9/09/2009

ஹாப்பி அஞ்சாம் வருச ப்லொக் டே டூ மீ

திஸ் இஸ் ய மீள் பதிவு

சும்மா லூல்லூல்லாயி
அஞ்சாம் வருசத்திலும் ஒன்னுத்துக்கும் ஒதவாம அமெச்சூர்த்தனமாக எழுதிக்கொண்டுவரும் பொட்"டீ"கடைக்கு ஹாப்பி பர்த்டேஏஏஏஏஏஏஏ

சும்மான்னா அமெச்சூர்/புரொபசனல்னு கும்மியடிக்காம அஞ்சு வருசத்துக்கு மின்னாடி பொட்"டீ"கடை சத்தியா என்ன சொன்னானோ அதையே ஃபாலோ பண்ணிட்டு வர்ரான்னு பெருமை கொள்ளுங்க பலொக் பெருமக்களே!

பார்க்க பின் குறிப்பு: இன்னிக்கு எழுதினது இல்ல மக்கா...அஞ்சு வருசத்துக்கு மிந்தி...;)

விட்டில் பூச்சி!


வின்மீன்கள் உலவுகின்ற
இத்தமிழ்மண வானில்
எரிகல்லாய் எரி(றி)ந்து
வீழவிரும்பவில்லை

தமிழ்மணம் வீசும்
நந்தவனத்தில்
சிறுவிட்டில் பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
விரும்புகிறேன்.

விட்டில் பூச்சிகள் இவை யாரையும் பொதுவாகத் தாக்காது, கடிக்காது, விஷத் தன்மையற்றவை. இவற்றால் வேகமாகவும் பறக்க இயலாது. இவை ஈ, கொசுக்களைப் போன்று கொடிய வியாதிகளைப் பரப்புவதும் கிடையாது.

தமிழுக்கும் எனக்குமான தொடர்பு தாய்க்கும், குழந்தைக்குமான தொடர்பாய் இருந்தாலும்., எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவு பெரிதானதாக சொல்லிக் கொள்ளவதில்லை... சிறு வயதில் சில வரலாறுகளையும், காப்பியங்களையும் என்னுடைய அம்மா படிக்கக் கேட்டது தவிர எனக்கென்று ஒரு தேடலும் இருந்ததில்லை. சில நேரங்களில் நானாக ஆர்வபட்டு படிக்க முயன்ற பொழுதும், எனக்கென்றே எனக்குள் இருக்கும் சிற்றறிவினால் எந்தவொரு எழுத்தையும் சுதந்திரமாக அணுக முடிந்ததில்லை.
இவை பழுப்பு நிறத்தில் 7/16" இருந்து 9/16" வரை வளரும். மிருதுவான, நீள் வடிவமான உடலினைக் கொண்டது. பொதுவாக இவை வசந்தகால மாலைப் பொழுதினில் காண கிடைக்கும். இவற்றின் வாழ்க்கை காலம் 3 நாட்களிலிருந்து 1 வாரம் வரை இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

இவ்விட்டில் பூச்சியின் காலம் சிறிதளவே என்பதனால் என்னைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தேவை இல்லை. எதற்காகவோ எதையோத் தேடி அலைந்த பொழுது கண்ணில் பட்டது தமிழ்மணத்தின் தலைவாசல். இங்கு கூட நான் எதையும் குறிப்பிட்டு தேடியதில்லை. தலைவாசலின் வழியாக வீட்டினுள் நுழையும் காற்று சிறிது சாளரத்தின் வழியாகவும் சிறிது தாழ்வாரத்தின் வழியாகப் புகுந்து சமையலறைக்குச் சென்று அங்கே சமைக்கப் படும் உணவின் வாசத்தையும் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தின் சாண வாசத்தையும் எடுத்துக் கொண்டு பொதுவில் கலந்து விடும். அதில் சிலருக்கு சாணத்தின் வாசம் பெரியதாகவும், சிலருக்கு சமையலின் வாசம் பெரியதாகவும் தெரியும். இப்படித்தான் எழுத்துக்களும் இங்கே இனம் பிரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மணத்தின் தலைவாசலில் "குழலி"யின் பெயரால் கவரப்பட்டு "கடலூர் காட்டானின் களத்து மேட்டிற்கு" முதல் முறை சென்றேன். அதுவே தமிழ்மணம் என்னும் பெருவெளியில் கொண்டுவந்து விட்டது. களத்துமேட்டிற்கான உக்கிரம்:-) (குழலி மன்னிப்பாராக!) தாங்காது சிறிது காற்று வாங்க சுரேஷ் அண்ணாச்சியின் "தேம்ஸ் நதிக்கரையோரம்"உலாவினேன். பின்னர் குழலி, மற்றும் சுரேஷ் அண்ணாச்சியின் உதவியினாலும் ஊக்கத்தினாலும் தமிழில் பின்னூட்டமிட கற்றுக் கொண்டேன். இடையே "காசியின் உன் கோடு, என் கோடு தனி(யூனி)கோடு" பதிவின் மூலம் யூனிகோடு என்றால் என்ன என்பது ஓரளவு புரிந்தது. பின்னாளில் அது ஒரு உப்பு சப்பில்லாத பொட்"டீ"கடை ஒன்றைத் திறந்து "ஈ"யடிக்கும்படி ஆகிவிட்டது. என்னை வலை பதிய ஊக்குவித்த குழலி மற்றும் சுரேஷ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இவற்றின் உடலிலிருந்து வரும் ஒளிவெள்ளமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முழு சக்தியும் ஒளிக்கீற்றாக வெளியேற்றப்படுவதாகத் தெரிந்தாலும், வெறும் 10% மட்டுமே ஒளியாகவும் பிற 90% வெப்பசக்தியாகவும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இவற்றின் பின் பகுதியிலிருந்தே ஒளியானது வெளிக் கொணரப்படுகிறது. இதன் பின் பகுதி, கிடைக்கற்கரிய இரசயானங்களான லூசிஃபெரின், லுசிஃபெரஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. அதன் உடலில் உள்ள அடினோஸின் ட்ரை ஃபாஸ்பேட் மாற்றும் சக்தியாக இருந்து லூசிஃபெரின், லுசிஃபெரஸ் கலவையை ஒளி சக்தியாக மாற்றுகிறது. அனைத்து உயிரின செல்களிலும் ஏடிபி இருக்கின்ற காரணத்தால் விட்டில் பூச்சியின் இரசாயனக் கலவையை மனித உடலில் ஏற்றும் பொழுது, செல்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் புற்று நோய்க்கான அறிகுறிகளையும் இன்ன பிற மருத்துவ பயன்பாட்டிற்கும் இவை உதவுகின்றன.

நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார்தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் கடைக்கு வந்து போன பலருக்கும் எனது நன்றிகள். இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே அதிக அளவில் (இடுகைகளை விட) எழுதிய என்னை பிடறியில் தட்டி, இனி தப்பிக்க இயலாத வண்ணம் நட்சத்திரமாக்கி விட்ட "மதி"க்கு எனது நன்றிகள்(நற நற..)

இது மட்டுமல்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றூம் பன்றிகளின் உயர் இரத்தாழுத்தை போக்குவதற்கும் விட்டில் பூச்சிகள் தேவையாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் வின்வெளித்துரையிலும் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

இவற்றின் இரசயானங்களை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், வளர்ந்த நாடுகள் பல இவற்றை பெருக்கம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த ஒருவார காலத்திற்கு தொடர்ந்து எழுத வேண்டும். என்னை எழுத அழைத்த அனைவருடைய, நம்பிக்கையை பொய்ப்பிக்காத வண்ணம் தினமும், வின்மீனாக மின்ன இயலாவிட்டாலும் சிறு விட்டில் பூச்சியாகப் பறந்து சில சிறார்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏதாவது எழுதி இந்த ஒரு வாரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

அதனால் அனைவரும் பொட்"டீ"கடைக்கு இந்த ஒரு வாரம் மட்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...:-).

பின்குறிப்பு: எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு

10 comments:

said...

ஹாப்ப்பி பர்த்டே.

said...

வாழ்த்துகள் பொட்டீ.

said...

வாழ்த்துக்கள் தலைவா.உங்களின் அந்தப் புனைவு இன்னும் அகலவில்லை மனதில் இருந்து.

said...

/நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார்தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் //

கண்கள் பனித்தன!! இதயம் இனித்தது. அஞ்சு வருசமா சூடு கொறயாம டீ அத்திகிட்டு இருக்கியே அதுவே பெரும் சாதனைதான்.

வாழ்க வளமுடன்

said...

ஹாப்பி அஞ்சாம் வருச ப்லொக் டே டூ யூ

அஞ்சு வருசமா? அதுக்குள்ளவா? நாசம்...

said...

//அஞ்சு வருசமா சூடு கொறயாம டீ அத்திகிட்டு இருக்கியே அதுவே பெரும் சாதனைதான்.
//
அது......

said...

வாழ்த்துக்கள்!

said...

நன்றி ரவி.

***
நன்றி ஜ்யோவ்

***
நன்றி நர்சிம். புனைவா? அவ்வ்வ்வ் :))

***
முத்துக்குமரன்,
//கண்கள் பனித்தன!! இதயம் இனித்தது// அடடா...கலைஞர் ப்ரஸ் மீட்ல் பேசற மாதிரி...இதென்ன மேடையா போட்டு வெச்சிருக்கோம் ;)

***
தேங்க்ஸ் குழலி மைட். யூ ஆர் த ஃபர்ஸ்ட் பெர்ஸன் ஹூ இண்டிரட்யூஸ்டு மீ டு த ப்லொக்ஸ் :)

***
சிந்து சுபாஷ்,
நன்றி.முதன் முறையாக வருகைக்கும் நன்றி.

Anonymous said...

விண்மீனா, வாழ்த்துக்கள்
இன்னும் முகப்புல வரலீங்களே !!

Anonymous said...

//விண்மீனா, வாழ்த்துக்கள்
இன்னும் முகப்புல வரலீங்களே !!//

தலைப்பை சரியாப்படிக்காம கமெண்டீட்டீடன். ஆவ்வ்வ்வ்அஞ்சாம் வருச வாழ்த்துக்கள்.