தட்ஸ்தமிழ் செய்தி பின்வருவன:
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி
வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம்
முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரெட்டி மறைவுக்கு கரூரில் அஞ்சலி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசியல்
அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.
முதல்வர்
ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.
புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...
இதேபோல ராஜசேகர ரெட்டி
க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன கொடும கருணாநிதி இது? அண்டை மாநில முதல்வர் இறந்துட்டாருங்கறது வருத்தமான செய்தி தான். அதுக்காக ஒரு 2 நிமிசம் அரசு அலுவலகங்கள்ல மவுனம் காக்கலாம். ஆனா ஒரு நாள் அரசுவிடுமுறைலாம் ஓஒவரு. ராஜசேகருகாரு தமிழ்நாடும் அதைச் சார்ந்த திராவிட நாடும் உருவாகக் காரணமா இருந்தாரா? இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? இதுக்கு முன்னாடி மரித்துபோன அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள்கள் மற்றும் ஜே எஃப் கென்னடி, நிக்ஸ்ன், இன்னும் ஜெயவர்த்தனே, பெனசீர் புட்டோ, ஜியா உல் அக்குன்னு எல்லாருடை நினைவு தினத்துக்கும் மரியாதை நிமித்தமாகவும்...உணர்வுபூர்வமாகவும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு நாளையும் விடுமுறையாக அறிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
7 comments:
//நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? //
அதே தான்!
//நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? //
அதே தான்!
ஆட்சியில் இருக்கும் போது புட்டுக்காமல் இருக்க அந்த மெரினாபீச் கண்ணாகி கடவுள்தான் காப்பாத்த வேணும், கண்ணம்மாபேட்டைதான் முகாவிற்க்கு ஏற்ற இடம்.
//இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? //
true
தம்பி,
இனிமே தமிழன் எவனும் நமக்கு அழமாட்டான். பக்கத்து மாநிலத்துல இருக்கவன் அழுதாத்தான் உண்டுன்னு பெரிசு நினைச்சிருக்கும். அதுதான் நடு ராத்திரி மூணு மணிக்கு எந்திரிச்சு சிந்திக்கிற ஆளாச்சே. ஓணத்துக்கு லீவாம், மலையாளிக ஒண்ணுக்கடிக்கறதுக்கு லீவு விட்டாலும் விடும்.
ராஜசேகர ரெட்டி மரணத்தை எப்படி பின்னனி இசையுடன் துக்கிக்கிறாய்ங்கன்னு ('பெரிசு போதிந்தி...') யூ டியூப் பாத்தா தெரியும். ரெட்டியோட கொடுக்கு ஜெகன் மோகன் ரெட்டியை அடுத்த முக்கிய மந்திரியாக்க, அவர் போன செய்திகேட்ட அரைமணி நேரத்துல தயாராய்ட்டாய்ங்க. பாவம் தமிழ்நாட்டுல கருணாநிதி தனியா துக்கமாகிக் கெடக்குறாரு. தமிழக மக்கள் பூராம் துக்கம் அனுபவிக்கிறாய்ங்களாம். ஐயோ,அம்மான்னு சொந்த மொழில கதறல் கேட்டே அசையாத, சோற்றுக்கில்லாமல் வேறெதற்கும் வாய் திறக்கா தமிழக மக்கள், ரெட்டிக்காக நெஞ்சு, நெஞ்சா அடிச்சுகிட்டு அறிவாலயத்துக்கு முன்னால அழுகுறாங்க போல. தினமலர்காரனுக்கு ஆந்திராவே அழுகுதாம், பாரிட்டாலா ரவி (ரவண்ணா) வீட்டுல அழுகுறாங்களான்னு கேட்டு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.
மரணம் எங்கெனினும் அது துக்கம்தான். ஆனால் எத்துக்கமும் பாதிக்காத மனநிலையில் உள்ளோம் நாம். இச்செய்தி கேட்டவுடன் எனக்குத் தோன்றியது இதுதான் "ஆந்திராவுல செத்துதுடா இனிமே காங்கிரசு!!".
கேரளாவிலிருந்து தமிழகத்தில் வந்த மலையாளிகள் 3 லட்சம் தேனீர் கடைகள் வைத்துள்ளனர்.. அதற்கான நன்றியை கூட முல்லை பெரியாறு பிரச்சனையில் காட்ட மறுக்கின்றனர்.. கடலில் கலக்கும் வீணாகும் நீரில் சில டி.எம்.சியைக் கூட மறுக்கின்றனர்..கேரளாவிற்கு தினமும் அரிசி, பருப்பு, இறைச்சி என எவ்வளவோ செல்கிறது ... ஏன் அவர்களுக்கு நம் மீது மட்டும் இப்படியொரு தாழ்மையான எண்ணம்?
அது போகட்டும் சார் போன வருடமே இதே போல இந்த கூட்டி கொடுப்பவன் ஓண்த்திற்கு விடுமுறை அளித்துவிட்டான்..அந்த அறிவிப்பு வந்த உடனே மலையாளத்தான் நன்றி சொல்லிவிட்டு அறிவிக்கிறான் பொங்கலுக்கு கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விடுமுறை இல்லையென..போதாகுறைக்கு தமிழ் கட்டாயம் ஆக்க படகூடாது என இங்குள்ள மலையாளத்தான்கள் கேசு போட்டுகொண்டு திரிகிறான்... ஒன்று மட்டும் தெரிகிறது ஓட்டுகும் ஓசிக்கும் கூட்டி கொடுக்கும் தமிழர்கள் இங்கு இருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம் தான்..
மந்திரி சபையில் இடம் கிடைக்காத தமிழ் நாட்டு காங்கிரஸ்காரனை காக்க பிடிக்கும் வேலை .
தமிழ்நாட்டில் கருணாநிதி மட்டும் இல்லை, இங்கே எங்க கர்நாடகாவிலும் அரசு விடுமுறைங்க..
பல தனியார் பள்ளிகள் கூட லீவு விட்டுடாங்க. எங்க வீட்டுப் பசங்க எல்லாம் வீட்டுல துக்கம் கொண்டாடாம குதுச்சு விளையாடிட்டு இருக்குங்க.
Post a Comment