வந்து இறங்கியதிலிருந்தே வாந்தி பேதி தவிர்த்து இருமல் தலைவலி, மூக்கடைப்புச் சளி, பித்தம் மற்றும் இன்னபிற என்று இருக்கிற ஒவ்வாமையெல்லாம் ஒரு சேரத் தொ(ஏ)ற்றிக் கொண்டு வந்ததில் இன்று முழுதும் அலுவலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு மருத்துவர் சிங் அவர்களைச் சந்தித்துவிட்டு ஸ்கைப்பில் மொக்கைப்போட்டுவிட்டு உருப்படியாக! ஏதாவது செய்யவேண்டுமென்று யோசித்ததில் பதிவெழுதலாம் அல்லது நான் சந்தித்த அல்லது என்னை நினைவில் வைத்து என்னையும் ஒரு பொருளாக மதித்து 2 மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு நன்றியாவது சொல்லலாம் என இதை எழுதுகிறேன். இதை எழுதி முடிக்கும்பொழுது நினைவில் இருக்குமோ இருக்காதோ? ஏனென்றால் சந்தித்தவர்களில் பாதி பேரின் முகம் கூட நியாபகம் இல்லை. இதற்கு என்னுடைய நியாபக சக்தியைக் குறைசொல்ல முடியாது மாறாக நான் விமானத்தில் மறதியாக :D விட்டுவந்த வாசிப்புக் கண்ணாடியை வேண்டுமானால் குறை சொல்லலாம். எனவே, என்னுடைய வருகையையொட்டி நான் தகவலனுப்பிய சொற்பனமானவர்களில் எனக்கு பதிலளித்தவர்களுக்கும், அவரவர் பணி மற்றும் இன்னபிற பலுவினால் பதிலளிக்காதவர்களுக்கும் முதல் நன்றி. வருவதையொட்டி தகவலை தவழவிட்ட தகவல் ஒலி(ளி)பரப்பாளர்களான லக்கி, அதிஷா, முரளிகண்ணன் ஆகியோர்களுக்கு முதலுக்கு முந்தைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். லக்கியிடம் முன்னமே கதைத்திருக்கிறேன், அதனால் அவரை ஓரளவுத் தெரியும். அதிஷா, முரளி ஆகியோரின் பதிவுகளை அவ்வப்போது பார்த்துவந்திருக்கிறேன். முரளி ஓரளவு சீரியசான ஆசாமியென்பதும்...அதிஷா ஒருகாலத்தில் நான் செவ்வனே செய்துவந்த காமெடியான பின்னூட்ட மொக்கச்சாமி என்பதுமாக கணித்து வைத்திருந்தேன். என்னவோ லக்கியும், முரளியும் போட்டிருந்த பொட்"டீ" கடை இணைப்பினால் பல மாதங்களுக்குப் பிறகு ஒரு பத்திருவது பேர் என்னுடைய வலைப்பூவிற்கு வந்து போயிருந்தனர். ஆகையால் இவர்களுக்கு சிறப்பு நன்றி. அத்தோடு நான் வணக்கம் சொன்ன அனைவருக்கும், எனக்கு வணக்கம் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.
அது மட்டுமல்லாமல், இன்ப அதிர்ச்சியாக வரமாட்டேன் வரமாட்டேன் என்று பூச்சாண்டி காட்டிய முன்னமே வந்து சேர்ந்த பாலபாரதி, முன்னமே தகவல் கொடுத்துவிட்டதால் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத முகத்துடன் வந்திருந்த ரோசா அவர்களுக்கும் நன்றி. எழுத்து எவ்வளவு வலிமையான முகமூடி என்பதற்கு ரோசாவைப் போல் பலரையும் நினைவுகூர முடியும். நான் ரோசாவை ஒரு கம்மூனிஸ புரட்சியாளனாக எந்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஏனென்றால் அவருடைய எழுத்துக்கள் 2004 பிற்பகுதியில் வாசித்திருக்கிறேன். சிம்பு குறி அறுக்கப்பட வேண்டும் என அவர் எழுதிய பதிவு இப்போதைக்கும் எனக்கு சிரிப்பு மூட்டக்கூடிய ஆனால் ஆழமாக நம்மையே கேள்விக்குட்படுத்தும் பதிவு. இவரால் தான் நான் கூட குறி எனும் சொல்லை அனாசயமாகப் பதிவில் பயன்படுத்துகிறேன் என்றால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்? ஆனால் அவர் என்னைப் போலவே இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற முகத்துடன் இருந்தார். அதே போல் கவிஞன் அருட்பெருங்கோ...அருட்பெருங்கோவின் அறிமுகம் நான் பதிவுகளை எழுதத் ஆரம்பித்த 2005ன் நடுப்பகுதியில் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஏன் இப்பொழுது கூட நான் (சு)வாசிக்க விரும்பும் பொழுது அமராவதி ஆற்றங்கரையில் அமர்வதுண்டு. காதல் ரசம் பனிக்கூழாய் கொட்டும். அவருக்கும் நன்றி. எதிர்பார்க்காத ஆனால் டிசெப்டிவான இன்னொரு அன்பர் சுந்தர். யோவ்ராம் சுந்தரை அவ்வப்போது வாசித்து வந்திருக்கிறேன். அவர் அதீதனாக மாறியபோது சில சமயங்களில் என்னை எனக்கே காட்டியிருக்கிறார். (அவர் தான் அதீதனாக மாறினாரா அல்லது அதீதன் சுந்தராக மாறினாரா என்பது பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்)இவருடைய மறுபதிப்பு அல்லது மீள்பதிப்பு எழுத்துக்களுக்கு நான் ரசிகன். இவரை சந்தித்ததிலும் மிகவும் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள். டோண்டு ராகவன், நர்சிம் என்று நான் சந்தித்த நண்பர்களுக்கும் நன்றி. சிலரது பெயர்கள் நினைவில் இருந்து நழுவி :D விட்டதால் அவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களை சில மணி நேரங்கள் காக்கவைத்ததால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். யார் மன்னித்தாலும் பாலபாரதி மன்னிக்கமாட்டர் ஏனென்றால் ...அது அவருக்குத்தான் தெரியும். மாம்ஸ்...கூல் டவுன்...அப்புறம் நான் குளிச்சிட்டு தான் காபீ டேவுக்குள் வருவேன்னு அடம்புடிக்கக் கூடாது...சொல்ல்லிப்புட்டேன்.
இந்த முறையும் நான் வேண்டாமெனச் சொல்லியும் காலையிலேயை விமான நிலையத்தில் வந்து என்னோடு அலைந்து திரிந்த வரவணையானுக்கெல்லாம் நன்றி சொல்லி கொச்சைப் படுத்தமுடியாது. அதே போல் வரமாட்டேன் வரமாட்டேன் என்று பம்மி கடைசியில் டாஸ்மாக் வரை வந்த சுகுணாவிற்கும் நன்றி கிடையாது. சுகுணா deserves something better. அடுத்த முறையிலாவது மறக்காமல் இருக்கிறேனா என்று பார்க்கிறேன். துணைவியாருக்கு கொடுக்கவேண்டிய பரிசுப் பெட்டியையே எனது பயணப் பெட்டியில் போடாமல் விமானமேறியவன் நான். ஒரு தடவை என்னுடைய இடது கையில் பென்சிலை வைத்துக்கொண்டே பென்சிலை தொலைத்துவிட்டதாக அழுதவன் நான். எங்கப்பா கூட நான் பெரியவனாகி மனைவியோடு திருவிழாவிற்குச் சென்றால் சுலபமாக தொலைத்துவிட்டு வெறுங்கையோடு வருவேன் என்று கலாய்ப்பார். இப்போது புரிகிறதா நான் என் வாசிப்புக் கண்ணாடியை தவறவிட்டதில் தவறேதுமில்லையென்று?
இப்படியாக டாஸ்மாக்கில் நான் ஒரு சூடான பியருடனும், மற்றவர்கள் சோமபானத்துடனும் தொட்டுக்கொள்ள சுந்தர் கையோடு கொண்டுவந்த்திருந்த ஊறுகாயுடனும்...புகையுடனுமாக ஒரு தோசையோடு கழிந்தது இரவு. அடுத்த நாள் விடிகாலையில் எழுந்து வரவணையானூக்கு குட்பை சொல்லி சதாப்தி தொடர்வூர்தியில் துணைவியோடு சண்டைபோட்டு பெங்களூரூ போய் சேர்ந்த பொழுது மணி காலை பதினொன்றரை. ஆட்டோக்காரர் நான் கூறிய முகவரிக்கு வழி தெரியாமல் இந்திரா நகர் கே எஃப் சி தாண்டி இறக்கிவிட்ட பொழுதில் செந்தழல் ரவி அவருடைய சொந்த காரில் வந்து அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மதிய உணவாக சூடான பொங்கலும், கோஸ் பொரியலும், தேங்காய் சட்னியும் உடுப்பி சாம்பாருமாய் மணமணத்தது அவருடைய வீடு. கொஞ்ச நேரம் அவருடன் மொக்கை போட்டுவிட்டு மணி பார்த்தபோடு நன்பகல் பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது. மூன்றரை மணிக்கு எனக்கு பெங்களூரிலிருந்து கோவாவிற்கான விமானம் இருந்ததால், மொக்கை போட்டபடியே விமான நிலையத்தில் எங்களை இறக்கி விடுவதற்காக அவருடைய மகிழ்வுந்தை இயக்கியபடியே பார்ப்பனீயமும், பணியாரமும் என்று நியூரோசிந்தெட்டிக் ரிசெர்ச் பற்றி பேசி வந்ததில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த என் துணைவியார் விமான நிலையம் வந்தடைந்த பொழுது உறங்கிப் போனார்.
சும்மா சொல்லக்கூடாது. பெங்களூருவின் புதிய விமான நிலையம் பிரிஸ்பேன் விமான நிலையத்தைவிட தூய்மையாகவும் விசாலாமாகவும் இருந்தது. அப்படியே தரக்கட்டுப்பாட்டை பராமரித்தால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இனி வரவிருக்கின்ற மற்ற நகரங்களின் நிலையங்களிற்கு ஒரு பென்ச் மார்க்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போதைய ஷொட்டு:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு. முன்பெல்லாம் வெளியே இருக்கு பொட்"டீ"க்கடைகளில் டீ குடிப்பதற்கே அருவருப்பாக இருக்கும். பீடி தொடங்கி இன்னபிற தங்கராஜா பஞ்சடைத்த வெண்சுருட்டு வரை வகைவகையாக ஊதிக் கொண்டிருப்பார்கள் கூடவே, இரு இழுப்புக்கு மூன்று முறை தூ தூ வென துப்பிக் கொண்டிருப்பார்கள். இப்போதைக்கு அந்த தொல்லையிலிருந்து தற்காலிகமான விடுமுறை. மேலும் முக்குக்கு முக்கு நிற்கும் ஆட்டோக்காரர்களும் ஊதிக் கொண்டிருப்பார்கள். அதுவும் கட்.
இப்போதைய எத்து:
சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு. நூறு ரூபாய்க்குக் குறைந்து கேட்பதேயில்லை. வேண்டாமென்று கூறினால் எவ்ளோ சார் குடுக்கற? என பாண்டிபஜாரில் பேரம் பேசுகிற கணக்காய் இருக்கிறது.
10/29/2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
athukuthan...
இங்கே ஒரு பின்னூட்ட டாபருத்தனம் செய்தால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே தோழர்? :-)
முத்து தமிழினி,
அதுக்குதான்னா எதுக்குதான்?
லக்கி,
இதென்ன கலாட்டா...நீங்க பின்னூட்ட டெரியர் தனமேகூட பண்ணிக்கலாம்...
ஆனா பதிவ யாராவது ஒரு தரமாவது படியுங்க சார்...:3
//அடுத்த நாள் விடிகாலையில் எழுந்து வரவணையானூக்கு குட்பை சொல்லி//
அடேய்ய்ய் டுபுக்கா ! குட்பை சொன்னானாம்லா....
நள்ளிரவு நாலு மணிக்கு குளிச்சிட்டு அம்மணமா வந்து குட்மார்னிங் சொல்லி திகிலடிக்க வச்சத மறந்துட்டியா, அடிச்ச ஆஃப் ஓல்ட் காஸ்க் எங்க போச்சுன்னே தெரியலை :P
மூச்சு விடாமல் எழுதியிருக்கிங்க போல?
இத்தனை பெரிய பந்தியை உங்களால தான் சத்யா எழுத முடியும்.
இந்தியாவில் இந்த முறை ஜோசியம் சொல்லும் கிழவியிடம் திட்டு வாங்கவில்லையா?!!
:P
//கோபித்துக் கொள்ள மாட்டீர்களே தோழர்? :-)//
லக்கிண்ணா..ரொம்ப கோபிப்பாராம்? :P
சந்திப்பிலும் அதற்குப் பின்னர் பாரிலும் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது.
திரும்பவும் சந்திப்போம்!
//நள்ளிரவு நாலு மணிக்கு குளிச்சிட்டு அம்மணமா வந்து குட்மார்னிங் சொல்லி திகிலடிக்க வச்சத மறந்துட்டியா, அடிச்ச ஆஃப் ஓல்ட் காஸ்க் எங்க போச்சுன்னே தெரியலை :P//
வேற எதாச்சும் கணா கண்டுகிட்டு வாய பொலந்து தூங்கிட்டு இருக்கும் போது வேற எதுனா பாத்தா அப்படிதாம் இருக்கும்...
;)
***
//மூச்சு விடாமல் எழுதியிருக்கிங்க போல?//
மூச்சு விடாம எழுத முடியாது. யார்னா எழுதி கொடுத்தத வேணா அப்லோடு செய்யலாம்.
//இத்தனை பெரிய பந்தியை உங்களால தான் சத்யா எழுத முடியும்.//
ஹலோ தூயா...அது பந்தி இல்ல...பத்தி...ஆமா எப்போது சாப்பாடு சமையல்னே இருந்தா பந்தி தான் நாபகம் வரும்
கிகிகி...
//இந்தியாவில் இந்த முறை ஜோசியம் சொல்லும் கிழவியிடம் திட்டு வாங்கவில்லையா?!!//
அப்போ கூட இருந்தது வேறொரு ஆள்...
:P
***
//திரும்பவும் சந்திப்போம்!//
சுந்தர்,
திரும்பவும் சந்திப்போம்! அதே மகிழ்வுடன் :D
உங்க அளவுக்கு எங்களுக்கு தமிழ் தெரியாது சத்யா..
சமையல் நினைப்பு எனக்கா? ம்ம்கும் சொன்னாங்க சொன்னாங்க..மீன் பிடிக்க போய் நண்டு பிடிச்சிட்டு வந்து, அதை சமைச்சது நாங்க தானே..:P
இந்த அட்டு பதிவில் நான் ஏன் இன்னும் பின்னூட்டம் இடவில்லை ???
வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்...
Post a Comment