னைப் போன்றே மற்ற நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் எங்கள் கூட்டணி அமைந்திருக்கலாம்...
ஆக பிறரது கல்வி மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களில் நாங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்களிருவரும் ஒரு நன்னாளில் விண்ணப்பபடிவம் வாங்கலாம் என்று முடிவு செய்து தொடர்வூர்திப் பயனமே வசதியானதாக இருக்கும் என ஒருமனதாக தீர்மானமியற்றினோம். அதிலும் காலை 5:50 வண்டியை தவிர்த்து 6:30 வண்டியில் சென்றால் இரண்டு தொடர்வூர்தியில் பயனம் செய்யலாம் அதுவும் ஒரு பயனத்திற்கான பணத்தில் இரண்டு வண்டியில் பயனம் என்று அதிமேதாவித்தனமாக திட்டமிடப்பட்டது. குட்டியின் அப்ப மெத்தப் படித்தவர் சிறிது கண்டிப்பானவரும் கூட. அதனால் என்னுடைய அப்பாவிற்கு "குட்டி"யின் மேல் அளவு கடந்த மதிப்பு. ஆகையினால் குட்டி பெயரை சொல்லி நான் செய்த லீலைகள் ஏராளம்...
அன்று காலை குட்டியின் அப்பவும், என்னுடைய அப்பவும் எங்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். எனக்கோ ஒரு இடத்தில் இருப்பு கொள்ள இயலாது அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன். இடையே நாண்கைந்து பட்டையப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வந்து என்னை உள்ளே சென்று அமருமாறு அறிவுறுத்திவிட்டு லாவகமாக படியில் நின்று புகை பிடிக்க ஆரம்பித்தனர். இன்னும் ஒருசிலர் நம்முடைய மூதாதையரை நினைவூட்டும் பொருட்டு "ஜன்னல்" வழியாக தேரையைப் போல் தாவி பெண்கள் பயனஞ்செய்யும் பெட்டியை நோக்கி சாகசம் புரிந்து கொண்டிருந்தனர்...
இப்பொழுது வண்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூரை நெருங்கிக் கொண்டிருந்தது. புகை பிடித்தவர்களும், தாவிக் கொண்டிருந்தவர்களும் பச்சைக் குழந்தையைப் போன்று அவரவர் இருக்கையில் அமைதியாக அமர்ந்தனர். அங்கே இன்னுமொரு கூட்டமேற கூடவே இரண்டு பரிசோதகர்களும் பெண்களுக்கான பெட்டியில் ஏறி அமர்ந்தனர். தொடர்வூர்தி கடலூர் பழையநகரை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணமலைநகர் செல்பவர்கல் இங்கே இறங்கி இன்னுமொரு ஊர்த்திக்கு மாற வேண்டும். வண்டியின் வேகம் குறைந்த நிலயில் எங்களொடு அமர்ந்திருந்த மாணவர்களும் பணியாளர்களும் வண்டியிலிருந்து குதித்துக் கொண்டிருந்தனர். நான் எனக்கருகில் அமர்ந்திருந்தவரைப் பார்க்க அவரும் புரிந்தவராஇ, "வண்டி நின்றபின் இறன்க்கினால் அந்த வண்டியில் இடம் கிடைக்காது" என்று கூறி அவரும் குதித்து விட்டார். சரியென்று நான் குட்டியை பார்க்க குட்டி என்னை முதலில் குதிக்கும்படி கூற நான் பின்னோக்கி குதித்து சிறிதளவு தடுமாறி விழுந்து எழுந்தேன். எனக்கு முன்னால் இப்பொழுது குட்டி குதிக்க அவன் முன்னே இரு "மத்திய காவலர்கள்". அவன் எழுந்தவுடன் பளீரென்று ஒரு அரை...அதைப் பார்த்து நான் ஓட முயற்சிக்க இன்னுமொரு காவலன் என் பிடறியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றான. அங்கே கண்கள் கலங்கிய நிலையில் "குட்டி" நிற்க, என் முறை இப்பொழுது. நச்சென்று நடு மண்டையில் ஒரு கொட்டு. இன்னுமொரு காவலன் வந்து பளீரென்று ஒரு அரை விட்டான்.பின்னர் தான் தெரிந்தது, ஓடிய நாதாரிகள் எதுவும் முறையான பயனச்சீட்டு இல்லாததும் நாங்களும் அதைப் போன்றே இருந்திருப்போம் என்று அடித்து விட்டதாக கூறினான். அது மட்டுமல்லாமல் ஆளுக்கு பத்து நிமிடம் அறிவுரை வேறு...
இந்த அவமானத்தை மறக்க வேண்டுமென்றால் எங்காவது சற்று இளைப்பாற வேண்டுமென முடிவு செய்துவிட்டு இன்னுமொரு தொடர்வூர்தியில் பயனத்தை தொடரும் பொருட்டு இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் போதாத நேரம் கடலூர் பழைய நகரைச் சேர்ந்த அருணும், முத்துவும் அனைத்து கூத்தையும் பார்த்துவிட்டு நக்கலாக சிரித்துக் கொண்டே எங்களுக்கு அருகில் அமர்ந்தனர். அவர்களிடம் அவர்கள் பார்த்ததை யாரிடமும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு வாய்க்கு வந்தபடி அந்தவிரு காவலர்களையும் கறுவினோம்.
அது மட்டுமன்றி பல தலைவர்கள் தொடங்கி பரங்கித்தலையன் பிரேமானந்தா வரை வாசம் செய்த/செய்கின்ற கடலூர் நடுவன் சிறைச்சாலை அமைந்திருக்கின்ற கேப்பர்மலை என்கிற புண்ணிய பூமியையும் அறிமுகப்படுத்தியது இந்த தொடர்வூர்திப் பயனம் தான். கேப்பர்மலையின் மணற்குன்றுகள் பல செல்வங்களைக் கொண்டது. இங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் அலாதி சுவையானது. அத்தோடுகூட இங்கு பல வகையான கீரை வகைகள் இயற்கையிலேயே கிடைக்கும். பயனத்தினூடே அங்கு படர்ந்துவிரிந்து கிடக்கும் வல்லாரைக் கீரைச்செடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும். நான் முன்னரே கூறியபடி கடலூர் - சிதம்பரம் வரையிலானத் தடம் பல ஓடைகளையும் கடக்கவேண்டியிருக்கிறபடியால் ஆங்காங்கே பச்சைப் பசேலென்ற கோரைகளும் பஞ்சைப் போன்று வெண்மையாக பூத்துக் குலுங்குகின்ற ஆனால் வன்மையான காற்றின் வேகம் தாங்கமுடியாது தன்தலை நாணுகின்ற நாணல்களும், அதன் நிழலில் நீந்துகின்ற வாத்துகளின் கூட்டமும் ஒரு அழகான பயனத்தின் அனுபவமாயிருந்தது.ஆனால் பின்னாளில் கிள்ளைக்கு அருகேயிருக்கும் ஒரு ஓடையில் நாவரசுவின் கையை ஜான்டேவிட் வீசுவான் என்று நான் எண்ணியிருக்கவில்லை...
அருணும், முத்துவும் அன்று மதியம் சிதம்பரம் மாரியப்பாவில் படம் பார்க்க போவதாகவும் எங்களுடைய திட்டமென்ன என்பதையும் கேட்க, எங்களது மனநிலை சரியில்லையெனவும் நாங்கள் பிச்சாவரம் செல்லப்போவதாகவும், மதியம் அவர்களுக்கு நாங்கள் அனுமதி சீட்டுப் பெறுவதெனவும், அவர்கள் எங்களுக்காக விண்ணப்பப்படிவங்கள் வாங்க வேண்டுமெனவும் தீர்மாணிக்கப்பட்டது. அன்று நானும், குட்டியும் பிச்சாவரத்தின் சதுப்புநிலக் காடுகளை ரசித்ததும் அருணுக்கும், முத்துவுக்கும் மதியம் அனுமதிச்சீட்டிற்கான பணத்தைக் கொடுத்து படம் பார்க்காமல் 2:50 வண்டியைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்...
அடுத்த பயனம் சென்னையிலிருந்து..."ஒரு மலைக்குன்றும் ஐந்து ஆடுகளும்"
10/19/2006
திராவிட மாயை விலகட்டும்!
இவ்வாறு கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனித்தனியாகப் பிரிந்த பிறகு கேரளம் முதலிய பிற மாநிலத்தவர்கள் காலப்போக்கில் தமிழர்களை அன்னியர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் விரோதிகளாகவும் பார்க்கக் கூடிய மனப்பான்மையும் வளர்ந்துவிட்டது. இந்தப் போக்கை, காலஞ்சென்ற பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வள்ளல் அழகப்பச் செட்டியாரின் நிதியுதவியால் இயங்கிய அன்றைய திருவாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் 1951-54 இல் தமிழப் பேராசிரியராக இருந்தபோது கண்டு மிகமிக வருத்தப்பட்டுப் பேசியுள்ளார். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆந்திரர் முதலிய திராவிட மொழியாளர்கள் உள்ள அளவுக்கு கேரளம் முதலிய தென்னிந்திய மாநிலங்களில் தமிழர்கள் அதிகமாகவும் வளமாகவும் இல்லை.கோவை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களிலும் அவற்றை ஒட்டிய பிற நகரங்களிலும் இருந்து ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேரளாவுக்குச் செல்லும் மணியார்டர் பணம் பல கோடியைத் தாண்டும் என்று பொள்ளாச்சித் தொழிலதிபர் நா.மகாலிங்கம் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இன்றைக்கும் தமிழ்நாட்டிலிருந்து அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள் முதலிய விவசாய விளைபொருள்களும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் மின்சாரமும் பல கோடி ரூபாய்களைத் தாண்டும். இன்று சென்னை நகரில் மட்டும் 40% க்கு மேல் ஆந்திரர்கள் உள்ளதாக ஆந்திர மகாசமாஜத்தினர்களே கூறிவருகின்றனர்.தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு இலாபம் பெற்றும் கேரளம் போன்ற தென்னாட்டு மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய தண்ணீர் போன்றவற்றைத் தர மனமில்லாதது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஆணையையே துச்சமாக நினைத்து தூர எறிந்து கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள மொழியியல் துறைகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் உள்ள மொழியியல் துறைகளில் தமிழைக் கற்பிக்க ஏற்பாடு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விதிக்கு மாறாக கன்னடப் பேராசிரியர் மொழியியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஒரு துக்ககரமான நிகழ்ச்சி நினைவு கூரத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சி துவங்கப்பட்டு தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்குப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது மலையாளப் பேராசிரியராக இராமலிங்கம் பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நியமனம் பற்றிய அறிவிப்பு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் ஒப்புதலுக்காக வந்தது. அப்போது அதில் இருந்த மலையாளிகள் எல்லோரும் அவரது நியமனத்தை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள் - காரணம், அவர் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக. அவர் பிறப்பால் தமிழரே, ஆனால் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில்தான். அவர் மலையாளத்தில் பல நூல்கள் எழுதி சொந்தமாக மலையாள அச்சகம் வைத்து வெளி யிட்டார். மலையாளத்தில் பல அகராதிகள் தயாரித்துத் தாமே வெளியிட்டவர். அவரது மலையாள மொழிப் புலமை காரணமாக மலையாள மொழிபெயர்ப்பாளராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு 80 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். இத்தனைச் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாள அறிஞரை அவர் தமிழன் என்பதற்காக அன்று அவரது பேராசிரியர் பதவியை மலையாளிகள் பறித்தார்கள். இதுமட்டுமல்ல, மலையாள மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றிய மூன்று பெருமக்களில் உள்ளூர் பரமேஸ்வர அய்யர் ஒருவர். பொதுவாக இவரது மலையாளத் தொண்டுக்காக மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் அவர் தமிழன் என்ற காரணத்திற்காக அவரது சிறப்பைக் குறைத்துப் பேசிடும் மலையாளிகளும் உண்டு.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கல்வெட்டுத் துறையின் தென்னகக் கிளை ஒன்று தமிழ்நாட்டில் உள்ள உதகமண்டலத்தில் இருந்தது. அதற்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் காலப்போக்கில் அதிகாரியாக வந்தார். அவ்வளவுதான், சந்தடி செய்யாமல் தனது சொந்த மாநிலத்தில் உள்ள மைசூருக்குக் கல்வெட்டுத் துறையைத் தூக்கிக் கொண்டு போய் வைத்துவிட்டார். இதேபோல கர்நாடகத்தைச் சேர்ந்த பொம்மை என்பவர் டில்லியில் இந்தியாவின் கல்வி மந்திரியாக சிறிது காலமே இருந்தார். அவர் இருந்த சிறிது காலத்திற்குள்ளேயே சென்னையில் இருந்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தை பெங்களூருக்குக் கடத்திக் கொண்டு போனார். அதுமட்டுமா? அதோடு தன் மாநிலத்துக்காரராகிய அனந்தமூர்த்தியை சாகித்ய அக்காடமியின் தலைவராக்க உதவினார். அனந்த மூர்த்தி பங்கிற்கு சுமார் கால்நூற்றாண்டு காலமாக சென்னையில் இருந்து வந்த சாகித்ய அக்காடமியின் தென்னிந்தியக் கிளையை தனது சொந்த மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்குப் புரட்டிக் கொண்டு போய்விட்டார். 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரு தமிழன் சாகித்ய அக்காடமியின் தென்னிந்தியப் பிரிவுக்குச் செயலராக வரவில்லை. ஆனால் மலையாளி முதலிய பிற செயலாளராகியுள்ளனர்.
இதுபோன்ற அநியாயங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தவை. தெரியாமல் - நமது அண்டை மாநிலத்தவர்கள் எல்லாம் இன்னும் எந்தெந்த வகைகளில் எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கேடுகள் செய்து வருகின்றனரோ தெரியவில்லை.
மத்திய அரசு நிறுவனங்களில் பிறர் ஆதிக்கம்
தமிழ்நாட்டில் பல மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்த பதவிகளில் எல்லாம் பெரும்பாலும் பிற மாநிலத்தவர்கள்தான் இருப்பர். குறைந்த ஊதியம் உடைய சாதாரணப் பதவிகளில் தான் தமிழர்கள் இருப்பார்கள். நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் ஆரம்பித்த தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளிகளே அதிகமான அளவில் இருந்ததைப் பெரியார் தனது விடுதலைப் பத்திரிகையில் அப்பட்டமாக வெளியிட்டார்.
இப்பொழுதும் மத்திய அரசு தமிழ் நாட்டில் நிறுவனங்கள் ஏற்படுத்தினால் அதில் தமிழர்கள் சின்னஞ் சிறிய பதவிகளில்தான் இருப்பார்கள். காரில் போய் குளுகுளு அறையில் அமரும் பெரும் பதவிகளில் எல்லாம் பிற மாநிலத்தவர்கள்தான் இருப்பார்கள். இதைவிட வெட்கக் கேடு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறையின் பெரும் தலைவர், சென்னை மாநகரக் காவல்துறை ஆனையாளர் ஆகிய எல்லோரும் தமிழர் அல்லாதவர்களே. இன்னும் இது போன்ற பாதகச் செயல்கள் எவ்வளவோ உண்டு. விரிப்பின் பெருகும்.
தமிழர்கள் பல ஆண்டுகளாகப் போராடித்தான் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றார்கள். ஆனால் தற்போது எந்தவித முயற்சியும் போராட்டமும் செய்யாமல் பொறாமை காரணமாகக் கர்நாடகத்தவர் கன்னட மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார்கள். இதற்கேற்ப தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்த அதே இந்திய மொழிகள் நிறுவனத்தலைவர் கன்னட மொழியும் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழைமை உடையதால் கன்னட மொழிக்கும் செம்மொழித் தகுதி தரலாம் என்று எழுதியுள்ளாராம். ஆக சாணிச் சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
முனைவர் அ.காமாட்சிநாதன்,
மொழியியல் துறை முன்னாள் இயக்குநர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
நன்றி:தென்செய்தி


