
பாம்பு என்றாலே எனக்கு ரொம்பப்பயம். பயந்து கொண்டேயிருப்பேன், எப்போது வரும் எந்தவுருவில் வருமென. எப்போதிலிருந்து பயமென்றால "பல்"லிக்கு சாமியேறியதிலிருந்து. சரசுவதியின் புருசன் ப்ளவர் மில்லில் தினக்கூலி. சரசுவதி எங்கம்மாவிற்குதவியாக பாத்திரம், துணிகள் சலவைசெய்து கொடுப்பாள். அவளும் தினக்கூலி? எனக்குத் தெரியாது. வயதேறியவளாக இருந்தாலும் வனப்பாக இருப்பாள். திரண்டுருண்ட அங்கங்கள் தீயையேற்றும் எனது உடலில். ஏறிய தீ அவள் முகத்தைக் கண்டதும் அல்லியிலையின் நீர்த்திவலைகளாய் ஓடிவிடும். ஏனென்றால் அவளுடைய அகன்ற வாயில் பாம்பு புற்றினைப்போலி துருத்துக்கொண்டிருக்கும் பற்கள். அதனால் அவள் "பல்"லி. அவளை நான் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுவேன். அவள் அங்கங்களை நினைத்து சுய இன்பம் செய்யும்போது அவள் எனக்கு "ப்ளோ ஜாப்" கொடுப்பதாக நினைத்தாலும் எனக்கு சுருங்கிப்போகும்...எங்கு விட்டேன்? ம்...பாம்பு ...பாம்பென்றால் எனக்கு ரொம்பப்பயம்.
சரசு தோட்டத்து முற்றத்தில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய அங்கங்களைப் பார்வையால் புணர்ந்துகொண்டிருந்தேன். காலையா? மாலையா? எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் காலில் பூட்ஸ் அணிந்திருந்தேன். அதனால் காலையில் பணிக்குச் செல்லும் முன்னரா அல்லது மாலை பணியிலிருந்து திரும்பிய பின்னரா எனத்தெரியவில்லை. அது 2001 மா, 2002ஆ அல்லது 2000மாவெனச் சரியாக நினைவில்லை. இல்லையில்லை 2002 அல்லது 2003கத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் '01-'02ல் நான் பெங்களூரில் இருந்தேன். தோட்டத்து முற்றத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் அது வந்தது. சின்னக்குச்சியைப் போன்று படுத்துக் கொண்டிருந்தது. மாலை நேரம் தானென நினைக்கிறேன். ஏனென்றால் தொலைவில் இருந்த புளியமரமும் கருப்பாய் இருந்தது அதனால் இருள் கவ்விக் கொள்ளவிருந்தது. இதென்ன குச்சியென பூட்ஸ் காலால் எத்தினேன்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று சீறி எழுந்தது அது. அது என்னுடைய ஈகோவை தனது சீற்றத்தால் சீண்டி விட்டது. நான் பூட்ஸ் போட்டிருந்தேன். தரையிலிருந்து ஒருஅடிக்கும்...இல்லையில்லை...இருக்காது ஒரு அரையடிக்கும் அதிகமான உயரத்தில் எம்பி உஸ் உஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. நான் நினைத்தேன் அததுவினுடைய சுவாசக்கோளாறென்று. ஆனாலும் தலையை அப்படியே நசுக்கினேன். ஹா ஹா ஹாவென சிரிக்கிறேன். அதனுடையத் தலையைத்தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றது புளியமரத்தினடியில். காரிருள் கவ்விக் கொண்டது. யாரும் பார்க்கவில்லையென நினைத்தேன். சரசுவாகிய "பல்"லி எழுந்துச் சென்றுவிட்டாள். நானும் சோலிமுடிந்தது என்று எதிர்வாசலில் கடை வைத்திருக்கும் கோகிலாவை புணரச் சென்றுவிட்டேன்.
கனேசனின் மனைவி ஓடிவந்தாள். முருகாம்மா, முருகாம்மா...என் பெயரை யாருமே சொல்லத் துணிந்ததில்லை அதனால் என்னுடைய அண்ணனின் பெயர் சொல்லித்தான் எங்கம்மாவை மட்டுமல்ல எங்கப்பாவையும் சேர்த்து அழைப்பார்கள். ஹா ஹா ஹா அந்த பயம் இருக்கட்டும். சரசிற்கு சாமிவந்து மயங்கியதில் '95ல் ஒம்மவனுக்கு போட்ட அம்மைக்கு அம்மா மாரியாத்தாவுக்கு கூழ் வெக்கல அதனால ஒன்னப் பாக்கவந்த எந்தலையை ஒம்மவன் நசுக்கிட்டான். அதனால் ஒம்மவனுக்கு மொட்டையடிச்சு எனக்குக் கூழ் ஊத்து. என்னாது? யாருக்கு மொட்டை? ஒம்மால...அந்த வெள்ளியில் மாரியம்மனுக்கு கூழ் மட்டுமல்ல, கஞ்சியும் கருவாடும் சேர்த்து கொட்டப்பட்டது.
அதன்பிறகு நாளாக நாளாக அதுவும் வளர்ந்து கொண்டேவந்தது. சில சமயத்தின் சிங்கமுகமும், சில சமயத்தில் சேவல் முகமும் சில சமயத்தில் இரண்டும் சேர்ந்து ஒன்றன் தலையினுள் இன்னொன்றுமாக மறைந்து என்னைப் பகிடி செய்யும். இதனாலேயே கோட்டூரில் இருந்த வீட்டைவிட்டு படூரோடு சென்றுவிட்டேன்.அங்கேயும் கல்லூரியிலிருந்து நடந்து வரும்போது "சொகுபஸ்" "சொகுபஸ்" என் அழைத்து அது என்னை வெறுப்பேற்றும்.சொகுபஸ்னா என்னன்னு தெரியுமா? அதை யேசுவாவைத் தான் கேக்கவேண்டும். நான் அவனை ஒரட்டுக்கையன் என்றழைத்தால் அவன் என்னை சொகுபஸ் என அழைப்பான். ஏன்னா, சின்ன வயசுல தந்தைபெரியார் "ரூட் பஸ்" செவப்பு, ஆரஞ்சு, பழுப்புல கோடு போட்டிருக்கும். எப்போதுமே லைனில் நிறுத்தமாட்டான். அதனால் அப்பவே புரச்சி செய்யனும்ன்ற ஆசையில் கருங்கல் எடுத்து இருக்கனன். நங்கென்று ஒடுக்கு போட்டுகிச்சு. நிறுத்தான்ல அப்புறமா? சட்டைய கொத்தா பிடிச்சு டேசன்ல போடறேன்னு சொன்னான். நா தூக்கி கும்பிட்டு பம்மினன். உட்டுட்டான். இதை சிரித்துக் கொண்டே பார்த்த யேசுவா "சிகப்புபஸ்"ஸை மருக்கி "சொகுபஸ்" ஆக்கிவிட்டான்.
இதனால் இனி கிரவுண்ட் ப்ளோர்ல ஸ்டே பண்ணக்கூடாதென்று முடிவு செய்து அதன்பிறகு திருவான்மியூரிலும் சரி வீட்டிலேயும் சரி இங்கேயும் சரி அப்பர் லெவல்லேயே தான் தூங்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது இருக்கும் வீடு தவிர்த்து.
ஒருவாரமாய் இடது காலை அசைக்கமுடியவில்லை. இப்போதிருக்கும் வீடு ஒரு "க்ரேன்னி ப்ளாட்". ஆனாலும் அது வந்து தொந்திரவு கொடுத்ததில்லை. போனமுறையில் வந்த பருவமழையின் போது நான்காம் வீட்டு "க்ராப்பர்"ல் அது வந்தது என்று ஃபிலிப் சனிக்கிழமை பார்ஸ்டூல் செய்து கொண்டே சொன்னான். எனக்கு ரொம்பப் பயமாய் இருந்தது. சரியென இரண்டுக்கும் மேற்பட்ட வலி நிவாரணியைப் போட்டுக் கொண்டு தூங்கிப்போனேன். திடீரென அன்று நான் சிரித்த மாதிரி ஹா ஹா ஹாவென சிரித்தது அது. அடடா...இங்கேயும் வந்துவிட்டதா அது. நானா? ஸ்டைல் ஆள் தான் போலவென நினைத்துக் கொண்டு சரி வந்ததுதான் வந்தாய் இங்கே வா என் தலைக்கருகில் வந்து எனது குரல் வலையைக்கடி என்று கூறினேன். மறுபடியும் பலமாய் சிரித்து, அவனெல்லாம் ஆஸ்திரேலியா போய் என்ன செய்யப் போறானென்று ஜெகன் குரலில் பேசியது. ஜெகனை அறவே பிடிக்காது எனக்கு. ஏனென்றால் அவனுக்கு ரஜினி பிடிக்கும், ரிசர்வேசன் பிடிக்காது. கருப்பைய்யாவை பிடிக்கும் என்னைப் பிடிக்காது. அவனைப்பொறுத்தவரையில் நான் ஜோசப்பில் படிப்பத்ற்கே தகுதியற்றவன். நான் எப்படி டேபிள் டென்னிஸ் விளையாடலாம்? நான் எப்படி கிரிகெட்டில் அவனை ரன் அவுட் செய்ய இயலும்? நான் எப்படி அவுஸ்திரேலியா போக முடியும்? ஹும்ம்...என்னவோ ...இப்படித்தான் அதுவும் அன்று திரும்பத் திரும்பச் சொல்லியது.
நாட்களுக்கேற்றார் போல் அதுவும் இப்போது இரண்டடியிலிர்ந்து ஆறேழடிக்கு வளர்ந்திருந்தது.
நீ எப்படி உள்ளே வந்தாய்? இடது காலை யாரோ கத்தியால் வெட்டி கல்லைக் கட்டி இழுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.
ஹா ஹா ஆறு மாதத்திற்கு முன்னர் நாலாம் வீட்டுக்கு "க்ராப்பர்"ல் வந்து மாட்டிக் கொண்டானே அவன் என் அக்காமகன். இங்கே ஜே சி யூ வில் படிக்க வந்திருந்தான். அவன் தான் நீ இங்கெ இருப்பதாகச் சொன்னான். அவன் யூஸ் பண்ண அதே சிஸ்டம் தான் நானும் யூஸ் பண்ணேன். கக்கூஸ்லயே உன் புடுக்கை போட்டிருப்பேன். காலில்லாம அவஸ்தை படற அதான் விட்டேன்.
அடப்பாவிகளா? நீங்களும் அவுஸ்திரேலிய இம்மிகிரேசன் ஓட்டைகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?...ம் இன்னைக்கு நீயா? நானா? ஸ்டைல் கொலை தானென்று நினைத்துக் கொண்டேன்.
பேசிக்கொண்டேயிர்ந்த அவன் என் கட்டிலின் கால்வழியாக ஏற முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தான். அந்த சிவப்பு சிடார்ன் வழுவழுப்பு பூச்சு எனக்கு அரணாக இருந்துகொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தது அது எனத் தெரியவில்லை, தொங்கிக்கொண்டிருந்த படுக்கைவிரிப்பை கடித்து ஒரு 360 அடித்தது. அடித்ததில் வால் எனது இடது காலில் விழுந்து பலமாய் வெட்டியது. அது இப்பொழுது கருப்பாயில்லை பழுப்பாய் இருந்தது. ஏன் நிறமாறி விட்டாய் என்றேன்?
இம்மிகிரேஷனுக்கு சுலபமாய் இருக்கும் மேலும் எனக்கும் வயதாகிறதல்லவா என்றது.
இப்போது கெஞ்ச ஆரம்பித்தேன். என்ன வுட்டுடு. எப்போவோ பண்ணதுக்கு இப்போ ஏன் டார்ச்சர் கொடுக்கற? ஏற்கனவே பைக் ஆக்ஸிடெண்டு, இப்போ "னீ" ரீகண்ட்ஸ்ட்ரக்க்ஷன்.இந்த வருசம் எனக்கு ரொம்ப மோசமா இருக்கு? நீ வேற இப்போ!
அது பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று எனது வார்டுரோபின் கண்ணாடிகதவில் துப்பி இதைப்பார் என்றது. பார்த்தேன்.
தண்டவாளத்தின் அடியில் சாலை வளைகிறது
திண்டிவனம் போல் இருக்கிறது
சாலையின் நடுவே தோலுறிக்கப்பட்ட ஒரு ஆண்
கையும்காலும் சேர்த்து விலங்கிடப்பட்டது
அப்பா என்னை ஒயர்கம்பியால் கட்டியது போல்
மறுபுறம் குட்டிச்சுவர்
ஒரு டிரக் அவன்மீது ஏற அவன் துடிக்கிறான்
குட்டிச்சுவற்றினடையில் ஒரு ஸ்னைப்பர்
செமி ஆட்டொமேட்டிக் என நினைக்கிறேன்
எனது வலது காலின் அருகில் ஒரு நாய்
ஓநாயின் வெறியைவிட அதிகம்
அதன் கண்களில்
எனக்கு புரியவில்லை. என்னவென திருப்பிக் கேட்டேன். அவன் யாரைப்போன்றிருக்கிறான் என என்னை திரும்பக் கேட்டது அது.
டேன் பிரவுனின் "சைலாஸ்" போல இருக்கிறான் என்றேன் நான்.
ஹா ஹா ஹா...இன்னுமொரு வாய்ப்பளிக்கிறேன் என்றது அது.
நான் யோசித்து, "நான் கடவுள்" பாலாவின் "தாண்டவன்" போலிருக்கிறான் என்றேன்.
மறுபடியும் பலமாய் சிரித்தது அது...சிரித்து...நிறுத்தி...உன்னைத் தோலுரித்துப் பார்த்தேன் நீ தான் அது என்றது அது!
மைக் ஒரு கிவி. அவனுக்கு போன் போட்டேன் என்னுடைய சித்ரவதையைக் கூறினேன். நீ அந்த போதை வஸ்துக்களில் இருந்து விடுபடவேண்டும் என்றான். இப்போது கால்வலி பரவாயில்லை. பாம்பென்றால் எனக்கு ரொம்பப் பயம்.