
வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே, சோம்பேரித்தனமும் எரிச்சலும் சேர்ந்துக் கொ"ல்லும்". அதனாலேயே திங்கட்கிழமைகளில் 8:40 மணிக்கும் அலுவலுக்குச் சென்றதாக சரித்திரம் இல்லை. அது இன்னும் சில காலத்திற்கு அப்படியாகவே தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. இன்றும் அப்படித்தான் ஆனால் வழக்கத்திற்கு "எதிராக" முரண்டுபிடித்து 8:10க்கே கிளம்பி 8:20 போல் அலுவலுக்குச் சென்று இவ்வாரத்திற்கான் செயலியை, செயல் நிரலியை (எப்படி சொல்றதுன்னு தெரியல - வீக் ஷெட்யூல்னு வெச்சிக்கோங்க) எனக்கு உதவியாக இருக்கும் வரைவாளருக்குக் கொடுக்கவேண்டி, மேலும் பல site issuesயையும் நினைத்துக்கொண்மடே நம்ம செஞ்சிருத்தையைக் கிளப்பிக்கொண்டுச் சென்றேன். இடது ஓரத்தில் இருக்கும் மிதிவண்டி பாதையையொட்டிய முதற்பாதையில் தான் எப்பொழுதும் செல்வது வழக்கம். ஏனென்றால் அது மிதவேகத்தில் ஓட்டுபவர்களுக்கானது. காலை நேரங்களில் அவனவன் காரை அவசரகதியில் ஓட்டுவதால் இடப்பாதையானது காலியாக இருக்கும் அங்கு 3வது கியரைப்போட்டு முருக்கினால் 70 கிமீ வேகத்தில் 7 நிமிடத்தில் அலுவலை அடையலாம்.
அப்படித்தான் இன்றும் முறுக்கினேன். வழியில் கார் சேல் போட்டிருந்ததால் இடப்பாதையில் சிறிது போக்குவரத்து நெரிசல். சரியென்று கியரைக்குறைத்து இரண்டாவது கியரில் 40 கீமியில் தான் சென்றுக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டி கொஞ்சம் வேகத்தைக்கூட்டிய மாதிரித் தெரிந்ததால் நானும் வேகத்தக்கூட்டினேன்...எனக்கும் அந்த வண்டிக்கும் இடையேயான இடைவெளி 10-12 மீட்டர் இருக்கும். இடையே நாளை நடக்கவிருக்கும் க்ளையண்ட் மீட்டிங்கில் பேசவேண்டிய விடயங்களைத் தயார் செய்துகொண்டேயிருந்தேன்...முன்னால் சென்றுக் கொண்டிருந்த அந்த வெள்ளைநிறக்கார் பின்னோக்கி வருவது போல் உணர்ந்தேன், ஆனால் நான் தான் 60ல் முன்னேறிக்கொண்டிருந்தேன். ..அடடா அவனுடைய அபயவிளக்கு எரியவில்லையே????
சுதாரித்து இருபிரேக்குகளையும் பலம் கொண்டமட்டில் அழுத்தினேன். முன் சக்கரம் அவனது காரில் மோதாமல் இருக்கவேண்டி வலப்பக்கமாக திருப்பினேன். திருப்பியதில் அப்படியே இடப்பாதையில் 180 டிகிரியில்...டம், டமால், கிரீச்ச்ச்...ச்சக் ச்சக்...கால் முட்டித் தேய்ந்துகொண்டிருக்க, கையை ஊன்பதற்கு முன்பாக தார்சாலையில் கைமுட்டி டங்கென இடித்து சர்ரென்று இழுத்தது...அதேவேகத்தில் மண்டை நொங்கென இடித்தது. இவையனத்தும் ஒரு நொடியில் நடந்தே முடிந்துவிட்டது. எனது உடற்கவச உடுப்பு சில இடங்களில் தேய்ந்து உள்ளிருக்கும் பஞ்சு வெளியே துருத்திகொண்டிருந்தது. சாய்ந்த வண்டியின் எஞ்சின் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறது...முன்னால் நின்ற கார் அப்படியே நிற்கிறது...பின்னால் ஒரு BMW 4x4 இருந்து ஒருவர் ஓடிவந்து ஆர் யூ ஓகே? எங்கிறார். முன்னால் நிறுத்திக் கொண்டவர் இறங்கி என்ன செய்வதென்று தெரியால் அரைக்கதவைத் திறந்த நிலையில் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு களேபரத்திலும், குளு குளு கண்ணாடியோடு என்னுடையத் தலைக்கவசம் என்னுடைய மண்டையிலேயே இருக்கிறது. அப்படியே வண்டியைத்தூக்கி நிறுத்தி இடது ஓரத்தில் பார்க்கிங் செய்துவிட்டு ப்ளாட்பாரத்தில் அமர்ந்தேன். பின்னால் இருந்தவர் 000 போடவா என்றார். நான் கையையும் காலையும் தூக்கிப்பார்த்தேன் மடக்கிப்பார்த்தேன், எவ்வித சத்தமும் வரவில்லை ஆகையால் பெரிதான எலும்பு முறிவு எதுவுமில்லை என முடிவு செய்து, வேண்டாமெனக் கூறி அவருடைய உதவிக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்தேன்.
இப்போது தான் முன்னால் நிறுத்தியிருந்த காரில் இருந்த நபர் இறங்கி வந்து கேட்டார்...ஆர் யூ ஆல்ரைட், மைட்? அயாம் சாரி, த ப்லோக் இன் ஃப்ரண்ட் ஆஃப் மீ சடன்லி டர்ண்டு வித்தவுட் இண்டிகேட்டிங்...தட்ஸ் ஒய்...என இழுத்தார். நானோ தலை தப்பியது ஹெல்மட் புண்ணியம் என நினைத்து, டோண்ட் ஒர்ரி மைட், அயாம் ஆல் குட் எனக்கூறி அவரை வழியனுப்பிவைத்து...ஆபிஸுக்கு சிக் லீவ் போட்டு, நானே மெடிக்கல் செண்டரில் அப்பாயின்மெண்ட் வாங்கி கையில் காலில் என ப்ளாஸ்திரி போட்டு, வண்டியை பட்டறையில் விட்டுவிட்டு...காப்பீட்டு அலுவலிற்கு தொலைபேசிவிட்டு என்னுடைய ஹெல்மெட்டை தடவிப்பார்த்தேன், என் காலில் இருந்ததைவிட இருமடங்கு அதிகமான சிராய்ப்பு. என் தலையைத் தடவிப்பார்த்தேன், அது அப்படியே ஒரு உரோமம் கூட உதிராமல் அப்படியே இருக்கிறது இன்னமும்...
ஆகவே தலைக்கவசம் அணியுங்கள் மண்டைக்குள் என்னவாவது இருக்குதோ இல்லையோ மண்டை அப்படியே இருக்கவேண்டுமென்றால்...
பிகு: ஆம்புலன்ஸிற்கோ, காவல்துறைக்கோ தகவல் கொடுக்காததற்கான காரணம் நன்றாக மூச்சு விடும்போதே லைப் சப்போர்ட்டும், சலைனும் ஏற்றிகொல்லுவார்கள் என்பதினால் தான் :D





















