இப்பொழுதெல்லாம் எழுதுவதற்கே ஆயாசமாக உள்ளது...முன்போல் வேலைப்பளு மட்டுமிருந்தால் பரவாயில்லை இப்பொழுது இன்னொரு கடமையும் :) கூடவே ஒட்டிக்கொண்டிருப்பதால் வேலை, வீடு, சமையல்,தூக்கம் + ஸ்கைப்பிங் என்று இவ்வருடத் தொடக்கத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது. ஸ்கைப் செய்வதால் இருக்கும் இன்னொரு சந்தோசம் என்னவென்றால் டிவியில் வரும் ஃபாரீன் கரெஸ்பாண்டண்ட், கெட் அவே, ஷெஃப் ராம்சே'ஸ் கிட்சன் நைட்மேர்ஸ் போன்றவற்றை தவறவிடாமலும் அதே சமயம் இணையத்தில் வட அமேரிக்கத் தேர்தல் நிலவரங்களையும், சில வலைப்பதிவுகளையும் தவறவிடாமல் பார்த்துக்கொண்டு நிகழ்காலத்தை ஒட்டியேப் பயணிக்க முடிகிறது. ஆனால் எழுதும் பொழுது இவ்வகையான பல்பணிகளில் ஈடுபடமுடிவதில்லை அதனாலேயே எழுதுவதற்கு அயற்சியாயிருக்கின்றது. மேலும் முன்போல் நம்மை சுண்டிவிடுகின்ற அல்லது எழுதத்தூண்டுகிற மாதிரியான பதிவுகளும் அவ்வளவாக வரவில்லை. அதைவிட இணையத்தில் கருத்துக்களைக் கொட்டி பரிமாற்றம் செய்துக் கொண்டிருப்பதைவிட நிச நிகழ்வுலகில் கம்மூனிஸம் (இந்தியாவைத் தவிர்த்து) இட ஒதுக்கீடூ, கிரீமி லேயர், மனுநீதியின் சனாதன சமதர்மத்தை எரிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியமாகிறது. உதாரணத்திற்கு நம் குடும்ப உறுப்பினர்கள், நட்பு வட்டம் (அது கொஞ்சம் பெரியது அதில் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் பெரும்பாலும் ஹார்ட் பிரேக்கிங்காக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது)
ப்ரெட்ரிஷ் எங்கெல்ஸ், கார்ல் மார்க்ஸ் ஆகிய சமூக விஞ்ஞானிகளின் பொருளாதார, அரசியற் தத்துவங்களைப் படித்த வலதுசாரிகளென்று அறிவித்துக் கொண்டவர்கள் அதை ஏன் மறுக்கவேண்டுமென்று ஒரு துளியளவு கூட கருத்தை வைக்கமுடியாது என்பதே உண்மை. அவ்வாறு கூறுகின்றவகள் நாம் வைக்கின்ற மய்யக்கருத்தில் சொல்லாடமுடியாது எங்கோ என்றோ எதற்காகவோ சிதறுண்டு போன சோவித் குடியரசைக் காரணம் காட்டி சிரித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் இன்று நாம் அறிந்தோ அறியாமலோ ஒட்டுமொத்த உலக நாடுகளின் அரசுகளும் கம்மூனிஸ தத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அல்லது மறைமுகமாகக் கம்யுனிஸக் கொள்கைகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் இன்றும் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற கச்சா எண்ணெயின் விலை மற்றும் உணவுப் பற்றாகுறை, அதிமுக்கியமாக இவையிரண்டும் ஒன்றோடு ஒன்றுமாகப் பிணைந்து ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற குளோபல் வார்மிங். நகரங்களில் எந்திர வாகனங்களில் இருந்து வெளிவருகின்ற கார்பன் மற்றும் கந்தக வாயுக்கள் காரணி என்றால் கிராமப்புறங்களில் ஆடு, மாடுகள் அசை போடுவதால் வெளிவருகின்ற மீதேன் வாயுக்கள் காரணியாகின்றன. ஆக நகரமோ,கிராமப்புறமோ எங்கேயுமே தூய்மையான காற்று என்பதற்கு பேச்சேயில்லை. இத்தோடு உணவுப்பற்றாகுறையும் சேர்ந்து கொண்டிருக்கிறது இப்பொழுது. சாம் மாமா வழக்கம்போல் வளரும்/வளர்கின்ற நாடுகளை கைகாட்டி குற்றஞ்சொல்லுகிறார்.அதாவது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினால் அவர்களின் உணவுப் பழக்கங்கள் மாறியதால் உலகில் உணவுப் பற்றாகுறை ஏற்பட்டதாக வட அமேரிக்க புஷ் மற்றும் அய்ரோப்பிய கூட்டமைப்பும் பிரச்சாரம் செய்கிறது. ஆம்...வளரும் நாடுகளால் தான் உணவு உற்பத்தி தடைபட்டது. ஆனால் வசதியாக மறக்கடிக்கப்பட்ட விடயம் என்னவென்றால், பன்னாடு நிறுவனங்களால் பிச்சை போடப்பட்ட தாவர எரிபொருள் உற்பத்தியினால் வளரும் நாடுகளின் உணவு உற்பத்தி இன்று உலகமே பஞ்சத்தால் அழியக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதே வலைப்பதிவுகளில் தான் சில காலங்களுக்கு முன் இடதுசாரி பதிவர்களால் அன்னிய பொருளாதார காலனியதிக்கமும், இந்திய பன்னாட்டு அடிமை எண்ணங்களும் வேறொரு ரூபத்தில் கிழி கிழி என கிழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தவர்கள், இன்று உலக உணவு மற்றும் விவசாயக் கழகத் தலைவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? அவரும் தாவர எரிபொருள் உற்பத்தியினால் தான் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், அதை சமாளிக்கப் போதுமான அளவு நிதி இருந்தும் கைகள் கட்டப்பட்டிருப்பதால் ஏதும் செய்யமுடியவில்லை என்றும் கூறுகிறார்.
ஆக உணவுப் பற்றாகுறை - கச்சா எண்ணெய் உற்பத்தி - மாற்றுத் தாவர எரிபொருள் - க்ளோபல் வார்மிங் - இவ்வனைத்தையும் ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திப் பார்த்தால் மேற்கு அல்லது அமேரிக்க அய்ரோப்பிய மறுகாலனியாதிக்கம் மிக அழகாகப் புலப்படும். இதையே தான் இடதுசாரி மற்றும் விளிம்புநிலைத் தோழர்கள் கடந்த வாரத்தில் ஜ்யோவ்ராம் அவர்களின் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு தொடர்பான பதிவொன்றில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இதே பொருளில் தான் தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் வளரும் நாடுகளின் பொருளாதார மாநாடும் தீவிரமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது மேற்கு காலனியாதிக்க மனோபாவத்தை சிறிதளவாவது அசைத்துப்பார்த்தது.
வார இறுதிகளில் தனியாக அமர்ந்து காபிக் கடையில் இரண்டு பெரிய காபியோடு நாளிதழின் கூடுதல் பக்கங்களைப் பார்ப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அதுவும் டவுன்சுவில் மாதிரியான சிறு நகரத்தில்...கிராமப்புறங்களின் கவ் கேர்ள்ஸை பார்த்துக் கொண்டு, காபி குடித்துக் கொண்டே நாளிதழ்களை வாசிப்பது சுகமான ஒரு பொழுதுபோக்கு தான். கடந்த வாரம் "தி ஆஸ்திரேலியன்" ஒட்டிதழான் இன்கொயரர்ல் ஒரு புத்தகத்தின் விமரிசனம் படித்தேன். மிகவும் கவர்ந்துவிட்டது, விலை மலிவுதான் என்றாலும் இம்மாத வரவுசெலவில் அதற்கு அனுமதியில்லை என்பதால் இப்போதைக்கு விமரிசனத்தைப் படித்ததை வைத்தே திருப்தியடந்து கொண்டேன்.அது David Rothkopf's "Superclass: The Global Power Elite and the World They Are Making". அவர் இப்புத்தகத்தில் உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தி வாய்ந்த தனி நபர்களைப் பற்றியும் அவர்களது அரசியல் செல்வாக்கினால் அவர்கள் எவ்வாறு மொனோபாலியாக அவர்களது துறையை தத்தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதைப் பற்றியே. சில தொழிலதிபர்கள் சில நாடுகளின் மொத்த பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கிறார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்று. அத்தோடு உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50% எக்ஸான் மொபில் நிறுவனத்தினர் வைத்திருக்கின்றனர் என்பதும், அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் உலகின் எந்தவொரு நாடும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது வரையறுக்கப்படாத உண்மை. 2004ல் 80 செண்ட்/லி ஆக இருந்த பெட் ரோல் இன்று ஆஸி $ 1.60 ஆக இருப்பது அவர்களால் தானோவென எண்ண் வைக்கின்றது.
19ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியில் எவ்வாறு வர்க்கப் புரட்சி ஏற்பட்டு கம்யூனிஸத்துக்கு வழி வகுத்ததோ, அதே போல் தான் இன்றைய உலக நாடுகளும் உள்ளன.எதையுமே ஒரு தனிப்பட்ட மனிதரால் ஒரேடியாகக் கட்டுப்படுத்தமுடியாத நிலையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிக்கின்ற ஒற்றை முதலாளித்துவப் போக்கை ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளும் எதிர்க்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தன்னைக் கம்மூனிஸ்டுகளாக அறிவித்துக் கொள்ள வேண்டும். என்ன அன்று தொழில் புரட்சியால் ஏற்பட்ட தொழிலாளர் வர்க்கப் புரட்சியாக இல்லாமல் கொஞ்சம் மித தன்மையான உலகின் ஒட்டுமொத்த குடிகளின் பெரும்பாண்மை அங்கமான நடுத்தரவர்க்கத்தினரை திருப்திபடுத்த ஒவ்வொரு குடியரசும் கடமைப்பட்டுள்ளது. அவ்வகையில் அவர்களால் கம்யூனிச புரட்சியை வெளிப்படையாக செய்ய முடியாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் தனது குடிகளை திருப்திப்படுத்த அவர்களும் கம்யூனிஸ கொள்கைகளைக் கையாண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
6/07/2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இன்னா மாமு? ஒண்ணுமே புரியலியே? :-(
இது தமிழ் தானா? நம்ம வழக்கமான ஸ்டைலு எங்கே போச்சி?
//இன்னா மாமு? ஒண்ணுமே புரியலியே? :-(
இது தமிழ் தானா? நம்ம வழக்கமான ஸ்டைலு எங்கே போச்சி?//
அதே தான் மாமு...நானே ரீஜெண்டு ஆயிட்டேன் போல...மொதல்லலாம் அதுவா வரும்...இப்போ கூட ப்ரூப் ரீட் பண்ணும் போது ரெண்டு தாயோழி ஒரு கண்டாரஓழின்னு சேக்கலாமான்னு பாத்தேன்...எங்கேயும் சரியா பொருந்துரா மாதிரி இல்ல. அந்த பேஷ்ஷன் (passion) இப்போ இல்ல போல :((
திரும்ப பார்முக்கு வாங்க
//இப்போ கூட ப்ரூப் ரீட் பண்ணும் போது ரெண்டு தாயோழி ஒரு கண்டாரஓழின்னு சேக்கலாமான்னு பாத்தேன்...எங்கேயும் சரியா பொருந்துரா மாதிரி இல்ல.//
அதுவெல்லாம் பொருந்துறாமாதிரி தான் இனிமே பதிவே எழுதணும்.
(லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்ஸோட தான் வரணும் என்ற டோனில் வாசிக்கவும்)
என்ன பிரச்சினை ? உடம்புக்கு ஏதாவது முடியலையா ?
கம்யுனீஸ்டுகள் நாங்கள் சொல்லி வருவதை நீங்களும் சொல்கிறீர்கள்.
கட்டுரை பரந்து விரிந்த தளத்தில் பல்வேறூ விசயங்களுக்கிடையே உள்ள பொதுவான உண்மைகளை சுருக்கமாக எடுத்துச் சொல்ல முயன்றுதான படிப்பவர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்னவோ. எனக்கு நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.
//என்ன அன்று தொழில் புரட்சியால் ஏற்பட்ட தொழிலாளர் வர்க்கப் புரட்சியாக இல்லாமல் கொஞ்சம் மித தன்மையான உலகின் ஒட்டுமொத்த குடிகளின் பெரும்பாண்மை அங்கமான நடுத்தரவர்க்கத்தினரை திருப்திபடுத்த ஒவ்வொரு குடியரசும் கடமைப்பட்டுள்ளது.//
இததான் நாங்க புதிய ஜனநாயக புரட்சி என்கிறோம். தொழிலாளி மற்றும் சீறுபான்மையாக உள்ள விவசாயிகளின் கூட்டில் தொழிலாளர் வர்க்க புரட்சி செய்யும் மேற்கு உலக புரட்சி இங்கு சாத்தியமில்லை என்கிற உங்களது புரிதல் இந்த அம்சத்தில் சரிதான்.
அது மக்கள் ஜனநாயக புரட்சி, அதாவது ஒவ்வொரு நாடும் தனது நாட்டை சுரண்டும் அன்னிய மூலதனத்தையும், அதற்க்கு உதவி செய்யும் உள்நாட்டு தரகு-நிலபிரபுத்துவ அதிகார வர்கத்தையும் தூக்கியெறியும் புரட்சியே ஆகும்.
ஆனால் அது நீங்கள் சொல்லுவது போல நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றை திருப்தி படுத்துவது என்பதை பிரதானமாக கொண்டிருக்க முடியாது. மிகப் பெரும்பான்மை வர்க்கம் நடுத்தர வர்க்கம் என்ற உங்களது தவறான கருத்திலிருந்துதான் இது உதயமாகிறது. உண்மையில் விவசாயிகளே இங்கு பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.
அதனால் நடுத்தர வர்க்கம்(குட்டி முதலாளி) உள்ளிட்ட தேசிய முதலாளி, தொழிலாளீ, உதிரி பாட்டாளி, கூலி விவசாயி, நடுத்தர-பணக்கார விவசாயி இவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த நலனை பிரதிபலிப்பதாகவே புரட்சி இருக்கும்.
அது நீங்கள் சொல்லுவது போல மிதமானதாகவும் இருக்காது. சிக்கலான பிரசவம் போல நீண்ட, கொடுமையான வலியெடுக்கும் விதமாகவே நடந்த்தேறும்(நேபாளம், சீனா, வியத்நாம்).
நன்றி,
முக்காலமும் உணர்ந்த முனிவன்.
அய்யா முக்காலமும் உணர்ந்த முனி...
கம்மூனிஸ்ட் நாங்கள்லாம்...னு ஆரம்பிச்சிருக்கீங்க...உங்கள கம்மூனிஸ்ட்டுன்னு எப்படி நீங்களே சொல்லிக்க முடியுது? கம்மூனிஸ்டுக்கு நீங்க கொடுக்கற வரையறை என்னா? இப்பிடி கேள்வி கேக்க சொல்லோ நீங்க என்ன பதில் சொல்லுவீங்கன்னு தெரியல...ஆனா மார்க்ஸும், எங்கெல்ஸும் சொல்லிக்கினு இருந்த கம்மூனிஸ்டுங்க இப்போ ஒலகத்துலே இல்ல...முதலாளித்துவத்தை எதிர்த்து உழைக்கும்வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டியது கம்மூனிஸம்னா அது இப்போ எந்த நாட்டுல இருக்கு? வறட்டுத் தேசியங்களான் சீனா,வியத்னாம்,நேபாளத்தில் கம்மூனிஸம் தழைக்குதுன்னு சொன்னீங்கன்னா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு எனக்கு பிரியரா மாதிரி சிரிக்கத் தான் முடியும். எப்படி இன்றைய சீனாவில் கம்மூனஸத்தின் பெயரால் உலகளாவிய அளவில் முதலாளித்துவ நடைமுறையை சமகாலத்தில் ஆதரித்து வருகின்றதோ அதற்கு தகுந்தாற்போல் மற்ற கம்மூனிஸ நாடுகளும் மாறிக் கொள்ள வேண்டுமென்பது தான் உண்மை.
எங்கெல்ஸின் கம்மூனிஸம் அடித்தள உழைக்கும் வர்க்கம்(19ம் நூற்றாண்டின் அய்ரொப்பிய பெரும்பாண்மை அங்கம்) எதிர்கொண்ட பிரச்சினைகளைப் போன்று தான் இன்று வளர்ந்த நாடுகளில் உழைக்கும் குடும்பங்கள் (மிடில் கிளாஸ்) எதிர்கொள்ளும் பிரச்சீனைகளும். (எகா...மாதச்சம்பளத்தில் பாதிக்கும் மேல் வீட்டு வாடகையும், எஞ்சியது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் வாழ்க்கைமுறையும் உள்ளது)
கலகம் செய்து உரிமையை பெறுவது கம்முனிஸம் என்றால் கலகம் செய்து அரியாசனத்தைப் பறிப்பது கம்முனிஸம ஆகாது. அரியாசனத்தில் அமரும் எவரும் முதலாளித்துவத்தை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பது தான் உண்மை.
அதனால் தான் அவுசுதிரேலிய பிரதமர் கூட சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கார்ப்பொரேசனின் மாநாட்டில் கச்சா எண்ணெயின் உலக முதலாளி எக்ஸான் மொபிலுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில் இருக்கும் அரசியல் என்னவாக இருந்தாலும் அட் தி எண்ட் ஆப் த டே...மிடில் கிளாஸ் கஷ்டப்பட்றதே என்ற ஒரு பரிவினால் தானே...கம்முனிஸத்தின் ஆணிவேறும் கம்பேஷனேட் கிரவுண்ட்ஸ் தானே அதுக்கப்புறம் தானே ரெபெல்லியன்?
what a thoughts....!
keep it up...bro..
thank you....
//இப்பிடி கேள்வி கேக்க சொல்லோ நீங்க என்ன பதில் சொல்லுவீங்கன்னு தெரியல...//
ஏதோ பெரிய பிரபஞ்ச்த்தின் சிக்கலான கேள்வி போல கேட்டுவிட்டு நீங்களே புல்லரிப்பது பார்க்க நன்றாகவே இருக்கீறது. ஆனால் இது ஒவ்வொரு கம்யுனிஸ்டும் மிக சாதரணமாக எதிர்க் கொள்ளும் கேள்விதான் என்பதை சிரம் தாழ்த்தி 'மேதை' பொட்டீக்கடை யிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது கம்யூனிச அறிவு குறித்து வியந்து விட்டேன். ரொம்ப அதிகமாக படிக்கிறிர்கள் போல இருக்கு... நல்லது அதுவும் குறிப்பாக சீனாவை கம்யுனிஸ்டு நாடு என்று சொன்னீர்களே... ரொம்ப அருமை... மிகவும் மகிழ்ந்து சிரித்த ஜோக். தயவு செய்து அடுத்தவரின் மூளைக்குள் உட்கார்ந்து சிந்திக்கும் பழக்கத்தை விடுங்கள். அப்படி செய்வதை ஆக்டிங் டூ ஸ்மார்ட்டு என்று சொல்வார்கள்.
//ஆனா மார்க்ஸும், எங்கெல்ஸும் சொல்லிக்கினு இருந்த கம்மூனிஸ்டுங்க இப்போ ஒலகத்துலே இல்ல...//
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என்னா சொன்னாங்கன்னே போட்டீக்கடைக்கு தெரியாது என்பதை இந்த சின்ன பின்னூட்டத்தில் உள்ள சில பல காமெடி கருத்துக்களிலிருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. (ஆக்டிங் டூ ஸ்மார்ட்டு என்று சொல்வார்கள்.)
//முதலாளித்துவத்தை எதிர்த்து உழைக்கும்வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டியது கம்மூனிஸம்னா அது இப்போ எந்த நாட்டுல இருக்கு?//
இந்த வரிகள் ஒன்று போதும் மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் எந்தளவுக்கு படித்து கம்யுனிஸம் என்றால் என்னவென்று எந்தளவுக்கு புரிந்து கொண்டு வாதிடுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள.. எனக்குக் கூட டர்ர்ர்ர்ர்ர்ர் என்று பிரியற மாதிரிதான் சிரிப்பு வருது..
ஆஸ்திரேலிய பிரதமரின் அந்த கோரிக்கையே மிக மொள்ளமாறித்தனமானது ஏனேனில் பெட் ரோல் விலையுயர்வில் நிதி மூலதனம்தான் மிக முக்கிய காரணியாக இருப்பது வெள்ளிடை மலையாக தெரியும் பொழுது அவர் பெட் ரொல் பொருள் தயாரிப்பு கம்பேனியிடம் கோரிக்கை வைப்பது சுத்தமான மொள்ளமாறித்தனம். நியாயமாக அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளில் பெட் ரோல் மீது செய்யப்படும் பியுச்சர்ஸ் டிரெடிங்கை தடை செய்யவல்லவா அவர் கோரிக்கை வைக்க வேண்டும். அதை செய்தால் அவரது ஆஸ்திரேலியன் வங்கி செருப்பால் அடிக்காது அவரை?
//அதனால் நடுத்தர வர்க்கம்(குட்டி முதலாளி) உள்ளிட்ட தேசிய முதலாளி, தொழிலாளீ, உதிரி பாட்டாளி, கூலி விவசாயி, நடுத்தர-பணக்கார விவசாயி இவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த நலனை பிரதிபலிப்பதாகவே புரட்சி இருக்கும்.//
நான் போன பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த மேலேயுள்ள இந்த வரிகள் புரிந்ததா? நடுத்தர வர்க்கமும் அதில் வருகிறது.
அப்புறம் இன்னொரு கற்பனையான கேலிக் கூத்து, அதாவது அதிகாரத்துக்கு வந்தா முதலாளிக்கு சேவை செய்தே தீர வேண்டும் என்பது. இது ஒரு அம்சத்தில் சரி, இன்னொரு அம்சத்தில் கோமாளித்தனம். ஏற்கனவே இருக்கின்ற அரசை தூக்கியெறியாமல், சமூக பொருளாதார அடிபப்டையின் பிற்போக்கு தன்மையில் மாற்றம் கொண்டு வராமல் அரியணை ஏறினால் முதலாளிக்குத்தான் சேவை செய்ய வேண்டியிருக்கும் என்ற அம்சத்தில் சரி. அரியணை ஏறாமலேயே புரட்சியை நிறைவு செய்திட முடியுமா என்றால் இல்லை. அதிகாரம் பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படுகிறது. அப்படி ஒரு அதிகாரம் இருந்தால் மட்டுமே பெரும்பான்மை மக்களுக்கு அரசு குறித்து இருக்கும் தேவையற்ற பயம், பண்பாட்டு பிற்போக்குத்தனம் இல்லாதொழியும். அப்படி ஒரு அதிகாரம் இருந்தால்தான் புரட்சியால் விரட்டப்பட்ட முதலாளி வர்க்கத்தை ஒடுக்க முடியும்.
பிரச்சினைகளை நேர்மையாக அணுகி விவாதம் செய்பவர் என்று நம்பி வந்தது எனது தவறு. உங்களது குதர்க்க புத்தியை விளம்பரப்படுத்தியதற்கு நன்றிகள்.
மு உ மு
மிக்க நன்றி மு அ மு...சாரி மு உ மு...
நானெல்லாம் அடுத்தவன் மூளைல ஒக்காந்து சிந்திச்சா தானே எழுதவே முடியுது...என்ன பன்றது.
Post a Comment