10/18/2007

பரிணாம வளர்ச்சி


மேலே படத்திலிருப்பவை, மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதை செயற்பூர்வமாக நிரூபிக்கும் இந்து நம்பிக்கையில் தலையை முங்கிக் கொண்டிருக்கும் இந்திய மனிதக் குரங்குகள். இக்குரங்குகள் நல்ல பணியிலும் இருக்கலாம் இல்லை ரயில்களில் திருடும் கூட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நாளை வெளிநாடுகளில் "coloured" இந்தியன் எவனாவது களவாடி மாட்டினாலோ இல்லை பாலியல் பலாத்காரம் செய்து அயல்நாட்டுக் காவல்துறையினரிடமோ மாட்டினாலோ "RACISM" என்று இதே மனிதக் குரங்குகள் தான் டீக்கடை முக்குகளில் கதைத்துக் கொண்டிருக்கும்.

***

இப்படி ஒரு நிகழ்வே வதோதராவில் நடக்கவில்லை என சப்பைக்கட்டிய பிசிசிஐ
மும்பையில் ஆதாரத்துடன் படம் பிடித்துப் போட்டவுடன் நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பணம் செலவு செய்து லாபம் சம்பாரிக்கும் பிசிசிஐ இம்மாதிரியான எச்சக்கலைத்தனமான் நிகழ்வுகளைக் கண்காணிக்க ஒரு பாதுகாவலர் குழு அமைத்தாலென்ன? அது முடியாவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரியான செய்கைகள் தவறு...மீறிச் செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தல் விளம்பரமாவது செய்யலாம்...

2005ல் தென்னாப்பிரிக்க வீரர்களைக் கேலி செய்த ஒருவர் இனி ஆயுட்காலம் முழுக்க எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் மைதானத்தில் அமர்ந்து பார்க்க முடியாது எனவும், சில வாரகாலம் கவுன்சிலில் கம்யூனிட்டி சர்வீஸும் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட அவுசுதிரேலிய் உதாரணங்கள் உள்ளது.

*****
என்னைத் தடை செய்யத் தேவையில்லை...நான் கற்றுக்கொண்டுவருகிறேன் என வாய்ப்பேச்சு வீரன் சாந்தகுமாரன் சீரிசாந்த், கடவுள் துணையிருந்தால் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லுவோம் என சொல்லியிருக்கிறான். இவன் நிச்சயமாக செல்லாங்குப்பம் அல்லது சோனாங்குப்பம் போன்ற ஊர்களில் பத்து பேர் கூடி இந்த வாரம் சனிக்கிழமை பாய்கொள்ளில பால் மேட்ச் ஆடுவோம் என்ற நிலையில் இருந்து நேரடியாக இந்திய தேசிய அணியில் பங்கு கொண்டிருக்க மாட்டான். க்ள்ப் கிரிக்கெட் தொடங்கி தேசிய லீக் அணிகளில் விளையாடும் முதல் தர வீரனாய் தான் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பான். அப்படியிருக்கும் நிலையில் அவனது செய்கைகளில் "aggression" இல்லை, பதினைந்து வயதில் பாய் கொள்ளியில் விளையாடிய என்னைப் போன்று தான் அகில உலகப் போட்டிகளில் ஆடிவருகிறான்.

****
யார் செய்த புண்ணியமோ? தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்ற நிலையில் மூக்குக்கு வந்தது பல்லோடு என்ற கணக்காய் நாமும் இங்கு "ரிசர்வ்" க்ரேடில் க்ளப் கிரிக்கெட் ஆடி வருகிறோம். அத்தோடு பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி உதவியாளனாகவும் இருக்கிறோம். பயிற்சியாளருக்கு ஒரு பட்டறையும் உண்டு...அதில் இவ்வயது வீரர்களுக்கு அவர்கள் விளையாடுவது வெறும் விளையாட்டு தான். வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல அன்றைய தினத்தை மகிழ்ச்சியோடு செலவழித்தார்களா என்பது தான் முக்கியம். அதை அவர்களுக்கு எடுத்து சொல்லவும், அவர்களோ அல்லது அவர்கள் முன் நாமோ " fuck" " shit" "bastard" போன்ற வார்த்தைகளைத் தப்பித் தவறிக் கூட உபயோகிக்கக் கூடாது எனவும் சொல்லித் தருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆட்டம் தொடங்கும் பொழுதும், முடியும் பொழுதும் இரு அணியின் சிறார்களும் வரிசையில் நின்று ஒருவரை ஒருவர் வாழ்த்தியும் நன்றி சொல்லியும் வரவேண்டும். இது மாதிரியெல்லாம் கூட அகில உலகப் போட்டிகளில் ஆடும் கத்துக்குட்டி சாந்தகுமாரன் சிறீசாந்தனுக்கு எந்த பேமானியும் சொல்லித் தரவில்லை என்றாலும் குறைந்தபட்சம் போட்டி முடிந்த பிறகு கைக்கொடுக்கும் பழக்கத்தினையாவது எந்த மூத்த(ர) விளையாட்டு வீரராவது சொல்லிக் கொடுக்கலாம். இல்லையென்றால் MCGல் அவன் வீசும் பந்து ஒவ்வொன்றும் கொச்சினில் "Back waters" ல் தான் வந்து விழும்.

வந்து வாங்கிக் கட்டிகிட்டு போங்கடா பிள்ளக்கா பசங்களா...

5 comments:

said...

//ஆனால் நாளை வெளிநாடுகளில் "coloured" இந்தியன் எவனாவது களவாடி மாட்டினாலோ இல்லை பாலியல் பலாத்காரம் செய்து அயல்நாட்டுக் காவல்துறையினரிடமோ மாட்டினாலோ "RACISM" என்று இதே மனிதக் குரங்குகள் தான் டீக்கடை முக்குகளில் கதைத்துக் கொண்டிருக்கும்.//

அமெரிக்கா விர்ஜினியா மாநில ஆளுனர் தேர்தலில் ஏற்கனவே கவர்னராக இருந்து கொண்டே இரண்டாம் முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜார்ஜ் ஆலன் தோற்றுப்போனதற்கான காரணம் இங்கு நினைவுக்கு வந்தது.

இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரை குரங்கு என்று இனவெறித் தாக்குதல் செய்ததனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை அவர் வெற்றி பெற்றிருந்தால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலிலும் போட்டியிருக்கக் கூடும். அவருடைய இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் அவருடைய இனவெறிச் சொல்லும், அதற்கான சரியான எதிர்வினையாக விர்ஜினியா மானிலத்தில் கணிசமாக வாழும் இந்தியர்கள் மேற்கொண்ட பிரச்சாரமுமே!

ஆனால் இதே இந்திய மேட்டுக்குடியினருக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் மற்ற இனத்தவரையும், நாட்டினரையும், தம் நாட்டிலேயே தாழ்த்தப் பட்ட சாதியினரையும், கரிய நிறங்கொண்டவரையும் தாங்கள் நடத்தும் விதம் குற்றமாகப் படுவதில்லை. கரிய நிறப் பெண்களை இழிவு படுத்திய சிவாஜி படத்தை வரிசையில் நின்று தவமிருந்து பார்த்தனர் இதே விர்ஜினியா மாநிலத்து இந்திய இளைஞர்கள் (மொழி வேறுபாடில்லாமல்). சில வாரங்களாக அரங்கு நிறைந்து ஓடியது அந்தப் படம். பெரியார் புரட்சியினால் முன்னுக்கு வந்த "கருப்பு திராவிடர்"களும் இதில் உள்ளடக்கம். அங்கு பெரியார் படம் ஒரே காட்சியைப் பார்க்க வந்த மொத்தக் கூட்டமே ஐம்பதுக்கும் குறைவானவர்கள்தான்!

தேவையான இந்தச் சாட்டையடி பதிவுக்கு நன்றி.

தொடர்புடைய சுட்டிகள்:

Senator sorry for 'monkey' slur
United States Senate election in Virginia, 2006

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

டீயில் ஆவி பறக்கிறது:-)

கருப்பாய் இருப்பதை ஏளனம் செய்வதை எந்த சொரணையும் இல்லாமல் ரசிக்கும் கூட்டம் நமது தமிழ்நாட்டுக் கூட்டமும் தான். அதிலும் முக்கால்வாசி, தான் கருப்பாகவோ, கொஞ்சூண்டு 'கலரா'கவோ இருந்துகொண்டு இதற்கு சிரிப்பது அதைவிட கொடுமை. சிவாஜியில் சங்கர் பண்ணிய கூத்துக்கு அந்த ஆளை செருப்பால் அடிக்கலாம். தப்பில்லை.

said...

நேற்று செய்தியை பிபிசியிலே பார்த்தபோது, சில்பா ஷெட்டியும் சுடலைமாடன் சொல்லும் வேர்ஜினியா "மக்காக்கா"வுமே ஞாபகத்துக்கு வந்தார்கள். இதையெல்லாம் காணாமலே விட்டுவிட்டு, வாட்ஸன் சொன்னது சரி, தவறு என்று அதைச் சாதிக்கும் பயன்படுத்தலாமா என்று இழுத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

said...

//ஆனால் நாளை வெளிநாடுகளில் "coloured" இந்தியன் எவனாவது களவாடி மாட்டினாலோ இல்லை பாலியல் பலாத்காரம் செய்து அயல்நாட்டுக் காவல்துறையினரிடமோ மாட்டினாலோ "RACISM" என்று இதே மனிதக் குரங்குகள் தான் டீக்கடை முக்குகளில் கதைத்துக் கொண்டிருக்கும்.//

இந்தியன் மட்டுமல்ல தமிழன்கள் என்று போட்டாலும் பொருந்தும்.


// Kasi Arumugam - காசி
சிவாஜியில் சங்கர் பண்ணிய கூத்துக்கு அந்த ஆளை செருப்பால் அடிக்கலாம். தப்பில்லை
//

கறுப்பனை காநாயகனா தேர்ந்தெடுத்து
அந்தகறுப்பை அவர் முன்னாலேயே
நையாண்டி செய்ய எவ்வளவு ஒரு தில்லு இருந்திருக்க வேண்டும்.

அது சங்கரிடம் இருக்கிறது.

அந்த நையாண்டியை சகித்துகொண்டு அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் பணிவாக நடித்துவிட்டுவந்த நமது கறுப்பு சூரியனின் பொறுமையை என்ன சொல்வது?

வாய் பேசாதோரை காதுபேசாதோரை
கிண்டல் செய்வதும் இதுபோல் நிறத்தை கிண்டல்செய்வதும் ஒன்றுதான்..

இந்தாளை எல்லாம் செருப்பால் அடிக்ககூடாது.

செல்லாவின் மெதட்தான் இவர்களுக்கு சரி.

said...

நண்பரே,

கால தாமதமாக தான் தங்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது (அதனால் நீங்கள் தப்பித்து விட்டீர்கள்).

சற்று கூட அறிவில்லாமல் உணர்ச்சி வேகத்தில் எழுதப்பட்ட பதிவு இது என்பதை பின்னர் நடந்த போட்டிகளும், அதன் முடிவுகளும் உங்களுக்கு உணர்த்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

இனிமேலாவது அறை குறை அறிவோடு எழுதுவதை விட்டுவிட்டு (இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை உங்கள் நியாபக சக்தி அப்படி - பல உண்மைகள் உங்களுக்கு மறந்து போகும் - ஏனெனில் வலது கையில் பென்சிலை வைத்து கொண்டு பென்சில் தொலைந்து விட்டது என்று அழுதவர் தானே நீங்கள்?) ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதையும் உணர்ந்து எழுதுங்கள்.

//வந்து வாங்கிக் கட்டிகிட்டு போங்கடா பிள்ளக்கா பசங்களா...// முட்டாள் தனத்தின் உச்ச கட்டம் இது தான். வழக்கமாக இப்படி எழுதும் பலர், முடிவு மாறியவுடன் தங்கள் முகத்தை தங்களின் "பின்புறத்தில்" வைத்து கொள்வார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அல்லது பதிவு போட்டதே மறந்து விட்டதா?

இப்படியாக பல நியாயம் பேசும் நீங்கள் உங்கள் ச்ய்மண்ட்ஸ் செய்த "சேஷ்டைகளை" பற்றி என் இன்னும் எழுத வில்லை? வழமை போல உங்கள் மறதி தான் இதற்கும் காரணமா?

நீங்கள் போட்ட பதிவு வெறும் இன வெறியர்களை பற்றி மட்டும் இருந்திரயுந்தால் நன்றாக இருந்து இருக்கும். அது கண்டிக்க வேண்டிய விடயம்.

என்ன செய்வது? ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒரு காழ்ப்பு உணர்ச்சி பொங்கும் மட்டமான மிருகம் இருக்கிறன். அதனால் தான் நீங்கள் எழுத வந்ததை விட்டு விட்டு இந்திய ஆடக்கரர்களை பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்.

உங்கள் ஆஸ்திரேலிய அணியினர் செய்த சேஷ்டைகளை எல்லாம் பட்டியில் இட இடமும் இல்லை, எனக்கு நேரமும் இல்லை (இட்டாலும் என்ன பயன்? படித்த உடன் உங்களுக்கு தான் மறந்து விடுமே?)