அதை விடுவோம்...
ஆனால் இக்கேடு கெட்ட காட்டுமிராண்டிகளுக்கு பாடம் புகட்டும் வண்ணம் விழிப்புணர்வு மற்றும் சுயசிந்தனைகளை வளர்க்கும் விதமாக இவ்வூர்வலத்தில் புகுந்து கலகம் (மாற்று சிந்தனைகள்) விளைவிக்க இருக்கும் அய்ரோப்பாவின் பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் தோழர்கள் தமிழச்சி, மாசிலா மற்றும் இன்னபிற தோழர்களுக்கு எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கற்சிலைகளை உடைத்து கான்கிரீட் சாலைகள் அமைப்போம்... சுயசிந்தனைகளை வளர்த்து மனிதனாக வாழ்வோம்!!!
23 comments:
thampi ithu njaayamaa... pakkaththula (yaarukku pakkaththulannu kekkaatha!) en poottoovaiyum pootu vaazththum osai chella nnu potiruntha unakkum ore cheers solluvanilla, Tears varuthuppaa!
தலைவரே வணக்கம். உங்களுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களைக் கண்டால் மதத்தவர் மாதிரி காட்டுமிராண்டி மாதிரி தெரியவில்லையா?? இந்துக்கள் மட்டும் தான் காட்டுமிராண்டிகளா? ம்ம்.. கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை அவ்வாறு கூறினால் பெரிய மதக் கலவரத்தையும் பிரச்சனையையும் உருவாக்கிவிடுவார்கள், ஆகவே உங்களுக்கு பயம். இந்துக்கள் தான் இலிச்ச வாயன்கள், இந்து மதத்தைப் பற்றி ஒரு இந்துவே இளிவாக பேசினாலும் ஒன்றும் கூறாமல் அமைதியாக மண்டையை ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். மற்ற மதத்தினரோ பொங்கி எழுவார்கள் - உதாரணத்திற்கு தஸ்லீமா நஸ்ரீன் மேட்டரைப் பாருங்கள் !!
சாதியியத்தைத் தவிர இந்து மதத்தில் என்ன தவறான கருத்து உள்ளது கூறும். நமது இந்து மதத்தில் தான் நாம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று முக்கிய பண்பிற்கும் பெண்களைக் கடவுளாக படைத்து மதிக்கிறோம். வேறு எந்த மதத்திலாவது இவ்வாறு உள்ளதா கூறும்? சாதியியத்திற்காக இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம். சாதியை அழிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து கொடி பிடிக்கிறேன் !!
தோழருக்கு காரத்தே தெரிவதால் பிரச்சினையில்லை. கலகம் பிறக்கட்டும் வாழ்த்துக்கள். கடல்கடந்தும் சனாதானத்தை நிலைநாட்டுவோருக்கு எதிராய் துவங்கும் இந்த கலத்துக்கு வாழ்த்துக்கள்
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஊர்வலம் பாரிசில் நடக்கும். தைரியமிருந்தால் உங்கள் கடவுள் எதிர்ப்பை அந்த ஊர்வலத்தில் காட்டி செருப்படி வாங்கவும்.
செந்தில் அலகு பெருமாள்,
//தலைவரே வணக்கம். உங்களுக்கு //
முதலில் தலைவரே என்று நட்பாக கூட விளிப்பதை தவிர்க்கவும்...பொட்டீ என்றழைப்பது நன்று.
//கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களைக் கண்டால் மதத்தவர் மாதிரி காட்டுமிராண்டி மாதிரி தெரியவில்லையா??//
இவ்விரண்டு மதத்தில் எந்த மதம் நான் தலையில் இருந்து பிறந்தவன் நீ காலில் இருந்து பிறந்தவன் என்று சொல்கிறது? பார்ப்பான்கள் சிலைக்கு அருகில் அமர்ந்திருக்க அதை சுமக்க மீனவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்...ஏன் பார்ப்பானை பார்ப்பனனே சுமக்க உண்டு கொழுத்த உடல் ஒத்துழைக்காதா? அதைவிட கேவலம் அந்த ஒரு நாள் மட்டும் சுமப்பவர்களுக்கு பூனூல் அடத்தூ!!!
//கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை அவ்வாறு கூறினால் பெரிய மதக் கலவரத்தையும் பிரச்சனையையும் உருவாக்கிவிடுவார்கள், ஆகவே உங்களுக்கு பயம்.//
ஆம் தொடை நடுங்குகிறது வந்து பிடியுங்கள்.
//உதாரணத்திற்கு தஸ்லீமா நஸ்ரீன் மேட்டரைப் பாருங்கள் !!//
பார்த்தோம்...அதைவிட கேவலமான செயல் இருக்கவே முடியாது அவர்கள் காட்டுமிராண்டிகள் கூட அல்ல...மிருகங்கள்! அந்த மிருகங்களின் பிரதிநிதித்துவ பதவிகள் பிடுங்கப்பட்டு நடுத்தெருவில் செருப்பால் அடிக்க வேண்டுமென்பது என் கருத்து.
//சாதியியத்தைத் தவிர இந்து மதத்தில் என்ன தவறான கருத்து உள்ளது கூறும். நமது இந்து மதத்தில் தான் நாம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று முக்கிய பண்பிற்கும் பெண்களைக் கடவுளாக படைத்து மதிக்கிறோம். வேறு எந்த மதத்திலாவது இவ்வாறு உள்ளதா கூறும்? சாதியியத்திற்காக இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம். சாதியை அழிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து கொடி பிடிக்கிறேன் !!//
இந்து மதத்தின் கோட்பாடே ப்ராமணாள், வைசியன், சத்ரியன்
மற்றும் சூத்திராள் என்பது தானே அதனடிப்படையில் தானே தொழிலை வைத்து சாதியாக பிரித்தார்கள். இதில் மதத்தை ஒழிக்காமல் எப்படி சாதியை ஒழிக்க முடியும்?...நீங்கள் சற்றே சிந்தித்துப் பாருங்கள்...
//கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று முக்கிய பண்பிற்கும் பெண்களைக் கடவுளாக படைத்து மதிக்கிறோம்.//
என்ன ஒரு ஆணாதிக்கத்தனமான வரிகள்? இவ்வாறு சொல்லி சொல்லித் தானே பெண்களை அடக்கியாண்டு கொண்டிருக்கிறோம்...சதியும், மொட்டைத்தலையும் வெள்ளைப்புடவையும் எங்கு முளைத்தது?
எங்களுடன் கொடி பிடியுங்கள் மனிதத்தை நிலை நாட்ட...சுய சிந்தனையை வளர்க்க...மதங்களை ஒழிக்க...ஆனால் இந்து மதத்திற்காக கொடி தூக்கிக் கொண்டு இங்கு வராதீர்கள்.
நன்றி!
// Anonymous said...
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஊர்வலம் பாரிசில் நடக்கும். தைரியமிருந்தால் உங்கள் கடவுள் எதிர்ப்பை அந்த ஊர்வலத்தில் காட்டி செருப்படி வாங்கவும்.//
அட...தைரியம் மிக்க பொறம்போக்கே,
முதலில் உன் அய்டியோடு வந்து கொமண்ட் போடு அப்புறம் உன்னோட யோசனையைப் பற்றி யோசிக்கிறோம்.
****
செல்லா & வரவனை, ஆதரவிற்கு நன்றி!
கலகம் செய்ய செல்லும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கும் செயல்திட்டம் ஏதும் இருந்தால் கொஞ்சம் அறியத் தாருங்கள் செந்தில் அழகு பெருமாள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
//தலைவரே வணக்கம். உங்களுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களைக் கண்டால் மதத்தவர் மாதிரி காட்டுமிராண்டி மாதிரி தெரியவில்லையா?? //
முதல் கேள்வியே அபத்தம். எல்லா மதமும் மூடத்தனங்களால் நிரம்பியவைதான். என்ன செய்வது நாங்கள் ஒரு இசுலாமியனாவோ இல்லை கிருத்துவனாகவோ பிறந்து இருந்தால் அங்கு நடக்கும் அக்கிரமங்களை பேசலாம். எங்கள் மதம் என்கிற இடத்தில் இந்து என்றுதானே இருக்கிறது. சாதி க்கு ஒரு நீதி இங்குதானே இருக்கிறது
// இந்துக்கள் மட்டும் தான் காட்டுமிராண்டிகளா? ம்ம்.. கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை அவ்வாறு கூறினால் பெரிய மதக் கலவரத்தையும் பிரச்சனையையும் உருவாக்கிவிடுவார்கள், ஆகவே உங்களுக்கு பயம். இந்துக்கள் தான் இலிச்ச வாயன்கள், இந்து மதத்தைப் பற்றி ஒரு இந்துவே இளிவாக பேசினாலும் ஒன்றும் கூறாமல் அமைதியாக மண்டையை ஆட்டிக் கொண்டு இருப்பார்கள்.//
யார் சொன்னது இந்துக்கள் இளித்தவாயர்கள் என்று வீர் சாவார்க்கர் துவங்கி நரேந்திர மோடி வரை உத்தம சிகாமணிகளா ? 3000 இசுலாமியரை கொல்லவில்லையா இந்த குஜராத் கொடுங்கோலன் மோடி. இது இளித்தவாய்த்தனமா.
//மற்ற மதத்தினரோ பொங்கி எழுவார்கள் - உதாரணத்திற்கு தஸ்லீமா நஸ்ரீன் மேட்டரைப் பாருங்கள் !! //
காட்டுமிரான்டித்தனம் ஒன்றும் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமா என்ன ?
// சாதியியத்தைத் தவிர இந்து மதத்தில் என்ன தவறான கருத்து உள்ளது கூறும். நமது இந்து மதத்தில் தான் நாம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று முக்கிய பண்பிற்கும் பெண்களைக் கடவுளாக படைத்து மதிக்கிறோம்///
பிரச்சினையே இங்குதான், அவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் கடவுளாக்கி அடிமை படுத்தும் செயல் திட்டம்தானே அது. வீரம் என்பதெல்லாம் ஒரு பண்பே அல்ல அது மன உணர்வின் வெளீப்பாடு. போர்க்குணம். அப்படி பார்த்தால் அத்தகைய வீரத்துடந்தான் தோழர்.தமிழச்சி களம் காண போகிறார்.
.// வேறு எந்த மதத்திலாவது இவ்வாறு உள்ளதா கூறும்? சாதியியத்திற்காக இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம். சாதியை அழிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து கொடி பிடிக்கிறேன் !! //
அண்ணாச்சி ! சாதிக்கு அடிப்படையானதுதான் மதம். அதை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது முடியாது முடியாது.
தங்களது கருத்து ஏற்கத் தக்கது கிடையாது. நீங்கள் இன்னும் கடந்த நூற்றாண்டில் தான் இருக்கிறீர்கள். பெரியார் காலம் வேறு இன்றைய காலம் வேறு. இப்போது எந்த கோவிலில் / வீட்டில் / பொது இடத்தில் சாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறார்கள்? அரசின் வேலைகளிலும், மேற் படிப்பிலும் தான் பிரிவு இருக்கிறது. அதைத் தவிர்த்தாலே சாதி ஒழியும். ஆனால் அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இதைத் தவிர்க்க மாட்டார்கள். ஏன் நீங்கள் அவர்களை எதிர்க்க கூடாது?? அதைவிடுத்து மனிதனை நெறிப் படுத்தும் மதத்தை ஒழிப்பது எந்த ஊர் நியாயம். மனிதன் இப்போது ஓரளவு சீராக சென்று கொண்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவனிடம் உள்ள கடவுள் பயம். அதை ஒழித்தால் அவனால் எப்படி முன்னேற முடியும்?? யோசியுங்கள் !!
தயவு செய்து இதைப் பார்க்கவும்.
//தங்களது கருத்து ஏற்கத் தக்கது கிடையாது.//
நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் சிந்திக்க வேண்டுமென நினைக்கிறேன்.
நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் இருப்பதைப் படிக்கும் பொழுது உங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்பதும் புலப்படுகிறது.(உதாரணம்:அது மட்டுமா, ஒரு கணவன் மனைவிக்கு சம உரிமை தர வேண்டும் என்பதை உணர்த்த அக்காலத்திலேயே சிவ பெருமான் தன் உடலிலும் பாதியை தன் மனைவியான் சக்திக்கு கொடுத்தார். இப்படிப் பட்ட மகத்துவம் கொண்டது இந்து மதம)
காமெடி தாங்கலப்பா!!!
அடுத்ததாக,
//இப்போது எந்த கோவிலில் / வீட்டில் / பொது இடத்தில் சாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறார்கள்? அரசின் வேலைகளிலும், மேற் படிப்பிலும் தான் பிரிவு இருக்கிறது.//
ஏன் இருக்கிறது? மனு வேதத்தையும் பூனூலையும் அறுத்துவிட்டு அய்யர்களும் அய்யங்கார்களூம் போர்ட்டராகவும், துப்புரவு தொழிலாளியாகவும் மாறட்டும். அன்று சாதியை ஒழித்துவிடுவோம். உங்களுக்கு இடஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவது தான் பிரச்சினை என்பது நன்றாக புலப்படுகிறது. நீங்கள் இப்படியே பேசினால் நான் உங்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை. ஏனென்றால் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் உம்மை போன்று தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.
இனி உங்களது பின்னூட்டங்களை வெளியிட இயலாது. நன்றி!
// இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கும் செயல்திட்டம் ஏதும் இருந்தால் கொஞ்சம் அறியத் தாருங்கள் செந்தில் அழகு பெருமாள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் //
அன்பு நண்பர் முத்துக் குமரன் அவர்களே, மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கும் செயல்திட்டத்தை நாம் உருவாக்குவோம் வாருங்கள், அதை விடுத்து மூட்டைப்பூச்சிக்காக வீட்டை எரிக்கலாமா? இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு சாதி என்று கூறினால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். விவேகானந்தரது கருத்துக்கள் தங்களுக்குத் தெரியாதா?
//உங்களுக்கு இடஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவது தான் பிரச்சினை என்பது நன்றாக புலப்படுகிறது. //
நண்பா நானும் மிகவும் பிற்படுத்த பட்ட வகுப்பைச் சார்ந்தவன் தான். ஒதுக்கீட்டினால் பயன் பெருபவர்களில் நானும் ஒருவன் தான். இருந்தாலும் தன் மதத்தைப் பற்றி தவறாக பேசுவதை என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. இந்து மதத்தை அழிப்பது தங்கள் கருத்தாக இருக்கலாம், ஆனால் அது என்னைப் பொருத்தவரை தவறான கருத்தாக நினைக்கிறேன்.
வெவ்வேறு மனிதனுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் அல்லவா?
// இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு சாதி என்று கூறினால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். //
எல்லாம் தெரிந்தவரே!
மதங்களின் கோட்பாடு எல்லாம் இறைவனை அடைதல் என்பது யானும் அறிவேன். ஆனால் அதற்கு படிக்கட்டுகள் அமைத்து வசதி செய்து கொடுத்திருப்பது பெருமை மிகுந்த இந்து மதமே!
இந்துமதத்தின் நடைமுறைகள் சாதி யாகத்தானே இருக்கிறது. நீங்கள் இந்துமதம் என்னவென்பதை முதலில் வரையறுங்கள். அப்படியே வேதங்கள் உபநிடதங்கள், கீதை இன்ன பிறவற்றிற்கும் இந்து மதத்திற்கும் இடையேயான தொடர்பையும் சொல்லுங்கள்.
//விவேகானந்தரது கருத்துக்கள் தங்களுக்குத் தெரியாதா? //
இந்த பூச்சாண்டி காட்டுகிற வேலை எல்லாம் வேண்டாம்.
செந்தில் அலகு பெருமாள்,
நீங்கள் இடஒதுக்கீட்டில் படித்தவர் என்று கூறுகிறீர்கள் ஆனால் இடஒதுக்கீடு வேண்டாம் என்று இன்று மறுக்கிறீர்கள். என் வயிறு நிரம்பி விட்டது பசியோடு இருக்கும் மற்ற வரியவனைப் பற்றிக் கவலையில்லை என்று பொருள்படுமாறு கூறுகிறீர்கள்.
நீங்கள் பெரியார் அன்று கூறியது இன்று ஒத்துவராது என்று கூறிவிட்டு அன்று விவேகானந்தர் கூறியது தெரியுமா என்று எதிர்கேள்வி கேட்கிறீர்கள். மண்டையில் மசாலா ஏதாவது இருக்கிறதா?
நமது முன்னோர்கள் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் இயற்கை சீற்ற்ங்களையும் மிருகங்களையும் கண்டு பயந்த காரணத்தினாலேயே அவற்றை வழிபட்டுவந்தார்கள். காலப்போக்கில் கண்ட கற்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து கண்ட நாதாரி பெயர்களையெல்லாம் வைத்து வழிபடத்துவங்கினர். இந்து மதமும் இந்துக் கடவுள்களும் பொதுவானதென்றால் வடக்கில் பூரி செட்டு வாங்கித் தின்ற பூரி செகன்னாதரை ஏன் தெற்கில் பார்க்க முடியவில்லை? இல்லை பழம் கிடைக்காமல் அழுவுணி ஆட்டம் ஆடி அம்மணக் கட்டையாய் ஓடிய முருகன் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. கேட்கிறவன் கேணக்கிறுக்கன் என்றால் பொட்"டீ"கடையில் பளாஸ்மா டீவி கிடைக்குமாம் அந்த கதையால்ல இருக்கு.
பொறுமையாக நிதானமாக சிந்திக்கவும். என் மதம் தான் எனக்கு முக்கியமென மதம் பிடித்து திரியாதீர்.
இப்பதிவின் பின்னூட்டங்களில் சில விளக்கங்கள் கிடைக்கலாம்
தங்கமணியின் அந்த குறிப்பிட்டப் பதிவின் இணைப்பு காணக்கிடைக்கவில்லை. அறியக் கிடைத்தவர்கள் இங்கு அதை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதிவிட்ட பொட்டிக் காடியாருக்கும், பதிலளித்து பட்டையை கிளப்பும் வரவனை, முத்துக்குமார் உள்ளைட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.. மிகவும் அடிப்படியான கேள்விகள் எழுகின்றன. 'சாமி கண்ணைக் குத்தும் என்பதுபோல...' இருக்கிறது பெருமாளின் கருத்துகள்...
விரைவில் அவர் தெளியக்கூடும்.
திரை கடல் ஓடீயும் தீச்சட்டித் தூக்கும் தமிழரின் மூளை விலங்கை ஒடிக்க அமைதிப் புரட்சி ஆரம்பித்துள்ள தோழர்கள் தமிழச்சி,மாசிலா மற்றனைவர்க்கும் அமெரிக்கப் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பிலே பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
இதை எதிர்த்து எழுதும் தமிழ் இந்துக்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ஆரிய மதத்திற்கும் இன்றைய இந்து மதத்திற்கும் தமிழக சைவ வழிக்கும் இன்றுள்ள நடை முறையைப் பாருங்கள்.
நீங்களும் இந்துக்கள் தானே!உங்களுக்குச் சங்கர மடத்தில் தரப்படும் மரியாதை என்ன?
ம்யிலை கபாலீசுவரர்,சிதம்பரம் நடராசப் பெருமான் உங்களை எங்கே வைத்திருக்கின்றார்?
இன்றைய பார்ப்பனர்கள் அப்படி இல்லை என்கின்றீர்களே கொஞ்சம் கண்களை விழித்துப் பாருங்களேன்.ஆடம் பாலம் ராமர் சேது வானது எப்படி? எப்போது?
அதை நம்புகிறீர்களா?எதற்காகப் போராடுகிறார்கள் என்று உண்மை தெரிகிறதா?
ராமன் சத்திரியன்,அதை எழுதிய வால்மீகி சூத்திரன் ஆனால் அதை ஆட்டிப் படைக்கிறவன் பார்ப்பனன் இல்லையா?
ராமரின் பிறப்பு,பிள்ளையாரின் பிறப்பு,பிள்ளையார் எங்கிருந்து வந்தார்,கடவுள்களின் கதைகள் லீலைகள் இப்படிக் கதைகளை இந்து மதம் என்று குழந்தைகளுக்குச் சொல்லலாமா?அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைத் தருவீர்களா?
விவேகானந்தர் பார்ப்பனர்கள் பற்றிக் கூறியுள்ளதை ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?
இந்து மதத்தை உள்ளிருந்தே திருத்தி விடலாம் என்ற பலருக்குக் கிடைத்த பரிசுகள் என்ன?
மகாத்மா காந்திக்குக் கிடைத்த பரிசே தோட்டாக்கள் தானே?
மற்ற மதங்கள் மீது பாயவில்லை என்கிறீர்களே.ராபர்ட் இங்கர்சால்,பெர்ட்ரண்ட் ரச்சல் நுல்களைத் தமிழில் வெளியிட்டுப் பரப்பியது யார்?
நமக்கு எந்த மதத்தால் பேரிழ்ப்பும்,அவமானமும்,சூத்திரப் பட்டமும்?
சிந்தித்துப் பதில் எழுதுங்கள்.நன்றியுடன் பதில் எழுதுவோம்.
For more information
http://www.satiyakadatasi.com/
jeya
நல்ல முயற்சி. போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
கிறிஸ்மஸ்தில் கலகம் செய்யc சொன்ன அனானிக்கு, அதை கிறித்து என்று தங்கள் விருப்பம் இல்லாமலே எண்ணிக்கைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் செய்வார்கள்.
ஈழ்த் தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் முருகனுக்கு கோவில் கட்டுகிறார்கள். பண்பாட்டின் அடையாளமாக வரவேற்கப் படவேண்டியது. ஆனால் அந்தக் கோயிலுக்கு தேடிப்பிடித்து 'பகுதி நேர' தொழிலாக பிராமணர்களை பூசிக்க வைத்து தங்களது ஆண்டாண்டு வந்த அடிமைத் தனத்தையும் அரங்கேற்றுகிறார்கள்
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி பொட்"டீ" கடை. எல்லாம் நல்ல படியாக முடிந்தது. உரசல்கள் சில சாமயர்த்தியமாக தவிர்க்கப்பட்டன.
பகுத்தறிவு, சூடு, சொரணை உள்ள ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டிய சிறிய சாதாரண கடைமையைத்தான் செய்தோம். இதில் பெரிதாக நூதனம் எதுவும்
இல்லை என்றே படுகிறது.
பின்னூட்டத்தில் ஆதரவளித்து எழுதிய அன்பர்களுக்கு மிக்க நன்றி.
விரைவில் வீடியோ மற்றும் நிழற்படங்கள் வெளிவரும்.
நன்றி.
தோழர் பொட்டிக்கடை அவர்களுக்கு, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி!
தோழர் தமிழச்சி அவர்களுக்கும், தோழர் மாசிலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுபோல சென்னையிலும் செய்ய வலைப்பதிவு நண்பர்கள் முயற்சி எடுக்கலாம்.
தோழர் தமிழச்சி அவர்களுக்கும், தோழர் மாசிலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுபோல சென்னையிலும் செய்ய வலைப்பதிவு நண்பர்கள் முயற்சி எடுக்கலாம்.
--------
எடுக்கலாம்னு சொல்லி எஸ் ஆகலாமான்னு பாக்கிறீங்க.. உங்கள மாதிரி தலைங்கதான் எடுக்கனும்.. பாலா அண்ணாவுக்கு வயசாகிட்டதால இதுமாதி ஈவண்ட் நடத்துவதில்லிருந்து ரிடையர் ஆகிட்டாரு போல. பதிவே போட்றதில்லையே..:P:P
தோழி தமிழச்சி படம் போடுவது சிறுபிள்ளைதனமானது, கேவலமானது என்று உண்மைதமிழன் கண்டனம் தெரிவித்திருக்காரே? பாத்தீங்களா?
Post a Comment