இணையத்தில் பலருக்குப் பரிச்சயமான முகம் என சொல்லமுடியாவிட்டாலும் பலருக்குப் பரிச்சயமான பெயர் என்று கூறுவதில் முரண் எதுவும் இருக்கமுடியாத பெயர் இயக்குநர் பா.சிவக்குமார். பாரம்பரியமிக்க செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன் தனிப்பட்ட ஆர்வத்தினாலும் முயற்சியினாலும் அவர் அடைந்த உயரங்கள் எண்ணிலடங்கா. அவர் தனிப்பட்ட முறையில் இயக்கிய குறும்படங்களும் சரி, லீனா மணிமேகலையுடன் இணைந்து பணியாற்றிய குறும்படங்களும் சரி, குறைந்தபட்சம் குடியரசுத் தலைவரின் விருதையாவதுப் பெற்றிருக்கின்றன. அதையெல்லாம் விட அவருடையப் குறும்படங்கள் சமூகத்தின் பிரச்சினைகளையும் சமூகத்தில் தனிப்பட்ட ஒருவரால் பரீட்சிக்கப்படும் முயற்சி எவ்வாறு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்னும் ஒரு சிறு புள்ளியிலேயே தொடங்கும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடிய குறும்படங்களாகும்.
அவருடைய குறும்படங்கள்
1. ஆயிஷா
2.உருமாற்றம்
3.வெள்ளைப்பூனை
உருவாக்கத்தில் இருக்கும் திரைப்படம்
1.செல்லம்மா
அனிமேஷன் குறும்படம்
1)த பவர் ஆஃப் சைலன்ஸ்
அண்ணன் சிவக்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து தற்போது இன்னுமொரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அது தான் இணையத்தின் முதல் சித்திர இதழ். இதுவரை அவருடைய முயற்சி அனைத்தும் வெற்றியடைந்தே வந்துள்ளது அந்த வகையில் இப்புதிய முயற்சியும் வெற்றியடைய எம்முடைய வாழ்த்துக்கள்.
தமிழின் முதல் இணைய சித்திர (காமிக்) இதழுக்கு இங்கே சொடுக்கவும்.
4/13/2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல ஒர் இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியற்கு மிக்க நன்றி
முயற்சிக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள், அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
லோடிங் நேரம் அதிகம் எடுக்கிறது. மேலும் காமிக்ஸ் எங்கே என்பதிலும் குழப்பம் இருக்கிறது...
முகப்பு பக்கம் மிரட்டுகிறது, அருமை. ஹேட்ஸ் ஆப் பார் த டிசைனர்.
எஸ்.விஜயனிடம் கேட்டு கொஞ்சம் பழைய காமிக்ஸ் கூட அப்லோட் செய்யுங்க ( செய்ய சொல்லுங்க)
சுந்தர், பிரபாஅ, ரவி
நன்றி!வருகைக்கும் க்ருத்துக்கும்.
ரவி,
எனக்கு விரைவாகவே இயங்குகிறது. இது முழுக்க முழுக்க கிரியேட்டிவ் முயற்சி. அதில் பழைய காமிக்ஸை எல்லாம் அப்லோடு செய்ய சொல்லி இயலாது. ஆயினும் அந்த் தள்த்தில் இருக்கும் முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
முகப்பில் உள்ள சேவலை சொடுக்கினால் சித்திர கதைப் பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். மிகவிரைவில் அதிகமான அளவு வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்
அட்டகாசமாக இருக்கிறது.....
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
இவையும், இரண்டு நாட்களுக்கு முன்னர் அத்தளத்தில் இருந்தவையும் அருமையான ஓவியங்கள். குழுவினருக்கு வாழ்த்துக்கள்!
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...
பகிர்விற்கு மிக்க நன்றி..நண்பரே
பிரகாஷ், பேரரசன்,
நன்றி.
சுந்தர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்னும் முழுமையான அளவில் முழுவீச்சுடன் சித்திர தளம் இயங்கும் என எதிர்பார்க்கிறோம்.
அருமையான புதிய முயற்சி!
இத்தளத்தில் முதலில் பார்த்த ஓவியங்கள் இன்னும் அருமை.
சிவக்குமார் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி - சொ. சங்கரபாண்டி
நல்ல வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
Post a Comment