தட்ஸ்தமிழ் செய்தி பின்வருவன:
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரெட்டி மறைவுக்கு கரூரில் அஞ்சலி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜகேகர ரெட்டி மறைவையொட்டி, அகில இந்திய கைவிஞர் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராஜகேகர் ரெட்டி மரணம் ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கரூரில் அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாநில தலைவர் விசு.சிவக்குமார் தலைமையில் அக் கட்சி அலுவலகத்தில் ரெட்டி படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரெட்டி மறைவு குறித்து அகில இந்திய கைவிஞர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் விசு.சிவக்குமார் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசியல் அரங்கில் தனி மரியாதைடன் விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது தனி மனித ஒழுக்கம், நற்பண்புகள், ஏழைகளுக்கு உதவுதல், மனிதாபிமானம், போன்றவற்றி அவருக்கு நிகர் அவர் தான். அவரது இந்த நற்பண்புகள் தான் அவரை நல்ல அரசியல்வாதி என மக்கள் மனதில் பதிய வைத்தது.
முதல்வர் ராஜசேகர ரெட்டியின் இழப்பு ஆந்திர மக்களுக்கு பெரும் இழப்பு. ஆந்திராவின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கலாக இருக்கும் என்றார்.
புதுச்சேரியிலும் அரசு விடுமுறை...
இதேபோல ராஜசேகர ரெட்டி க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கவுள்ளது. இதற்காக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன கொடும கருணாநிதி இது? அண்டை மாநில முதல்வர் இறந்துட்டாருங்கறது வருத்தமான செய்தி தான். அதுக்காக ஒரு 2 நிமிசம் அரசு அலுவலகங்கள்ல மவுனம் காக்கலாம். ஆனா ஒரு நாள் அரசுவிடுமுறைலாம் ஓஒவரு. ராஜசேகருகாரு தமிழ்நாடும் அதைச் சார்ந்த திராவிட நாடும் உருவாகக் காரணமா இருந்தாரா? இல்ல நாளைக்கு நாமலும் பொசுக்குன்னு புட்டுகிட்டா நாலு மாநிலங்கள் நமக்கும் ஹாலிடே உட்டு மருவாதை குடுப்பாங்கங்கற நப்பாசையான்னு தெரியல??? இதுக்கு முன்னாடி மரித்துபோன அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள்கள் மற்றும் ஜே எஃப் கென்னடி, நிக்ஸ்ன், இன்னும் ஜெயவர்த்தனே, பெனசீர் புட்டோ, ஜியா உல் அக்குன்னு எல்லாருடை நினைவு தினத்துக்கும் மரியாதை நிமித்தமாகவும்...உணர்வுபூர்வமாகவும் அஞ்சலி செலுத்த ஒவ்வொரு நாளையும் விடுமுறையாக அறிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.