1/14/2007

அயோத்தியா மண்டபத்தின் முன்கதை சுருக்கம்:

கிச்சாவும் கலையும் லவ் பண்ற மேட்டர் அவங்க வீட்டுக்குத் தெரியாது. ஆனா கிச்சாவுக்கு ஒன்னு மட்டும் நன்னா தெரியும். இவன் லவ் பண்ற பொண்ணு சூத்திராள் ஆத்துப் பொண்ணுன்னு தெரிஞ்சதுன்னா அவ்வளவு தான் அவா அம்மா அப்பா ரெண்டு பேரும் மட்டுமில்லாம அவனோட அண்ணன் அண்ணி கூட இவனை தலை முழுகிடுவா. அதனால அவன் தன்னோட கூட வேலை பார்க்கும் நண்பர்களை அணுகி,"என்னோட அண்ணன் இந்த தலைமுறை தான். விசால மனசுள்ள ஆசாமியா இருந்தாலும் அவர்கிட்ட நான் நேருக்கு நேர் நின்னு லவ் மேட்டரை ஓப்பன் பண்ற அளவுக்கு திரானியில்ல" நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்னு கேட்டான்.

உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் (ஒரு மூனு பேர்னு வெச்சுக்குவோம்), ஒரு சுபதினத்தில் மற்றுமொரு நண்பனின் திருமணநாளுக்கு கிச்சாவின் அண்ணன் அண்ணியை அழைக்கும் சாக்காக வைத்து மேட்டரை ஓப்பன் பண்ணிடலம்னு கணக்கு பண்ணி கிச்சாவோட அண்ணன் ஆத்துக்கு போனா. இந்தத் தடிமாடுகள் அடிக்கடி பருப்பு சாதமும், புளியொதரையும், தயிர் சாதமும் தின்ங்க அவா வீட்டுக்கு போயிருந்ததால இவனுங்கள பாத்த கிச்சாவோட அண்ணன், "வாங்கடா சோத்து மூட்டைங்களா, என்னா விசேஷம் இந்தப் பக்கம் காத்தடிக்குது...இன்னிக்கு ஆவணி அவிட்டம் கூட இல்லியே"ன்னு சொல்ல, பயலுங்க எல்லாம் பல்ல இளிச்சுக்கிட்டே...இல்லண்ணா அடுத்த வாரம் நம்ம மகிக்கு கலியாண நாளு அதான் உங்களையும் இன்வைட் பண்ணலாம்னு வந்தோம்னு சொன்னானுங்க.

உடனே அண்ணியை அழைத்து ஃபில்டர் காபியும், மிக்சரும் கொண்டுவரச் சொல்லி ஃப்ரென்ட்ஸ் எல்லார்கிட்டேயும் நன்னா சிரிச்சுகிட்டே பேசிண்டுருந்தார். இப்படியா பேச்சு போயின்டுருக்கச்சே அவராவே கிச்சாவோட கல்யான மேட்டரை ஒடச்சார். நண்பர்களுக்கோ பழம் நழுவி பால்ல விழுந்த கதையா குஷியாயிட்டாங்க...ஆனா அண்ணன் அடுத்து சொன்ன மேட்டர் நம்ம பயலுங்களுக்கு கொஞ்சம் வியர்த்துப் போனதென்னமோ உண்மை தான்.அண்ணன்,"நம்ம கிச்சாவுக்கு பவித்ரான்னு ஒரு பொண்ணு பாத்ருக்கோம், அவளும் நம்மளவா தான் தங்கமான பொண்ணு...பாக்கறதுக்கு அசல்ல நம்ம சிம்ரன் மாதிரியே இருப்பான்னா பாத்துக்கோங்களேன்" அப்படின்னார்.

நம்ம பயலுங்க, இனிமேலும் அமைதியா இருந்தா பழம் அழுகி குப்பைல எறிஞ்ச கதையா ஆயிடும்னு நெனச்சி...அண்ணா, நம்ம கிச்சுவும் கலையும் 2 வருசமா ஒருத்தருக்கொருத்தர் டீப்பா லவ் பண்றாங்க...அது விசயமா தான் பேசலாம்னு வந்தோம்னு சொல்ல...அண்ணன், பொண்ணு நம்மளவா தானேன்னு கேக்க ...நண்பர்கள்,இல்லைன்னு சொல்ல...அண்ணனின் முகம் சிவந்து, "பார்ப்பணர் + சூத்திரஆ ஆத்துப் பொண்ணு = சாக்கடை...எக்கேடோ கெட்டு ஒழியனும்னு எங்காத்து பையனுக்கு தலைவிதி இருந்தா அதை யாரால் மாற்ற முடியும் என்று சொன்னார்".

கொதித்தெழுந்த நண்பர்கள், அண்ணே...இவ்ளோ நேரம் ஒங்க வயசுக்கு தான் மரியாதை கொடுத்து பேசிட்டுர்ந்தோம். அடுத்தவாரம் வெள்ளிக்கெழம ரிஜிஸ்டர் ஆபிசில் கல்யாணம்...அதுக்கு இன்வைட் பண்ணலாம்னு தான் வந்தோம், ஃரியா இருந்தா வந்துடுங்க சரவண பவனில் தான் சாப்பாடு என்று சொல்லி கிளம்பினர்.

7 comments:

said...

நாந்தான் முன்கதை பின்கதைனு அல்வா கொடுத்தா நிங்களுமா?

டக்குனு மேட்டருக்கு வாங்க தலை

said...

ஆகா சத்யா, இது நிஜக்கதையாச்சே, பெயர்கள் மட்டும் தானே கற்பனை, எதற்கும் அவரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளுங்கள், காப்புரிமை சட்டப்படி நடவடிக்கை எடுத்துவிடப்போகிறார்.

said...

பொட்டீக்கடை அய்யா,

அடுத்த முகூர்த்ததிலேயே பவித்ராவையும்,கருப்பய்யாவுக்கு கட்டி வச்சி ,இன்னுமொருமுறை சரவணபவன்ல சாப்பிட்டு கதையை முடிச்சிருந்தா குமுதம் என்ன,Readers' Digest கூட கதையை வெளியிட்டு பாராட்டியிருக்கும்.

பாலா

said...

கதை நல்லா போகுது பொட்டீக்கடை சத்யா. ஆனா அவா என்ன நினைப்பா என்ன பேசுவான்னு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை தான் இங்கன எழுதியிருக்கீங்க. அவாளை வெறுத்தே பழக்கமான உங்களால அவா எப்படி பேசுவா என்ன பேசுவான்னு எழுத முடியாது தான்.

பார்ப்பணர் + சூத்திர ஆ ஆத்துப் பொண்ணு = சாக்கடை ங்கறதை

செட்டியார் வீடா இருந்தா

செட்டியார் + செட்டியார் இல்லாதவங்க வீட்டுப் பொண்ணு = சாக்கடைன்னும்

வன்னியர் வீடா இருந்தா

வன்னியர் + வன்னியர் இல்லாதவங்க வீட்டுப் பொண்ணு = சாக்கடைன்னும்

தேவர் வீடா இருந்தா

தேவர் + தேவர் இல்லாதவங்க வீட்டுப் பொண்ணு = சாக்கடைன்னும்

சொல்லியிருப்பாங்க. அவாளைப் பத்தியும் எழுதுங்க.

ஆனா என்ன நீங்க ஆதி முதல் காரணம்ன்னு அவாளைப் போட்டுத் தாக்குறதுல தான குறியா இருக்கீங்க. வாழ்க உங்க சமூக நீதி என்ற சாதிக்கொரு நீதி.

said...

:)))))))

Anonymous said...

முன்கதை, பின்கதை....கலக்குறேள் போங்கோன்னா !!!!

said...

ஆடுங்கோன்னா....
நல்லா அடிச்சி
ஆடுங்கோன்னா....